Published:Updated:

`ஊரடங்கை மீறி, ஒன்றுகூடி கறிவிருந்து!' -டிக்டாக்கால் சிக்கிய இளைஞர்கள்

கொரோனா
கொரோனா

கறி பிரியாணி சமைத்து 30-க்கும் மேற்பட்டவர்கள் கூட்டமாக சாப்பிட்டதோடு அதை வீடியோ பதிவெடுத்து டிக்டாக்கில் பதிவிட்டனர்.

மயிலாடுதுறை அருகே கொரோனா ஊரடங்கை மதிக்காமல் கறி விருந்து நடத்தி டிக்டாக் செயலியில் பதிவிட்ட 10 இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

டிக் டாக்
டிக் டாக்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மணல்மேடு காவல் நிலையத்துக்கு உட்பட்டது வில்லியநல்லூர் கிராமம். இங்குள்ள மாரியம்மன் கோயில் எதிர்புறம் சுமார் 300 மீட்டர் தொலைவில், வாய்க்கால் மதகு அருகில் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், வெளியூரிலிருந்து வந்த நபர்கள் என 30-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாகக் கூடி கறி பிரியாணி சமைத்துச் சாப்பிட்டதோடு அதை வீடியோ பதிவெடுத்து டிக்டாக்கில் பதிவிட்டனர்.

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், சமூக விலகலைக் கடைப்பிடிக்காமல் கறி விருந்து சாப்பிட்டு அதை டிக்டாக் செயலியில் பதிவேற்றம் செய்தது காவல் துறையினருக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து தகவல் கிடைத்தவுடன், உடனடியாக நாகை மாவட்ட தனிப்பிரிவு போலீஸார் சப்-இன்ஸ்பெக்டர் பாபுராஜா தலைமையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

கொரோனா
கொரோனா

இந்தக் கறி விருந்து நிகழ்ச்சியை நடத்தி, அதை டிக்டாக் பதிவேற்றம் செய்து வலைதளங்களில் பதிவிட்ட வில்லியநல்லூரைச் சேர்ந்த கலைமணி, ராஜேஷ், வெங்கடேஷ், தினேஷ், சதீஷ்குமார், அரவிந்த், அருண், சிவா, பாலமுருகன், பாலச்சந்தர் ஆகிய 10 இளைஞர்களைக் கைது செய்து மணல்மேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்கள் மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு