Published:Updated:

மாணவனைத் துடைப்பத்தால் அடித்து மிரட்டிய ஆசிரியை; கொந்தளித்த பெற்றோர் - நடந்தது என்ன?

உறவினரகள் முற்றுகை

நான்காம் வகுப்பு மாணவனைத் தாக்கி மிரட்டிய ஆசிரியைமீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.

மாணவனைத் துடைப்பத்தால் அடித்து மிரட்டிய ஆசிரியை; கொந்தளித்த பெற்றோர் - நடந்தது என்ன?

நான்காம் வகுப்பு மாணவனைத் தாக்கி மிரட்டிய ஆசிரியைமீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.

Published:Updated:
உறவினரகள் முற்றுகை

அரியலூர் மாவட்டம், வாலாஜா கிராமத்தில் பெரியார் ஈ.வே.ரா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. 162 மாணவ மாணவியர்களும், ஏழு ஆசிரியர்களைக் கொண்டும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் அதே ஊரைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் நான்காம் வகுப்பு படித்து வருகிறான்.

அரியலூர்
அரியலூர்

இந்த நிலையில், கடந்த 22-ம் தேதி நான்காம் வகுப்பில் ஆசிரியர் இளவரசி என்பவர், போர்டில் (கரும்பலகை) மாணவர்களுக்கு எழுதி பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அந்த மாணவன் கரும்பலகையின் ஓரமாகக் குறுக்கே ஓடியிருக்கிறான்.

நடுநிலைப்பள்ளி
நடுநிலைப்பள்ளி

இதில், ஆத்திரமடைந்த ஆசிரியை இளவரசி, ``இங்க படிக்க வந்தியா... இல்லை விளையாடா வந்தியா?" என வகுப்பறையின் உள்ளே கிடந்த துடைப்பத்தை எடுத்து அடித்ததாகவும், ``இங்கு நடந்ததைப் பற்றி வெளியில் சொன்னால் உப்பைக் கொட்டி அதன் மேல் முட்டிப் போட வைப்பேன்" எனவும் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக வகுப்பில் படிக்கும் சக மாணவர்கள், அந்த மாணவனின் பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார்கள். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர், பள்ளிக்குச் சென்று இது குறித்து விசாரித்திருக்கிறார்கள். மேலும் தங்கள் மகனை அடித்த ஆசிரியைமீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தொடக்கக் கல்வி அலுவலரிடம் புகார் அளித்திருக்கின்றனர். ஆனால், புகாரின் பேரில் தொடக்கக் கல்வி அலுவலர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அதனால் ஆத்திரமடைந்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இன்று காலை பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உறவினர்கள் முற்றுகை
உறவினர்கள் முற்றுகை

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கல்வி உயர் அதிகாரிகள், போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின்போது அந்த மாணவனுடன் படிக்கும் மாணவர்களிடமும் விசாரணை செய்தனர். அப்போது அந்த மாணவர்களும் தாங்கள் அடித்ததைப் பார்த்ததாகச் சொல்லியிருக்கிறார்கள். பின்னர் அதிகாரிகள் அந்த ஆசிரியைமீது நடிவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.