Published:Updated:

நீலகிரி: 130 கி.மீ தூரமும் பின் தொடர்ந்த போலீஸ் பாதுகாப்பு - ஊட்டிக்கு வந்தது ஆக்சிஜன் டேங்கர்!

Oxygen tanker
Oxygen tanker

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இருந்து 7 டன் ஆக்சிஜனை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் டேங்கர் லாரி மூலம் ஊட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர்.

கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்த நீலகிரியில் இரண்டாம் அலை தனது கோர முகத்தைக் காட்டத் தொடங்கியுள்ளது. மக்கள் அடர்த்தி குறைவாக உள்ள மலைக் கிராமங்களில்கூட தொற்று காட்டுத் தீயாய் பரவி வருகிறது. ஒவ்வொரு நாளும் 300-க்கும் அதிகமானோர் புதிதாகத் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். மருத்துவமனைகளும் நிரம்பி வழிகின்றன.

Oxygen tanker
Oxygen tanker

தொற்றுப் பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதால் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இருப்பை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இருந்து 7 டன் ஆக்சிஜன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் டேங்கர் லாரி மூலம் ஊட்டி அரசு மருத்துவ மனைக்குக் கொண்டு வரப்பட்டது.

ஆக்சிஜன் இருப்பு குறித்து நம்மிடம் பேசிய சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர், ``நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர் மற்றும் கூடலூர் ஆகிய அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதி படுக்கைகள் உள்ளன. இதற்கு தேவையான ஆக்சிஜன் வெளி மாவட்டங்களில் இருந்தே கொண்டு வரப்படுகிறது. தற்போது ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் வளாகத்தில் இருந்து கொண்டு வரப்பட்டிருக்கிறது.

Oxygen tanker
Oxygen tanker

ஹைவே போலீஸார் பாதுகாப்புடன் ஊட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் தற்போது போதுமான அளவு ஆக்சிஜன் வசதி உள்ளதால், நோயாளிகளுக்கு எவ்வித தடையும் இன்றி ஆக்சிஜன் வழங்கப்படுகிறது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு