Published:Updated:

கரூர்: பெற்றோருக்கு உறுதிமொழிப் படிவம் - குழந்தைத் திருமணத்தைத் தடுக்க அசத்தல் முயற்சி!

உறுதிமொழிப் படிவம்
News
உறுதிமொழிப் படிவம்

``கரூர் மாவட்டத்தில் ஒவ்வொரு மாணவியும், தன்னை ஒரு வீர மங்கையாக மனதில் நிலை நிறுத்திக்கொள்ள வேண்டும். நாம் மற்றவர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் கிடையாது" - செந்தில் பாலாஜி.

கரூர் மாவட்டத்தில் அதிகரித்துவரும் குழந்தைகள் திருமணத்தைத் தடுக்க, கரூர் மாவட்டத்திலிருக்கும் 26,000 மாணவிகளுக்கு மரக்கன்று வழங்குவதோடு, அவர்களின் பெற்றோர்களுக்கு உறுதிமொழிப் படிவம் வழங்கும் திட்டத்தை, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கிவைத்தார்.

விழிப்புஉணர்வு நிகழ்ச்சி
விழிப்புஉணர்வு நிகழ்ச்சி

கரூர் மாவட்டம், வெள்ளியணை அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டு, 'இளம் தளிர் இல்லம்' என்ற திட்டத்தைத் தொடங்கிவைத்து, மாணவிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி, மாணவிகளின் பெற்றோர்களுக்குக் குழந்தைத் திருமணம் எதிர்ப்பு தொடர்புடைய கடிதங்களை வழங்கினார். அங்கு வந்திருந்த மாணவிகளின் பெற்றோர்கள், குழந்தைத் திருமணம் எதிர்ப்பு உறுதி மொழியை எடுத்தார்கள். இந்த நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ``தமிழக முதல்வர் மாணவிகளின் நலனில் மிகவும் கவனம் செலுத்திவருகிறார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் ஒவ்வொரு மாவட்டமாகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, திடீர் ஆய்வுகள் நடத்தி, அந்தப் பள்ளிகளின் தேவைகள் குறித்துக் கேட்டறிந்து, அவற்றை முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்று, சிறப்பாக நிறைவேற்றித்தருகிறார். கடந்தகாலங்களில் மாணவிகளுக்கு எதிரான சில ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவங்கள் நடந்திருக்கின்றன. ஆனால், இனி வரும் காலங்களில் இது போன்று நடக்காமல் இருப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 'நிமிர்ந்து நில்... துணிந்து சொல்!' என்ற பெயரில் பெண்களின் பாதுகாப்பு இயக்கம் தொடங்கிவைக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, கரூர் மாவட்டத்திலிருக்கும் 201 பள்ளிகளில் பயிலும் 26,000 மாணவிகளுக்கு இந்த விழிப்புஉணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டிருக்கிறது.

 உறுதிமொழி
உறுதிமொழி

அந்த வகையில், அதன் தொடர்ச்சியாக, 'இளம் தளிர் இல்லம்' என்ற திட்டம் இப்போது தொடங்கிவைக்கப்பட்டிருக்கிறது. கரூர் மாவட்டத்தில் ஒவ்வொரு மாணவியும், தன்னை ஒரு வீர மங்கையாக மனதில் நிலை நிறுத்திக்கொள்ள வேண்டும். நாம் மற்றவர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் கிடையாது, துணிந்து நிற்க வேண்டும், தைரியமாக இருக்க வேண்டும். எந்த ஒரு சின்ன இடர்ப்பாடு இருந்தாலும் நிமிர்ந்து நின்று துணிந்து சொல்ல வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மாணவிகளிடம் மட்டும் விழிப்பு உணர்வை ஏற்படுத்தாமல், அவர்களின் பெற்றோர்களிடமும் விழிப்பு உணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், 'இளம் துளிர் இல்லம்' திட்டம் மூலம் அனைத்து மாணவிகளின் பெற்றோர்களையும் வரவழைத்து, அவர்கள் ஒவ்வொருவருக்கும் குழந்தைத் திருமணம் செய்து வைத்தல் கூடாது என்ற என்ற உறுதிமொழிக் கடிதம் வழங்கப்பட்டிருக்கிறது. இனிவரும் காலங்களில் கரூர் மாவட்டத்தில் குழந்தைத் திருமணம் என்பது இல்லை என்ற நிலையை அனைத்துப் பெற்றோர்களும் உருவாக்க வேண்டும்.

உறுதிமொழிப் படிவத்தை ஒட்டும் மாணவி
உறுதிமொழிப் படிவத்தை ஒட்டும் மாணவி

கல்வியில் கரூர் மாவட்டம் முதலிடம் பெற்றிட வேண்டும். மாணவிகளின் பாதுகாப்பிலும் கரூர் மாவட்டம் முதலிடம் வகிக்கிறது என்பதை நாம் ஏற்படுத்திட வேண்டும். கரூர் பள்ளிகளில் ஒவ்வொரு ஆசிரியைக்கும் பதினைந்து முதல் இருபது மாணவர்கள் வரை ஒதுக்கப்பட்டு, அவர்களுக்கு விழிப்புஉணர்வு ஏற்படுத்தி வழிநடத்தக்கூடிய அளவுக்கு, 'அகல் விளக்கு' என்ற ஒரு திட்டமும் தொடங்கிவைக்கப்படவிருக்கிறது" என்றார்.