Published:Updated:

`விரும்பினால் பேருந்துகளில் கட்டணம் செலுத்தி குழந்தைகளுக்கு சீட் பெறுக!'- பெற்றோர்களுக்கு அரசு பதில்

சென்னை மாநகரப் பேருந்து

பேருந்துகளில் பயணிக்க மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாகப் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

`விரும்பினால் பேருந்துகளில் கட்டணம் செலுத்தி குழந்தைகளுக்கு சீட் பெறுக!'- பெற்றோர்களுக்கு அரசு பதில்

பேருந்துகளில் பயணிக்க மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாகப் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Published:Updated:
சென்னை மாநகரப் பேருந்து

பேருந்துகளில் பயணிக்க மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் வரை இலவசமாகப் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பெற்றோர்கள் விருப்பப் பட்டால், பேருந்தில் பயணிக்கும்போது கட்டணம் செலுத்தி குழந்தைகளுக்கு இருக்கைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

பொதுப் போக்குவரத்து
பொதுப் போக்குவரத்து
நந்தகுமார்

சமீபத்தில் சட்டப் பேரவையில் பேசிய தமிழகத்தின் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், ``இதுவரை, மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாகப் பயணிக்கவும், 12 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு அரை கட்டணமும் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், இனிமேல் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாகப் பயணிக்கலாம்" என அறிவித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேலும், அரசுப் போக்குவரத்து கழங்கங்கள் மூலம் இயக்கப்படும் தொலைதூர பேருந்துகளில் பயணிக்க பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு 10 சதவிகிதம் தள்ளுபடி வழங்கவும், டிக்கெட் வாங்க இனிபணமில்லா பரிவர்த்தனைகளை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

 Bus
Bus

இந்நிலையில், பெற்றோர்கள் பலரும் குழந்தைகளை மடியில் வைத்துக்கொண்டு பயணிப்பது சிரமமாக உள்ளது என தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, பெற்றோர்கள் விருப்பப்பட்டால் பயணிக்கும்போது கட்டணம் செலுத்தி குழந்தைகளுக்கு இருக்கைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும், இதற்கு எந்தத் தடையும் கிடையாது என்றும் போக்குவரத்து துறை மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாடு அரசின் அனைத்து போக்குவரத்துக் கழகப் பேருந்துகளிலும் இந்த நடைமுறை பின்பற்றப்படும் எனவும் கூறியுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism