Published:Updated:

குற்றங்களைத் தடுப்பதற்கான `Panic Button' தொழில்நுட்பம் - சென்னைப் போக்குவரத்துக் கழக முன்னெடுப்பு!

சென்னை மாநகர பேருந்து

பெண்களின் பாதுகாப்புக்கு மட்டுமின்றி, பேருந்து நடத்துநர்கள் மற்றும் பயணிகளுக்கு இடையே ஏற்படும் மோதலில் தவறு செய்பவர்களைக் கண்டறியவும் இந்தக் கருவி உதவும்.

குற்றங்களைத் தடுப்பதற்கான `Panic Button' தொழில்நுட்பம் - சென்னைப் போக்குவரத்துக் கழக முன்னெடுப்பு!

பெண்களின் பாதுகாப்புக்கு மட்டுமின்றி, பேருந்து நடத்துநர்கள் மற்றும் பயணிகளுக்கு இடையே ஏற்படும் மோதலில் தவறு செய்பவர்களைக் கண்டறியவும் இந்தக் கருவி உதவும்.

Published:Updated:
சென்னை மாநகர பேருந்து

பெண் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக 500 பேருந்துகளில் அவசரக்கால பேனிக் (Panic) பட்டன்கள் பொருத்தும் பணியை சென்னை பெருநகர போக்குவரத்துக் கழகம் (எம்டிசி) துவக்கியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தத் திட்டம் நிர்பயா கார்பஸில் (Nirbhaya Corpus) இருந்து நிதியைப் பயன்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கல்லூரிகள் மற்றும் பெண்களின் போக்குவரத்து அதிகம் உள்ள பகுதிகளை இணைக்கும் வழித்தடங்களில் செயல்படும் பேருந்துகளில் கேமராவுடன் கூடிய பாதுகாப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இதில் 25 (அண்ணா சதுக்கம் - பூந்தமல்லி), 76V (கோயம்பேடு - சிறுசேரி) மற்றும் 70V (பெருங்களத்தூர் - கோயம்பேடு) போன்ற வழித்தடங்கள் அடங்கும். விரைவில், இந்தத் திட்டம் நகரின் அனைத்து பேருந்துகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Panic Button | பேனிக் பட்டன்
Panic Button | பேனிக் பட்டன்
Twitter

பேனிக் பட்டனை அழுத்தியதும், பல்லவன் சாலையில் உள்ள MTC தலைமையகத்தில் உள்ள கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திற்கு எச்சரிக்கை அனுப்பப்பட்டு சிசிடிவி கேமராக்கள் வழியாக நிகழ்வை அறிந்துகொள்கின்றனர் மையத்தில் பணியமர்த்தப்பட்ட குழுவினர். பின் நேரலை காணொலி காட்சிகளைக் கண்காணித்து, காவல்துறை உதவி எண்ணுக்கு (100) எச்சரிக்கையை அனுப்புவார்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இறுதிக் கட்டமாகத் தகவலை பெரும் சுற்று வட்டார காவல்துறை ரோந்து வாகனம் எந்த நேரத்திலும் அந்த இடத்தை அடைந்து களத்தில் ஆய்வு செய்து குற்றத்தைத் தடுக்கும்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது இந்தத் தொழில்நுட்பம்.

பெண்களின் பாதுகாப்புக்கு மட்டுமின்றி, பேருந்து நடத்துநர்கள் மற்றும் பயணிகளுக்கு இடையே ஏற்படும் மோதலில் தவறு செய்பவர்களைக் கண்டறியவும் இந்தக் கருவி உதவும் எனப் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

சென்னை பேருந்து
சென்னை பேருந்து

இது தொடர்பாக, அண்ணா சதுக்கம் பேருந்து நிலையத்தில் எம்டிசி பேருந்து ஓட்டுநர்களைச் சந்தித்து பேசியபோது, பட்டன்களைப் பொருத்துவதற்கான பணிகள் தொடங்கி இருப்பதாகவும் விரைவில் அவை செயல்பாட்டிற்கு வரும் என்றும் அரசு கூறியிருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.

பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை எதிர்த்து பெண்களே முன்வந்து குரல்கொடுக்கத் தொடங்கியிருந்தாலும் அரசின் இந்த நடவடிக்கை குற்றவாளிகள் தவறு செய்வதிலிருந்து தடுப்பதற்கான ஒரு முன்னெச்சரிக்கையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- சுபஸ்ரீ

(பயிற்சிப் பத்திரிகையாளர்)