Published:Updated:

`இனி ஊட்டி மலை ரயில் பாதியில் நிற்காது!'- புதுப்பொலிவுடன் தயாரானது நீராவி இன்ஜின்!

மலை ரயில்
மலை ரயில்

ஆசியாவிலேயே பல்சக்கர தண்டவாளத்தில் இயக்கப்படும் இந்த மலை ரயிலுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு மலை ரயில் இயக்கப்பட்டுவருகிறது. சுமார் 112 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டது மலை ரயில்.

மலை ரயில்
மலை ரயில்

சுவிட்சர்லாந்திலிருந்து நிலக்கரி நீராவி இன்ஜின் இறக்குமதி செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டது. சில நேரங்களில், மலை ரயில் இன்ஜின் பழுதடைந்து பாதியிலேயே நிற்பதால் சுற்றுலாப் பயணிகள் சிரமத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

மலை ரயில்
மலை ரயில்

அப்படி பழுதடைந்த ரயில் இன்ஜின் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் சரி செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது, திருச்சியிலுள்ள பொன்மலை ரயில்வே பணிமனையில், 8.5 கோடி ரூபாய் செலவில் நிலக்கரி நீராவி இன்ஜினும், 9.8 கோடி ரூபாய் செலவில் பர்னஸ் ஆயில் நீராவி இன்ஜினும் தயாரித்து ஊட்டி மலை ரயில் பயன்பாட்டுக்கு அனுப்பிவைத்தனர்.

ரூபாய் 18 கோடியில் உருவாக்கப்பட்ட நீராவி இன்ஜின் மலை ரயிலை ஊட்டிக்கு அனுப்பிவைக்கும் விழா நடைபெற்றது. திருச்சி பொன்மலை ரயில்வே தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் கொடியசைத்துத் தொடங்கிவைத்து பத்திரிகையாளர்களிடம் பேசுகையில்‌. ``இனி ஊட்டியில் மலை ரயில்கள் பாதியிலேயே நிற்காது. சுற்றுலாப்பயணிகள் சிரமப்படத் தேவையில்லை.

’ஆண்டிப்பட்டி – தேனி’ ரயில் பாதையில் சோதனை ஓட்டம் வெற்றி; மகிழ்ச்சியில் தேனி மக்கள்!
அதிகாரிகள்
அதிகாரிகள்

மலை ரயில் இன்ஜினுக்கான 3,600 பாகங்களில் 1,400 பாகங்கள் பொன்மலை ரயில்வே பணிமனையிலேயே தயாரிக்கப்பட்டவை. எஞ்சிய பாகங்கள், கோவை உட்பட நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து வாங்கி வரப்பட்டு, புதிய இன்ஜின்கள் உருவாக்கப்பட்டன. இந்த இன்ஜின்கள் முழுக்க முழுக்க இந்திய தயாரிப்பு என்பதோடு மலை ஏறுவதற்காகவே சிறப்பான திறன் கொண்டவையாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. மொத்தம், 4,200 லிட்டர் கொள்ளவுகொண்ட வாட்டர் டேங்க், 3.5 டன் நிலக்கரி கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மலை ரயில்
மலை ரயில்

மணிக்கு 10 முதல் 11 கி.மீ வேகத்தில் செல்லும் திறன்கொண்டது. சில நாள்களுக்கு முன்பு வெள்ளோட்டம் பார்க்கப்பட்டு, இயக்குவதற்கு தயார் நிலையிலுள்ள இந்தப் புதிதாகத் தயாரிக்கப்பட்ட இரண்டு ரயில் இன்ஜின்களும், மேட்டுப்பாளையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, மலை ரயிலுடன் இணைத்து பயணத்தைத் தொடங்கவிருக்கின்றன" எனத் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு