Published:Updated:

`400 ரகங்கள்; அமெரிக்கா, ஜெர்மனி பூக்கள்!’- 124 -வது மலர் கண்காட்சிக்குத் தயாராகும் ஊட்டி

Ooty botonical garden
Ooty botonical garden

ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து மலர் விதைகள் பெறப்பட்டு மலர் நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

சுற்றுலா சிறப்புவாய்ந்த கோடை வாசஸ்தலமான நீலகிரிக்கு ஆண்டுதோறும் வருகைதரும் சுமார் 40 லட்சம் சுற்றுலாப் பயணிகள் எழில் கொஞ்சும் இயற்கை அழகை கண்டு ரசித்துச் செல்கின்றனர்.

Ooty botonical garden
Ooty botonical garden

சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் தோட்டக்கலைத்துறை சார்பில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, கோத்தகிரி நேரு பூங்கா, காட்டேரி பூங்கா, தேயிலை பூங்கா ஆகியவற்றில் லட்சக்கணக்கான மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு கோடை சீசனில் வண்ண மலர்களால் நிறைந்து காணப்படும்.

 `12,000 லிட்டர் பஞ்சகவ்யம்; 50 டன் மண்புழு உரம்!'- ஊட்டி தோட்டக்கலைத் துறையின் புதிய முயற்சி

மேலும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கட்டுப்பாட்டில் ஊட்டி படகு இல்லம், பைக்காரா படகு இல்லம், தொட்டபெட்டா ஆகிய சுற்றுலாத்தலங்களும் புதுப்பொலிவு பெறும்.

Ooty botonical garden
Ooty botonical garden

கோடை விழா நடைபெறும் மே மாதம் முழுவதும் பல்வேறு வகையான கண்காட்சிகள், கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு விழாக்கோலம் பூண்டிருக்கும்.

இந்த நிலையில், நூற்றாண்டுகளைக் கடந்து சுற்றுலாப் பயணிகளின் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்துள்ள ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், வரும் மே மாதம் நடைபெறவுள்ள 124 -வது மலர் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கான மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணி நேற்று தொடங்கியது. இதை நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடங்கிவைத்தார்.

Ooty botonical garden
Ooty botonical garden

சிறப்பம்சமாக ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து மலர் விதைகள் பெறப்பட்டு மலர் நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 400 ரகங்களில் 5 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட உள்ளன. கோடை சீசனுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு