Published:Updated:

`பூத்துக்குலுங்கும் மலர்கள்... பூட்டியே இருக்கும் பூங்கா!’ -ரத்தாகிறது 124-வது ஊட்டி மலர் கண்காட்சி

ooty botanical garden
ooty botanical garden

கோடை விழாவின் மிக முக்கிய நிகழ்ச்சியான ஊட்டி மலர்க் கண்காட்சி, 15-ம் தேதி தொடங்கி 5 நாள்கள் நடப்பதாக இருந்தது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், 124-வது மலர்க் கண்காட்சி ரத்தாகிறது.

சர்வதேச சுற்றுலா சிறப்பு வாய்ந்த நீலகிரியில், மே மாதம் முழுவதும் கோடைவிழா களைகட்டும். காய்கறி கண்காட்சி முதல் வாசனை திரவிய கண்காட்சி வரை நடைபெற்று, கொளுத்தும் கோடை வெயிலிலிருந்து தப்பிக்கவந்த பயணிகளுக்கு விருந்து படைக்கும்.

ooty botanical garden
ooty botanical garden

வழக்கம் போலவே இந்த ஆண்டும் மலர்க் கண்காட்சிக்காக, கடந்த டிசம்பர் மாதம் முதல் மூன்று கட்டமாக மலர் நாற்று நடவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

பல்வேறு வகைகளில் 5 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு, பூங்கா ஊழியர்களால் பராமரிக்கப்பட்டது. தற்போது, இந்த மலர்ச் செடிகளில் வண்ண வண்ண மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.

ooty botanical garden
ooty botanical garden

மேலும், 35 ஆயிரம் மலர்த் தொட்டிகளில் லில்லியம், டேலியா, இன்கா மேரிகோல்டு, பிரஞ்ச் மேரிகோல்டு, பேன்சி, பெட்டூனியா, சால்வியா உட்பட பல்வேறு வகையான மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. தற்போது தொட்டிகளில் உள்ள மலர்ச் செடிகளும் பூத்துக்குலுங்குகின்றன.

பல மாதங்களாக பூங்கா ஊழியர்களின் உழைப்பால் இன்றைக்கு பூத்துக்குலுங்கும் வண்ண மலர்கள் அனைத்தும் பூங்காவில் உள்ள காட்சி மாடத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளன. மேலும், 5 ஆயிரம் மலர்த் தொட்டிகளைக் கொண்டு கொரோனா வைரஸ் விழிப்புணர்வு அலங்காரமும் செய்யப்பட்டுள்ளது.

ooty botanical garden
ooty botanical garden

ஆனால், கடந்த இரண்டு மாதங்களாக பூங்கா மூடப்பட்டுள்ளது. இந்த அழகை யாரும் காண்டு ரசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கு மாற்று யோசனையாக, நேரில் வந்து பார்க்க முடியாமல் ஏங்கும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள், இந்த அழகைக் கண்டு ரசிக்கும் வகையில் ஒரு காணொளி தயாரிக்கப்பட்டுவருகிறது. மேலும், புகைப்படங்களைக் கொண்ட ஆல்பமும் தயாராகிவருகிறது.

ooty botanical garden
ooty botanical garden

இவற்றை பொதுமக்கள் பார்வைக்குக் கொண்டுசெல்ல உள்ளது. இதற்கான பணிகள் தற்போது நடந்துவரும் நிலையில், ஓரிரு நாள்களில் இந்த வீடியோக்கள் மற்றும் புகைப்பட ஆல்பம் அரசு அனுமதியுடன் வெளியிடப்படும் என பூங்கா நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் நம்மிடம் பேசுகையில், "ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட இந்த தாவரவியல் பூங்காவில், கடந்த 123 ஆண்டுகளாக மலர்க் கண்காட்சி நடத்தப்பட்டுவருகிறது. 5 நாள்கள் நடத்தப்படும் இந்த மலர்க் கண்காட்சியைக் காண வெளியூர், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து பல லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகைதந்து கண்டு ரசித்துச்செல்வர். இதன் மூலம் அரசுக்கும் வருவாய் கிடைக்கும். அதேபோல், இங்குள்ள சிறு வியாபாரிகளும் பயன்பெறுவர். சுற்றுலாப் பயணிகளும் இதமான காலநிலையில், பூத்துள்ள வண்ண மலர்களைக் கண்டு ரசித்து மகிழ்வார்கள்.

ooty botanical garden
ooty botanical garden

கடந்த 2000-ம் ஆண்டு, தேயிலைத் தொழிலாளர்கள் போராட்டத்தால், ஊட்டியில் மலர்க் கண்காட்சி ரத்து செய்யப்பட்டது. அப்போதும் சுற்றுலாப் பயணிகள் மலர் அலங்காரங்களைக் கண்டு ரசித்துச் சென்றனர். கொரோனா பாதிப்பு காரணமாக பூங்கா வரலாற்றில் முழுமையாக ரத்து செய்யப்பட்டது இதுவே முதல்முறை" என வேதனை தெரிவிக்கின்றார்.

அடுத்த கட்டுரைக்கு