Published:Updated:

நீலகிரி: போன வருடம் கொரோனா; இந்த வருடம் தடுப்பூசி... மலர்களால் வடிவமைத்து விழிப்புணர்வு!

ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா
ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா

கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்தப் பூங்கா புல்வெளியில் `COVID 19 VACCINATE YOURSELF' என்ற வாசகத்தை மலர்களால் வடிவமைத்துள்ளனர்.

கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் 2,500 மலர்ச்செடிகளைக் கொண்டு சிறப்பு அலங்காரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா
ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா

ஆண்டுக்கு சுமார் 40 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் நீலகிரி மாவட்டம், தற்போது கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாகத் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகக் கோடை விழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு காணப்படுகிறது.

இந்த ஆண்டு கோடை விழா நடைபெறும் என்ற நம்பிக்கையில் பூங்காக்கள் அனைத்தும் புதுப்பொலிவு படுத்தப்பட்டதால் லட்சக்கணக்கான மலர்கள் பூத்துள்ளன.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா
ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா

கோடை விழாவின் மிக முக்கிய நிகழ்வாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நூற்றாண்டுகளைக் கடந்த மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.இந்தப் பூங்காவில் 300-க்கும் அதிகமான ராகங்களில் சுமார் 5,00,000 மலர்ச்செடிகள் பூத்துக் குலுங்குகின்றன.

இந்நிலையில, கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்தப் பூங்கா புல்வெளியில் `COVID 19 VACCINATE YOURSELF' என்ற வாசகத்தை மலர்களால் வடிவமைத்துள்ளனர். இந்தப் படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா
ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா

இந்த விழிப்புணர்வு குறித்துப் பேசிய பூங்கா அதிகாரிகள், ``இரண்டு ஆண்டுகளாகக் கோடை விழா நடைபெறவில்லை என்றாலும், பூங்கா பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போன ஆண்டு கொரோனா வைரஸின் உருவத்தை மலர்ச்செடிகளால் வடிமைத்தோம். மேலும், முன்கள பணியாளர்கள் மலர்களைக் கண்டு ரசிக்கும் வகையில், சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. இந்த ஆண்டு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்து 2,500 மலர்ச்செடிகளில் இதை வடிமைத்துள்ளோம்“ என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு