Published:Updated:

`இடிச்சுட்டு புது நூலகம் கட்டுறதா சொல்லிப் பத்து வருஷமாச்சு...' - குமுறும் பண்ணைப்புரம் மக்கள்!

பண்ணைப்புரம் நூலகம்

` `நூலகக் கட்டுமானப் பணிகள் முடியும் வரை மட்டும் கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள்' என்று கூறினார்கள் அரசு அதிகாரிகள். 10 வருடங்களாகப்போகிறது. இன்னும் அந்தச் சிதிலமடைந்த கட்டடத்தைக்கூட இடிக்கவில்லை" என்று ஆதங்கப்படுகிறார்கள் பண்ணைப்புரம் பகுதி மக்கள்.

`இடிச்சுட்டு புது நூலகம் கட்டுறதா சொல்லிப் பத்து வருஷமாச்சு...' - குமுறும் பண்ணைப்புரம் மக்கள்!

` `நூலகக் கட்டுமானப் பணிகள் முடியும் வரை மட்டும் கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள்' என்று கூறினார்கள் அரசு அதிகாரிகள். 10 வருடங்களாகப்போகிறது. இன்னும் அந்தச் சிதிலமடைந்த கட்டடத்தைக்கூட இடிக்கவில்லை" என்று ஆதங்கப்படுகிறார்கள் பண்ணைப்புரம் பகுதி மக்கள்.

Published:Updated:
பண்ணைப்புரம் நூலகம்
`அறியாமை என்னும் இருள் அகல வீட்டுக்கு ஒரு புத்தக சாலை அமைத்திடுதல் வேண்டும்' என்றார் பேரறிஞர் அண்ணா. ஆனால் ஊருக்கு ஒரு நூலகம் இருந்தும் அது முறையாகப் பராமரிக்கப்படாமல் இருப்பது வேதனையளிக்கிறது என்கிறார்கள் தேனி, பண்ணைப்புரம் பேரூராட்சி மக்கள்.

தேனி, பண்ணைப்புரம் ஒன்றியத்தில் அரசுப் பொது நூலகம் அமைந்திருக்கிறது. இந்த நூலகம் சிதிலமடைந்துவிட்டதால், 2012-ம் ஆண்டு அந்தக் கட்டடத்தை இடித்துவிட்டு புதிய நூலகக் கட்டடம் அமைக்கும் நோக்கில், அருகில் பேரூராட்சிக்குச் சொந்தமான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் கீழ் அமைந்திருக்கும் சிறிய அறைக்குப் புத்தகங்கள் மாற்றப்பட்டு, அங்கு தற்காலிகமாக நூலகம் அமைக்கப்பட்டது. அந்தச் சிறிய அறையில் போதிய இடவசதி இல்லாததால், வாசகர்கள் அமர்ந்து புத்தகங்கள் படிப்பதற்குக்கூட முடியாமல் சிரமப்பட்டுவருகின்றனர்.

சிதிலமடைந்த பழைய நூலகக் கட்டடம்
சிதிலமடைந்த பழைய நூலகக் கட்டடம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

`` `புது நூலகம் அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கிவிடும். நூலகக் கட்டுமானப் பணிகள் முடியும் வரை மட்டும் கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள்' என்று கூறினார்கள் அரசு அதிகாரிகள். 10 வருடங்களாகப் போகிறது. இன்னும் அந்தச் சிதிலமடைந்த கட்டடத்தைக்கூட இடிக்கவில்லை" என்று ஆதங்கப்படுகிறார்கள் பண்ணைப்புரம் பகுதி மக்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது தொடர்பாக நம்மிடம் பேசியவர்கள், ``2012-ல் நூலகக் கட்டடம் சிதிலமடைந்துவிட்டதால் அங்கிருந்த நூல்களையேல்லாம் இங்கே, இந்தச் சின்ன அறைக்குத் தற்காலிகமா கொண்டுவந்து வெச்சாங்க. உடனடியா அந்தப் பழைய கட்டடத்தை இடிச்சுட்டு, புது நூலகம் அமைக்கத் தேவையான பணிகளை தொடங்குறோம்'னு அதிகாரிங்க உறுதியா சொன்னாங்க. எங்க பகுதி மக்கள் மட்டுமில்லாம, சுற்று வட்டாரத்துல இருந்தும் நெறைய மக்கள் இந்த நூலகத்துக்குத்தான் வந்து படிச்சுட்டுப் போவாங்க. செய்தித்தாள்கள், கலை - இலக்கிய புத்தகங்கள், போட்டித் தேர்வுப் புத்தகங்கள்'னு அதிக அளவுல நூல்கள் இருந்துச்சு. ஆனா, இந்தச் சின்ன அறைக்கு மாத்துன பிறகு அந்தப் புத்தகங்களைத் தனித்தனியா வகைப்படுத்தி வெக்கறதுக்குக்கூட இங்கே இடமில்லை.

தற்காலிக நூலகம்
தற்காலிக நூலகம்

அதனால, வாசகர்கள் தங்களுக்குத் தேவையான புத்தகங்களைத் தேடிக் கண்டுபிடிக்க ரொம்ப சிரமமா இருக்கு. அதே மாதிரி, மாலை நேரங்கள்ல இந்த நூலகத்துல போதிய மின்சார வசதி இல்லாததால எங்களால புத்தகங்கள் படிக்க முடியலை. 10 வருஷமா இந்தச் சின்ன அறையிலதான் நூலகம் இயங்கிட்டுவருது. இங்கே குடிநீர், மின் விளக்குகள்னு எந்தவித அடிப்படை வசதியும் இல்லை.

படிக்குற மாணவர்களுக்குத் தேவையான எல்லா நூல்களும் இங்கே இருந்தும், அவங்களுக்குப் பயன்படாம இருக்குறது ரொம்பவும் வேதனையா இருக்கு. அதேபோல, இந்த நூலகம் ஊரோட கடைக்கோடியில இருக்குறதால பொதுமக்கள் வந்து செல்வதற்கும் ரொம்ப சிரமமா இருக்கு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நூலகத்தைச் சுற்றியும் மரம், செடிகள் இருக்குறதால பாம்புகள் மற்றும் விஷ ஜந்துகள் நடமாட்டமும் ரொம்ப அதிகமாவே இருக்கு. அதனால, இந்தக் கட்டடம் பக்கம் வரவே மாணவர்களும் வாசகர்களும் அச்சப்படுறாங்க. 2012-லயே இங்கே புது நூலகம் கட்ட நிதி ஒதுக்குனாங்க. ஆனா, அதுக்குப் பிறகு எந்த நடவடிக்கையும் இல்லை. இது தொடர்பா அரசு அதிகாரிங்ககிட்ட கேட்டதுக்கு, `நூலகக் கட்டடத்துக்கு ஒதுக்குன தொகையில, புது புத்தகங்கள் வாங்கிட்டோம்'னு சொல்லிட்டாங்க.

தற்காலிக நூலகம்
தற்காலிக நூலகம்

அதுக்குப் பிறகு, நாங்க அரசு அதிகாரிங்ககிட்ட பலமுறை இது தொடர்பா பேசிப் பார்த்துட்டோம். யாரும் எங்க ஊருக்கு புது நூலகம் அமைக்கவோ இல்லை இந்த நூலகத்தைச் சீரமைத்துக் கொடுக்கவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்கலை. இன்னும் கொஞ்ச நாள்ல இந்தக் கட்டடமும் இடிஞ்சு விழுந்துடும்போல" என்று வருத்தமாகத் தெரிவித்தனர்.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் வசிக்கும் பண்ணைப்புரம் ஊராட்சியில் புது நூலகம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism