Published:Updated:

நகராட்சிக் கடை வாடகை விவகாரம்: கடைகளை அடைக்க மறுத்து இரவில் போராட்டம் நடத்திய வியாபாரிகள்!

உள்ளிருப்புப் போராட்டம்

கடந்த 2016-ம் ஆண்டு முதல் நகராட்சிக்குச் செலுத்தவேண்டிய வாடகைத் தொகையை பல வணிகர்கள் செலுத்ததால் வாடகை நிலுவைத் தொகை 51 கோடி ரூபாயாக உயர்ந்தது. இதனால் நிதி நெருக்கடி ஏற்பட்டிருப்பதாக நகராட்சி நிர்வாகம் அறிவித்தது.

நகராட்சிக் கடை வாடகை விவகாரம்: கடைகளை அடைக்க மறுத்து இரவில் போராட்டம் நடத்திய வியாபாரிகள்!

கடந்த 2016-ம் ஆண்டு முதல் நகராட்சிக்குச் செலுத்தவேண்டிய வாடகைத் தொகையை பல வணிகர்கள் செலுத்ததால் வாடகை நிலுவைத் தொகை 51 கோடி ரூபாயாக உயர்ந்தது. இதனால் நிதி நெருக்கடி ஏற்பட்டிருப்பதாக நகராட்சி நிர்வாகம் அறிவித்தது.

Published:Updated:
உள்ளிருப்புப் போராட்டம்

நீலகிரி மாவட்டம், உதகமண்டலம் நகராட்சிக்குச் சொந்தமாக ஊட்டி நகரில் 1,500-க்கும் அதிகமான கடைகள் உள்ளன. வணிகர்கள் நகராட்சிக்கு வாடகை செலுத்தி கடைகளை நடத்திவருகின்றனர். இந்த நிலையில், 2016-ம் ஆண்டு வாடகை உயர்த்தப்பட்டது. இதை எதிர்த்து வணிகர்கள் வழக்கு தொடர்ந்தனர். மண்டல அளவிலான கண்காணிப்புக்குழுவை ஏற்படுத்தி வாடகை மறு நிர்ணயம் செய்ய வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன் அடிப்படையில் குழு அமைக்கப்பட்டு வாடகை மறு நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த 2016-ம் ஆண்டு முதல் நகராட்சிக்குச் செலுத்தவேண்டிய வாடகைத் தொகையைப் பல வணிகர்கள் செலுத்ததால் வாடகை நிலுவைத் தொகை 51 கோடி ரூபாயாக உயர்ந்தது. இதனால் நிதி நெருக்கடி ஏற்பட்டிருப்பதாக நகராட்சி நிர்வாகம் அறிவித்தது.

உள்ளிருப்புப் போராட்டம்
உள்ளிருப்புப் போராட்டம்

வாடகை நிலுவைத் தொகையை செலுத்தாத 700-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதம் நகராட்சி நிர்வாகம் சீல் வைத்தது. இதைத் தொடர்ந்து சுமார் ரூ.30 கோடி வாடகையை நகராட்சி வசூல் செய்தது. நிலுவையிலுள்ள 20 கோடி ரூபாய் வாடகையை வசூலிக்க நகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்டிவருகிறது. சில கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுவருகிறது. இதை எதிர்த்து வணிகர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வாடகை நிலுவை விவகாரம் குறித்துப் பேசிய வணிகர்கள், "வாடகை பாக்கி வைத்திருப்பவர்களின் கடைகளுக்கு முன்னறிவிப்பின்றி நகராட்சி நிர்வாகம் சீல் வைத்துவருகிறது. கால அவகாசம் வழங்காமல் நிலுவைத் தொகையை உடனடியாகக் கட்டச் சொல்கிறார்கள். மூன்று நாள்களில் 80 கடைகளுக்கும் மேல் சீல் வைத்துள்ளனர். ஆயுதபூஜை, தீபாவளி போன்ற பண்டிகைகள் வரவிருக்கும் நிலையில் சீல் வைப்பதால் கடும் பாதிப்புக்குள்ளாகிவருகிறோம். அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இரவு நீண்ட நேரம் கடைகளை மூடாமல் இங்கேயே உணவு சமைத்து, உண்டு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டோம். கால அவகாசம் தராத பட்சத்தில் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்" என்றனர்.

உள்ளிருப்புப் போராட்டம்
உள்ளிருப்புப் போராட்டம்

இது குறித்து நகராட்சி நிர்வாகம், "வாடகை பாக்கி இருப்பதால் நகராட்சியின் நிதி ஆதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மின்வாரியத்துக்குச் செலுத்தவேண்டிய தொகை, நகராட்சிப் பணியாளர்களுக்கு வழங்கவேண்டிய சேமநல நிதி, ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு வழங்கவேண்டிய தொகை உள்ளிட்டவற்றைத் தர முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. மேலும், நகராட்சிப் பகுதிகளில் வளர்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலையும் இருக்கிறது. ஆறு மாதங்களுக்கு மேல் அவகாசம் அளித்தும் வசூல் செய்ய முடியவில்லை. வேறு வழியின்றி சீல் வைக்கவேண்டிய நிலை ஏற்பட்டது" என்றனர்.