Published:Updated:

`வறண்ட வனங்களுக்கு எதிர்பாரா பெருங்கொடை!' - ஊட்டியை நனைத்த முதல் கோடை மழை

ooty rain
ooty rain

உறைபனிக் காலத்திற்குப் பிந்தைய முதல் கோடை மழை ஊட்டியில் இன்று தொடங்கியுள்ளது. மழை நீடித்தால் காட்டுத் தீ அபாயம் குறைய வாய்ப்புள்ளது.

நீலகிரி மழை வரலாற்றில், 2019-ம் ஆண்டு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. கடந்த ஆண்டின் 85 மழை நாள்களில் 1,539 மில்லி மீட்டர் மழை கொட்டித்தீர்த்தது.

ஊட்டி மழை
ஊட்டி மழை

குறிப்பாக, ஊட்டி அவலாஞ்சி பகுதியில் பெய்த பெருமழை, கடந்த நூறாண்டுகள் கண்டிறாதது என ஆய்வாளர்களே அதிசயித்துப்போயினர். இந்த மழை பாதிப்புகளைச் சீரமைக்க சுமார் 200 கோடி ரூபாய் தேவைப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.

கடந்த ஆண்டின் அதிக மழைப்பொழிவு காரணமாக, இந்த ஆண்டு வழக்கமாகத் தொடங்கவேண்டிய உறைபனியும் தாமதமானது. அதேசமயம், உறை,பனியின் தாக்கமும் குறைந்து,

ஊட்டி மழை
ஊட்டி மழை

தற்போது உறைபனிக்காலம் முடிவடைந்த நிலையில், இந்த ஆண்டிற்கான முதல் கோடை மழை ஊட்டியில் இன்று பெய்துள்ளது. ஊட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், மாலை தொடங்கிய பெருமழை, தற்போது வரை தொடர்ந்து பெய்து வருகிறது.

இந்த மழை குறித்து ஊட்டியைச் சேர்ந்த மாணிக்கம், ``இதுவே இந்தக் கோடையின் முதல் மழை. வறட்சியின் பிடியில் வனங்கள் இருப்பதால், காட்டுத்தீ அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஊட்டி மழை
ஊட்டி மழை

அதேசமயம், வன விலங்குகளும் தண்ணீர் தேடி இடம் பெயர்ந்து கொண்டிருக்கின்றன. இந்த‌ நிலையில், எதிர்பாராத இந்த மழை வனங்களுக்கு பெருங்கொடையாக இருக்கும்" என்றார் மகிழ்ச்சியுடன்.

அடுத்த கட்டுரைக்கு