Published:Updated:

சாத்தூர் அருகே அம்பேத்கர் நகர் எனப் பெயர் மாற்றத்துக்கு எதிராக கறுப்புக்கொடி- அதிகாரிகள் பதில் என்ன?

சாத்தூர் அருகே கறுப்புக்கொடி

"எங்களது வசிப்பிடப் பகுதியின் பெயரை மாற்றியது ஊராட்சித் தலைவரின் தன்னிசையான முடிவு. இதனால் நாங்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகியிருக்கிறோம்." - பொதுமக்கள்

சாத்தூர் அருகே அம்பேத்கர் நகர் எனப் பெயர் மாற்றத்துக்கு எதிராக கறுப்புக்கொடி- அதிகாரிகள் பதில் என்ன?

"எங்களது வசிப்பிடப் பகுதியின் பெயரை மாற்றியது ஊராட்சித் தலைவரின் தன்னிசையான முடிவு. இதனால் நாங்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகியிருக்கிறோம்." - பொதுமக்கள்

Published:Updated:
சாத்தூர் அருகே கறுப்புக்கொடி

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகேயுள்ள மேட்டமலை கிராமத்தில் பாண்டியன் நகர் இருக்கிறது. இந்தப் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்துவருகின்றனர். இங்கு வசிக்கும் மக்கள் தங்களது ஆதார் அட்டை, குடும்ப அட்டை, குழந்தைகளின் கல்விச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ் உட்பட பல்வேறு அரசு ஆவணங்களிலும் பாண்டியன் நகர் என்ற முகவரியிலேயே அடையாள அட்டைகளைப் பெற்றுள்ளனர்.

பாண்டியன் நகர்
பாண்டியன் நகர்

இந்த நிலையில், மேட்டமலை ஊராட்சித் தலைவராகத் தற்போது பொறுப்பிலுள்ள பார்த்தசாரதி என்பவர், பாண்டியன் நகர் பகுதியின் பெயரை அம்பேத்கர் நகர் என மாற்றியதாகச் சொல்லப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாண்டியன் நகர் பகுதி மக்கள், ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், அம்பேத்கர் நகர் என்ற பெயரைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்துத்தர வலியுறுத்தியும் வீடுகளில் கறுப்புக்கொடிகட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது தொடர்பாக பாண்டியன் நகர் பொதுமக்கள் பேசும்போது, "எங்களது பகுதியின் பெயரை அம்பேத்கர் நகர் மாற்றியது ஏன் என விளக்கம் கேட்பதற்காக ஊராட்சி மன்றத் தலைவரை அணுகினால் எங்களை தரக்குறைவாகப் பேசி அவமானப்படுத்துகிறார். எங்களது வசிப்பிடப் பகுதியின் பெயரை மாற்றியது ஊராட்சித் தலைவரின் தன்னிசையான முடிவு. இதனால் நாங்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகியிருக்கிறோம். இதுவரை நாங்கள் பெற்றுள்ள குடும்ப அட்டை, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை உட்பட குழந்தைகளின் ஆவணங்கள் என அரசு சார்ந்த அனைத்து அடையாள அட்டைகளுக்க்கும், சான்றிதழ்களுக்கும் பெயர் மாற்றவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் பல்வேறு குளறுபடிகள் உருவாகும் என்பதால் இனியும் புதிதாக எந்த ஆவணத்தையும் பாண்டியன் நகர் என்ற முகவரியில் பெற முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது.

மக்கள்
மக்கள்

இது குறித்து சாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளித்திருக்கிறோம். ஆனால் எங்களது மனுவின் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. ஏற்க்ர்னவே அடிப்படை வசதி குறைபாட்டால் அல்லல்படும் நாங்கள், தற்போது பெயர் மாற்ற நடவடிக்கையால் இன்னும் சிரமங்களைச் சந்தித்துவருகிறோம். எனவே, பாண்டியன் நகர் மக்களின் நிலையைப் புரிந்துகொண்டு, பெயர் மாற்ற நடவடிக்கையைத் திரும்பப் பெற வேண்டும், மக்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து தரவேண்டும்" என்றனர்.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக மேட்டமலை ஊராட்சித் தலைவர் பார்த்தசாரதியிடம் பேசினோம். "1999-லேயே அந்தப் பகுதி பாண்டியன் நகர் எனும் பெயரில் பதிவுசெய்யப்பட்டு அப்போதைய ஊராட்சி மன்றத் தலைவரால் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, அந்தப் பகுதியின் பெயரை அம்பேத்கர் நகர் என மாற்றும் அவசியம் ஊராட்சிக்கு ஏற்படவில்லை. மேலும், பொதுமக்களை நான் தரக்குறைவாகப் பேசியதாகச் சொல்வதில் உண்மையில்லை. மக்களோடு தினமும் தொடர்பில் இருப்பவன் நான். பொது இடத்தில் எப்படி மரியாதையாக நடந்துகொள்ள வேண்டும் என்ற பக்குவமும் எனக்கிருக்கிறது. எனவே, பாண்டியன் நகர் பகுதி மக்களை நான் அவமானப்படுத்திப் பேசியதாகச் சொல்வது உண்மையில்லை. அந்தப் பகுதி மக்களுக்குச் சாலை வசதி, தெருவிளக்கு, ஜல்ஜீவன் திட்டத்தின் மூலமாக குடிநீர் என எல்லா வசதிகளையும் செய்து கொடுத்திருக்கிறோம். வீடுகள் ஆங்காங்கே இருப்பதாலும், சுற்றிலும் விவசாய பட்டா நிலங்கள் இருப்பதாலும் கழிவுநீரோடை அமைக்கும் பணி மட்டும் தாமதப்படுகிறது. விரைவில் அந்தப் பணியையும் நிறைவேற்றிக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

எதிர்ப்பு
எதிர்ப்பு

சாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் (பஞ்சாயத்து) பேசும்போது, "ஒரு பகுதியின் பெயரை மாற்றும் அதிகாரம் பஞ்சாயத்துக்குக் கிடையாது. வளர்ச்சிப் பணிகள் சார்ந்து பணி நடைபெறும் இடத்தில் பணி விளக்கப் பலகை வைக்கப்படுவது வழக்கம். அதுபோலத்தான், பாண்டியன் நகர் பகுதியில் வளர்ச்சிப்பணி சார்ந்து வைக்கப்பட்ட விளக்கப் பலகையில் அம்பேத்கர் நகர் எனத் தவறுதலாக இடம்பெற்றுவிட்டது. தற்போது, பொதுமக்கள் எதிர்ப்பைத் தொடர்ந்து அந்தப் பலகை அகற்றப்பட்டுவிட்டது. மேலும், அந்தப் பகுதி மக்களின் தேவையை அறிந்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றித்தர நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.