Published:Updated:

`பாலாற்றில் குறுங்காடு திட்டத்துக்குத் தடை ஏன்?’ - இளைஞரின் புகாருக்கு வேலூர் ஆட்சியர் விளக்கம்

பாலாற்றில் வளர்க்கப்படும் மரக்கன்றுகள்

பாலாற்றுப் பெருவெள்ளம் ஏற்படுத்திய துயரமே இன்னும் ஓயவில்லை. அதற்குள், பாலாறு தொடர்பான புதிய பிரச்னை, வேலூர் மாவட்டத்தில் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.

`பாலாற்றில் குறுங்காடு திட்டத்துக்குத் தடை ஏன்?’ - இளைஞரின் புகாருக்கு வேலூர் ஆட்சியர் விளக்கம்

பாலாற்றுப் பெருவெள்ளம் ஏற்படுத்திய துயரமே இன்னும் ஓயவில்லை. அதற்குள், பாலாறு தொடர்பான புதிய பிரச்னை, வேலூர் மாவட்டத்தில் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.

Published:Updated:
பாலாற்றில் வளர்க்கப்படும் மரக்கன்றுகள்

நவம்பர் 29-ம் தேதி காலை 10:30 மணி, வழக்கம்போல் சென்னை தலைமைச் செயலகம் பரபரப்பாகக் காணப்பட்டது. `தலைமைச் செயலர் இறையன்புவை நேரில் பார்த்து, வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மீது புகாரளிக்க வேண்டும்’ என்று இளைஞர் ஒருவர் அடம்பிடித்து நின்றிருந்தார். தலைமைச் செயலக அதிகாரிகள், அவரை அழைத்து விசாரித்தனர்.

``என் பெயர் ஸ்ரீகாந்த். நானோர் இயற்கை ஆர்வலர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியிலிருந்து மாதனூர் செல்லும் வழியிலுள்ள பாலாற்றங்கரையோரம் அமைந்திருக்கும் உள்ளி கிராமத்திலிருந்து வருகிறேன். எங்கள் ஊரின் பாலாற்றில் இருந்த குறுங்காடு, கடந்த 30 ஆண்டுகளில் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கி மணல் சுரண்டும் இடமாக மாறியது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குறுங்காடு இடத்தை மீட்பதற்காகப் போராடிய என்னை, அப்போதைய வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் நேரில் அழைத்துப் பாராட்டினார்.

ஸ்ரீகாந்த்
ஸ்ரீகாந்த்

இதையடுத்து, 25 ஏக்கர் பரப்பளவிலான பாலாறுப் படுகையில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க 13 லட்சம் ரூபாயை ஒதுக்கியதுடன், நூறு நாள் திட்டப் பணியாளர்கள் 25 பேரையும் மரம் வளர்ப்புப் பணியில் ஈடுபடச் செய்தார் ஆட்சியர் சண்முகசுந்தரம். குறுங்காடு திட்டப் பராமரிப்பாளராகவும் என்னைத்தான் நியமனம் செய்திருந்தார். நாவல், அரசன், புங்கன், ஆலம், வேம்பு, நீர் மருது, இலுப்பை, அத்தி எனப் பாரம்பர்ய மரக்கன்றுகளுடன் பூக்கள், பழ வகைகள் என சுமார் 7,000 மரக்கன்றுகள் இங்கு நட்டு வளர்க்கப்படுகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில், தற்போதைய மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் குறுங்காடு திட்டத்தை முடக்கச் செய்து, நன்றாக வளர்ந்துவிட்ட மரக்கன்றுகளை அகற்றவும் உத்தரவிட்டிருக்கிறார். ஆட்சியரின் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த வேண்டும்’’ என்றார் ஸ்ரீகாந்த். பின்னர், அவரிடமிருந்து மனுவைப் பெற்றுக்கொண்ட அதிகாரிகள், தலைமைச் செயலரிடம் கட்டாயம் கொடுப்பதாகக் கூறி அனுப்பிவைத்தனர். இதே புகாருடன் நம்மிடமும் வந்தார் ஸ்ரீகாந்த். இந்த விவகாரத்தில், பின்னணியை அறிய `விகடன் டீம்‘ 30-ம் தேதி உள்ளி குறுங்காடுப் பகுதிக்குச் சென்று பார்வையிட்டது.

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலம்
ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலம்

``மரக்கன்றுகள், ஆற்றங்கரையோரம் நடப்படவில்லை. குறுங்காடு திட்டம் முழுமையாகவே நீர்ச் செல்லும் தடமான பாலாற்றுப் படுகையினுள்தான் இருக்கிறது. சமீபத்திய வெள்ளப்பெருக்கால், குறுங்காட்டை ஒட்டியிருக்கும் உள்ளி - மாதனூர் செல்லும் தரைப்பாலம் உடைந்திருக்கிறது. மரக்கன்றுகளை நடுவதற்காக, பாலாற்றில் 25 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தை மேடாக்கியதால்தான், தரைப்பாலம் உடைந்து, ஊருக்குள் தண்ணீர் புகுந்திருக்கிறது” என்று அப்பகுதியைச் சேர்ந்த சிலர் நம்மிடம் தெரிவித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் பேசிய அந்த நபர்கள், ‘‘உடைப்பு ஏற்பட்ட தரைப்பாலத்தை மாவட்ட ஆட்சியர் பார்வையிட வந்தபோது, நாங்கள்தான் மரக்கன்றுகளை அகற்றிக் கொடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தோம். ஆட்சியரும் முழுமையாக ஆய்வு செய்த பின்னரே நீர்வழித் தடத்திலிருக்கும் குறுங்காடு திட்ட மரக்கன்றுகளை அகற்ற உத்தரவிட்டார். இளைஞர் ஸ்ரீகாந்த்தையும் அழைத்து அறிவுறுத்தினார். ஆனால், முன்னாள் மாவட்ட ஆட்சியரின் பெயரைப் பயன்படுத்தி ஸ்ரீகாந்த் ஊர்மக்களை மிரட்டுகிறார். பாலாற்றில் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு விடக் கூடாது என்கிறார். சொந்த இடம்போல உரிமை கோருகிறார். மரங்களை எங்கு வேண்டுமானாலும் வளர்த்துக்கொள்ளலாம். ஆற்றில் வளர்த்தால், தண்ணீர் ஊருக்குள்தானே வரும்?’’ என்றனர்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன்
வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன்

இது குறித்து குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் தனஞ்செயன் கூறுகையில், ``பாலாற்றில் ஏழாயிரம் மரக்கன்றுகளை நடுவதற்கு, எந்த எண்ணத்தில் அனுமதித்தனர் என்றே தெரியவில்லை. வெள்ள வேகத்தை, மண் திட்டு கட்டுப்படுத்தியதால்தான் அங்கிருக்கும் தரைப்பாலம் உடைந்தது. பல ஏரிகளும் உடையும் நிலையில் இருப்பதால், மணல் மூட்டைகளை அடுக்கி கரைகளை பலப்படுத்திவருகிறோம். அதற்காக, மரக்கன்றுகள் நடப்பட்டிருக்கும் உள்ளி பகுதியில் மணல் அள்ளினால், அந்த இளைஞர் அதிகாரிகளையே மிரட்டுகிறார்’’ என்றார்.

மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியனிடம் பேசினோம். ``கடந்த காலங்களில், மாவட்ட நிர்வாகத்தையே ஏமாற்றி... மரம் நடுகிறேன்‘ என்ற பெயரில் அந்த நபர் ஆற்றையே ஆக்கிரமித்து வைத்திருக்கிறார். இதற்கு முன்பு அங்கு குறுங்காடு இருந்ததற்கான ஆவணங்கள் எதுவுமில்லை. தரைப்பாலம் உடைந்து பல ஊர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இவ்வளவு சேதத்துக்கும் யார் பொறுப்பேற்பது? தனிநபரின் ஆதாயத்துக்காக ஊரே அழியட்டும் என்று விட்டுவிட முடியாது. `ஆற்றில் மரம் நட்டுப் பராமரிக்க தனக்கு உரிமை இருக்கிறது’ என்றால் அந்த நபர் நீதிமன்றம் செல்லட்டும். என்னைப் பொறுத்தவரை ஆற்றுக்குள் மரம் நடக் கூடாது. ஆற்றுக்குள் குறுங்காட்டை உருவாக்கினால் வெள்ளநீர் எப்படிச் செல்லும்? நீர்வழித்தடத்தை ஆக்கிரமித்தால், யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன். சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்படும் இது போன்ற நபர்களை யாரும் ஊக்கப்படுத்த வேண்டாம்’’ என்றார் கண்டிப்போடு!

ஸ்ரீகாந்த்
ஸ்ரீகாந்த்

குற்றச்சாட்டு குறித்து இளைஞர் ஸ்ரீகாந்திடமே விளக்கம் கேட்டோம். ``இந்தியக் குடிமகனாக, பொதுச் சொத்துகளைப் பாதுகாக்கும் உரிமை எனக்கும் இருக்கிறது. பாலாற்று நிலத்தை எனக்குப் பட்டா போட்டுக் கொடுக்கச் சொல்லவில்லை. மற்றவர்களைப்போல ஆற்றங்கரையை ஆக்கிரமித்து விவசாயமும் செய்யவில்லை. நான் முயற்சி எடுத்த பின்னரே இந்தப் பகுதியில் மணல் கொள்ளை தடுக்கப்பட்டது. குறுங்காட்டை காப்பாற்றுவதற்காகத் தொடர்ந்து போராடுவேன்’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism