Published:Updated:

நீலகிரி ரெட் அலர்ட்: கொட்டித் தீர்க்கும் கனமழை... தொடர்ந்தால் மரங்கள் விழும் ஆபத்து?!

நீலகிரி மழை

தொடர்ந்து மழை நீடிக்கும் பட்சத்தில் மரங்கள் விழுவதும், மண்சரிவு ஏற்படும் அபாயமும் இருப்பதால் மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.

நீலகிரி ரெட் அலர்ட்: கொட்டித் தீர்க்கும் கனமழை... தொடர்ந்தால் மரங்கள் விழும் ஆபத்து?!

தொடர்ந்து மழை நீடிக்கும் பட்சத்தில் மரங்கள் விழுவதும், மண்சரிவு ஏற்படும் அபாயமும் இருப்பதால் மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.

Published:Updated:
நீலகிரி மழை

நீலகிரியில் தென்மேற்குப் பருவமழை கடந்த மாதம் அதி தீவிரமடைந்தது. இடைவிடாமல் பெய்த பெருமழையால் மாவட்டத்தின் பெரும்பாலான அணைகள் நிரம்பின. ஆறுகளிலும் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில், வளிமண்டல சுழற்சி காரணமாக நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்துவருகிறது.

மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. நேற்று மாலை முதல் மீண்டும் மழை தீவிரமடைந்து. இதனால், ரெட் அலர்ட் மழை எச்சரிக்கை விடப்பட்டது. இரண்டாவது நாளாக இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. குந்தா, கூடலூர் பகுதிகளில் அதிக மழைப்பொழிவு இருக்கலாம் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது. தொடர்ந்து மழை நீடிக்கும் பட்சத்தில் மரங்கள் விழுவதும், மண்சரிவு ஏற்படும் அபாயமும் இருப்பதால் மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.

நீலகிரி மழை
நீலகிரி மழை

இதனால், மழைப் பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுவருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட நிர்வாகம், "அடுத்த 24 மணி நேரத்துக்கு மிக கனமழை இருக்கும் என எச்சரிக்கை அறிவிப்பு வந்திருக்கிறது. மழையை எதிர்கொள்ள அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் உட்பட 42 மண்டலக்குழுக்கள் மீட்புப்பணியில் தயாராக இருக்கின்றன. இது தவிர தேசியப் பேரிடர் மீட்புக்குழுவினரும் களத்தில் இருக்கிறார்கள். மீட்பு முகாம்களும் தயார்நிலையில் இருக்கின்றன. மக்கள் பாதுகாப்பாக இருக்கவும். பயப்பட வேண்டாம்" எனத் தெரிவித்துள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!