Published:Updated:

தேனி: `சுடுகாட்டில் இருப்பதும் நல்லதுதான்!' - ஓ.பி.எஸ் சொன்ன விளக்கம்

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்

கடந்த இரண்டு நாள்களாகப் பெய்துவரும் கனமழையில், சேதமடைந்த பகுதிகளை, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று பார்வையிட்டார்.

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துவரும் சூழலில், தேனி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாகப் பெய்துவரும் கனமழையால், பல்வேறு இடங்களில், வீடுகள், பள்ளிக்கட்டிடங்கள் சேதமடைந்தன. மின் கம்பங்கள் சாய்ந்து, குரங்கணி, கொட்டக்குடி பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பல நூறு ஏக்கர் வாழை மரங்கள், வேரோடு சாய்ந்ததால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

கொரோனா: ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவுக்கு பாசிட்டிவ்! - மனைவிக்கும் தொற்று உறுதி
கள்ளர் பள்ளி அருகே மக்களிடம் பேசும் ஓ.பி.எஸ்
கள்ளர் பள்ளி அருகே மக்களிடம் பேசும் ஓ.பி.எஸ்

இந்நிலையில், தனது தொகுதிக்கு உட்பட்ட சின்னமனூர் ஒன்றியம் பொட்டிபுரம், ராமகிருஷ்ணாபுரம், புதுக்கோட்டை, முத்தையன் செட்டிபட்டி, வெம்பக்கோட்டை ஆகிய இடங்களில் சேமடைந்த வீடுகள், கட்டடங்களை பார்வையிட்டார் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம். உடன், அவர் மகனும், தேனி தொகுதி எம்.பி’யுமான ரவீந்திரநாத்குமார் மற்றும் அரசு அதிகாரிகளும் இருந்தனர்.

முத்தையன் செட்டிபட்டியில் உள்ள கள்ளர் பள்ளி சுற்றுச்சுவர் சேதமடைந்த இடத்தில் பார்வையிட்ட ஓ.பி.எஸ், பள்ளி ஆசிரியர்கள், அப்பகுதி மக்களிடம் பேசினார். அப்போது, ``பெண்கள் விடுதி சுடுகாட்டின் அருகே கட்டப்பட்டிருப்பதால், பெண் குழந்தைகள் இரவு நேரங்களில் பயப்படுகின்றனர். மாலை 5 மணிக்கு மேல் அப்பகுதிக்கு யாரும் செல்வதில்லை. விடுதியை, வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். பள்ளி அருகே இடம் இருக்கிறது. இங்கு கூட விடுதியை மாற்றினால் நன்றாக இருக்கும்” எனக் கூறினர்.

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்
மதுரை: `பசுமாட்டைப் பிரிந்து தவித்த காளை!' - சொந்த செலவில் கோயிலுக்கு வழங்கிய ஓ.பி.எஸ் மகன்

அதைக் கேட்டுக்கொண்ட ஓ.பி.எஸ், நடவடிக்கை எடுப்பதாகக் கூறிவிட்டு, ``சுடுகாட்டில் இருப்பது நல்லதுதான். எந்தப் பேயும் அண்டாது!” என்றார் சட்டென. அதைக் கேட்டு அருகே இருந்த அனைவரும் சிரிக்க, கோரிக்கை வைத்தவர்கள் என்னவோ அமைதியாகினர்.

மாணவிகளின் விடுதியை சுடுகாட்டின் அருகே கட்டியது பற்றி, ஓ.பி.எஸ் இப்படியா விமர்சிப்பார்? என அப்பகுதி மக்கள், முணுமுணுத்தவாறே நகர்ந்து சென்றனர்.

அடுத்த கட்டுரைக்கு