Published:Updated:

நெல்லை மாவட்ட எல்லையில் `பாஸ்’ வழங்கல்! -சிகிச்சைக்குச் செல்ல முடியாமல் தவித்தவர்கள் மகிழ்ச்சி

மாற்றுத் திறனாளிக்கு உதவி
மாற்றுத் திறனாளிக்கு உதவி

கொரோனா பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் பேனா விற்பனை செய்து குடும்பத்தை வழிநடத்திய பார்வையற்றவர் தடுமாறிப்போனார். நிலை குலைந்திருந்த அவரது குடும்பத்துக்கு உரிய நேரத்தில் உதவி கிடைத்துள்ளது.

நெல்லை மாவட்டம் வள்ளியூர்ப் பகுதியைச் சேர்ந்தவர், மணிகண்டன். பார்வை குறைபாடு கொண்ட மாற்றுத் திறனாளியான அவருக்கு மனைவியும் மகளும் உள்ளனர். பிறரிடம் உதவி பெற்று வாழ்வதை விடவும் சுயமாக தொழில் செய்து குடும்பத்தை நடத்த வேண்டும் என்கிற எண்ணம் கொண்டவர்.

`கேரள எல்லை... கூடங்குளம்... மகேந்திரகிரி இஸ்ரோ மையம்!’ - கொரோனா தடுப்பில் தீவிரம் காட்டும் நெல்லை

பார்வையற்ற நிலையிலும் பேனா விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் சொற்ப வருவாயில் குடும்பத்தை நடத்தி வந்தார். ரயில்களில் சென்னை வரை பயணம் செய்து பேனா விற்பனை செய்வதை மணிகண்டன் வழக்கமாக வைத்திருந்தார்.

தூய்மைப் பணியாளர்களுக்கு `Guard of honour’ - அசத்திய நெல்லை மாநகரக் காவல்துறை 

கொரோனா நோய்த் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும் போக்குவரத்து அனைத்தும் முழுமையாக ரத்து செய்யப்பட்டதால் மணிகண்டன் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

உதவி வழங்கிய இன்பதுரை எம்.எல்.ஏ
உதவி வழங்கிய இன்பதுரை எம்.எல்.ஏ

ஒரு மாத காலமாக வேலையின்றி வீட்டுக்குள்ளேயே முடங்கியதால் குடும்பம் வறுமையில் வாடும் நிலைக்குத் தள்ளப்பட்டது. அதை அறிந்த ராதாபுரம் தொகுதியின் எம்.எல்.ஏ-இன்பதுரை, அவரை வீடு தேடிச் சென்று சந்தித்தார். அவரது குடும்பத்துக்குத் தேவையான உணவுப் பொருள்களை வழங்கியதுடன் பண உதவியும் செய்தார்.

ஏற்கெனவே திசையன்விளை, வள்ளியூர், உவரி ராதாபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் டயாலிசிஸ் உள்ளிட்ட பிரச்னைகளுக்காக நாகர்கோவில் மருத்துவமனைக்குச் செல்வதில் சிக்கல் இருந்தது. இது பற்றி மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு எடுத்துச் சென்று, இரு மாவட்ட எல்லையான காவல்கிணறு பகுதியிலேயே அவசரத் தேவைக்குச் செல்வோருக்கு பாஸ் வழங்க ஏற்பாடு செய்தார்.

நோயாளிகள் சிகிச்சைக்குச் செல்ல உடனடி இ-பாஸ்
நோயாளிகள் சிகிச்சைக்குச் செல்ல உடனடி இ-பாஸ்

மருத்துவ சிகிச்சைக்கான ஆவணங்கள் இருந்தால் உடனடியாக பாஸ் கிடைப்பதால் நோயாளிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு