Published:Updated:

பேருந்து பற்றாக்குறையால் பரிதவிக்கும் சமத்துவபுரம் மக்கள் - நடவடிக்கை எடுக்குமா அரசு?

பேருந்து பற்றாக்குறை
News
பேருந்து பற்றாக்குறை

கூட்டநெரிசல் காரணமாக பேருந்து அடுத்து வரும் சமத்துவபுரம், திருவாமூர் உள்ளிட்ட கிராமங்களில் நிற்காமலே கடலூர் சித்தூர் சாலை வழியாக பண்ருட்டி சென்று விடுகிறது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பணிமனைக்கு உட்பட்ட பேருந்து வழித்தடத்தில் காலை நேரத்தில் ஒரே ஒரு பேருந்து இயங்கி வருவதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர். பண்ருட்டியிலிருந்து சேந்தநாடு வரை '14' என்ற அரசுப் பேருந்து இயங்கி வருகிறது. இது காலை நேரத்தில் 6.45-க்கு சேந்தநாட்டிலிருந்து கிளம்பி, 8.00 மணிக்கு பண்ருட்டியை சென்றடையும். பள்ளி நேரம் என்பதால் இந்த பேருந்தில்  பள்ளி, கல்லூரி மாணவர்கள் கூட்டம் அலைமோதும். `14' அரசுப் பேருந்து, சேந்தநாட்டிலிருந்து கிழக்குமருதூர், சிவாபட்டினம், காமாட்சிபேட்டை கிராமங்களைக் கடந்து வரும்போதே பள்ளி நேரம் என்பதாலும், வேலை நேரம் என்பதாலும் முழுவதும் நிரம்பி வழிகிறது. இதனால் மாணவர்கள் பேருந்தில் தொங்கியபடி ஆபத்தான நிலையில் பயணிக்கின்றனர்.

பேருந்தை வழிமறித்து வாக்குவாதம்
பேருந்தை வழிமறித்து வாக்குவாதம்

மேலும், கூட்டநெரிசல் காரணமாக பேருந்து அடுத்து வரும் சமத்துவபுரம், திருவாமூர் உள்ளிட்ட கிராமங்களில் நிற்காமலே கடலூர் சித்தூர் சாலை வழியாக பண்ருட்டி சென்று விடுகிறது. இந்த கிராமங்களில் பேருந்து நிற்காமல் செல்வதால், அந்த கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள், பொதுமக்கள் அனைவரும், கடலூர் - சித்தூர் சாலைவரை 3 கி.மீ நடந்தே சென்று பின்னர் அங்கிருந்து தனியார் பேருந்துகளிலும், இருசக்கர வாகனங்களில் லிஃப்ட் கேட்டும் பயணித்துக் கொண்டிருக்கின்றனர். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பள்ளி, கல்லூரிகள் திறந்ததிலிருந்து இது தொடர்கதையாக இருப்பதால், நேற்றைய தினம் சமத்துவபுரத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் '14' பேருந்தை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து நம்மிடம் பேசிய ஊர் மக்கள்,``14 எண் அரசு பேருந்து சமத்துவபுரம் வருவதற்கு முன்பே நிரம்பிவிடுகிறது. அதன் பிறகு எங்கும் நிற்காமல் பண்ருட்டி சென்றுவிடுகிறது. எங்க ஊர் பிள்ளைகள் 3 கி.மீ நடந்தே பண்ருட்டி மெயின்ரோட்டுக்குச் சென்று தினமும் தனியார்  பேருந்தில் செல்கின்றனர். இதற்கு முன்பு '28' என்ற பேருந்து இந்த பேருந்துக்கு அடுத்து வந்துகொண்டிருந்தது.

சமத்துவபுரம் மக்கள்
சமத்துவபுரம் மக்கள்

இரண்டு பேருந்துகள் இந்த தடத்தில் வந்ததால் மாணவர்கள் அனைவரும் பயணம் மேற்கொண்டனர்.ஆனால், 28 எண் பேருந்து எப்போது வரும் எந்த நேரத்துக்கு வரும் என யாருக்குமே தெரியாது. இப்போ வருவதே கிடையாது. அப்படி இருக்கையில் தினமும் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பணி நிமித்தமாக வேலைக்குச் செல்பவர்களுக்கு சிரமமாக இருக்கிறது. இது குறித்து பேருந்து பணிமனையில் எத்தனை முறை புகார் கொடுத்தும் எந்த பயனும் இல்லை. இந்த பிரச்னைக்கு கடலூர் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து, கூடுதல் பேருந்து இயக்க வேண்டும்" என்றனர் ஆதங்கத்துடன். 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து பண்ருட்டி பணிமனை போக்குவரத்துக் கழக ஊழியர்களிடம் விளக்கம் கேட்டோம். ``கொரோனா பரவல் காரணமாக பேருந்து எண்ணிக்கையை குறைத்திருந்தோம். தற்போதுதான், அதிகரித்திருக்கிறோம். முன்னதாக அரசு புதிய பேருந்துகளை வாங்குவதாக அறிவித்திருந்தது. ஆனால், அது இன்னும் வெறும் அறிவிப்பாகவே இருக்கிறது. சமீபகாலமாக பேருந்து உபரி பாகங்கள் பற்றாக்குறையும் அதிகரித்திருக்கிறது. பண்ருட்டி பணிமனையில் மட்டும் 8 பேருந்துகளை டையர் இல்லாத காரணத்தினால் இயக்க முடியவில்லை. தற்போதுதான், கிடைத்த டையர்களை வைத்து 4 பேருந்துகளை இயக்கியிருக்கிறோம்.

பண்ருட்டி பணிமனை
பண்ருட்டி பணிமனை

இன்னும் 4 பேருந்துகள் இயக்க முடியாத சூழல்தான் நிலவுகிறது. நீங்கள் குறிப்பிட்ட வழிதடத்தில் அதன் காரணமாக தான் கூடுதல் பேருந்து இயக்க முடியவில்லை. அதேபோல, இருக்கும் பேருந்துகள் கூட நல்ல நிலையில் இல்லை. பிரேக், சைடு மிரர்'னு நிறைய பிரச்னைகள் இருக்கிறது. அதானால், தான் விபத்துகளும் அதிக அளவில் நிகழ்கின்றன.

பண்ருட்டி பணிமனை
பண்ருட்டி பணிமனை

ஓட்டுநர்கள் இயக்குகிற பேருந்துகளில் பழுது ஏற்பட்டால், அவர்களின் சொந்த காசிலேயே செலவு செய்ய வேண்டியதாக இருக்கிறது. பண்ருட்டியில் மட்டுமல்ல, விருத்தாசலம், சிதம்பரம் என எல்லா பணிமனைகளிலும் இதே நிலை தான்" என்றனர்.