Published:Updated:

சுஜித் மரணத்தின் தாக்கம்! - மூடப்படும் கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள்

பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து சிறுவன் சுஜித் உயிரிழந்ததால், கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளை மூடுவதற்குப் பொதுமக்கள் ஆர்வம் காட்டிவருகிறார்கள்.

மழைநீர்த் தொட்டியான ஆழ்துளைக் கிணறு
மழைநீர்த் தொட்டியான ஆழ்துளைக் கிணறு

மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியைச் சேர்ந்த பிரிட்டோ-கலாமேரி தம்பதியின் இரண்டாவது மகன் சுஜித் வில்சன், கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவத்தையடுத்து, கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் ஆழ்துளைக் கிணறுகள் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளை மூடிவைக்க வேண்டும் என்று அரசும் அறிவுறுத்தியுள்ளது. அதற்குத் தனியார் அமைப்புகள், தொண்டு நிறுவனத்தினர், அரசியல் அமைப்பினர் போன்றோரும் ஆதரவு தெரிவித்து தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறார்கள்.

ஆழ்துளைக் கிணறுகள்
ஆழ்துளைக் கிணறுகள்
சுஜித் வீட்டுக்கு வந்த முதல்வரிடமிருந்து விஜயபாஸ்கர் விலகி நின்றது ஏன்?

ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் கிடப்பில் போடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் குறித்து தகவல் கொடுத்தால் தாங்களே நேரில் வந்து மூடிக் கொடுப்பதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் அறிவித்து தொலைபேசி எண்களையும் வெளியிட்டனர்.

மூடப்படும் ஆழ்துளைக் கிணறுகள்
மூடப்படும் ஆழ்துளைக் கிணறுகள்

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள திரிகூடபுரத்தில் குடியிருப்புப் பகுதியின் சில இடங்களில் ஆபத்தான நிலையில் ஆழ்துளைக் கிணறுகள் இருப்பது தொடர்பாக தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மாவட்ட தலைமைக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவற்றை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சார்பாக கடையநல்லூர், சொக்கம்பட்டி, சங்கரன்கோவில், மானூர், குப்பக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கைவிடப்பட்ட நிலையில் அச்சுறுத்தலாக இருந்த முப்பதுக்கும் அதிகமான ஆழ்துளைக் கிணறுகள் மூடப்பட்டன. தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் குறித்த தகவல்களைத் தெரிவித்து மூடிவருகிறார்கள்.

மூடப்படும் ஆழ்துளைக் கிணறு
மூடப்படும் ஆழ்துளைக் கிணறு

அரசு அதிகாரிகளும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ஆழ்துளைக் கிணறுகளை மூடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். செங்கோட்டை தாட்கோ நகரில் மூன்று இடங்களில் ஆழ்துளைக் கிணறுகளை மூடப்படாமல் இருப்பதை அறிந்து அவற்றை மூடுவதற்குச் செங்கோட்டை தாசில்தார் ஓசானா நடவடிக்கை எடுத்தார்.

`சுஜித் உடலைக் காட்டாதது ஏன்?' - கும்பகோணம் தீ விபத்தைச் சுட்டிக்காட்டிய ராதாகிருஷ்ணன்

நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அரசு அதிகாரிகள், தனியார் அமைப்புகள், தொண்டு நிறுவனத்தினர் குழந்தைகளை அச்சுறுத்தும் வகையில் பொது இடங்களில் கைவிடப்பட்ட நிலையிலிருந்த ஆழ்துளைக் கிணறுகளை மூடினார்கள். ஒரு சிலர் தாங்களாகவே ஆழ்துளைக் கிணறுகளை மழைநீர் சேமிப்புத் தொட்டியாக மாற்றினார்கள்.

``என் மகனே கடைசியாக இருக்கட்டும்!’’ - கலங்கும் சுஜித் வில்சனின் தாய் கலாமேரி
சிறுவன் சுஜித் மரணம் பொதுமக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இனியும் இப்படியொரு சம்பவம் நடக்கக் கூடாது என்பதில் மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.
சமூக ஆர்வலர்கள்