Published:Updated:

`கொரோனாவுக்காக கைகழுவச் சொல்றீங்க; தண்ணீர் தர வேண்டாமா?' - கொதிக்கும் `கரூர்’ பள்ளபட்டி மக்கள்

பள்ளபட்டி
பள்ளபட்டி

இந்தப் பேரூராட்சியில் வசிக்கும் மக்களுக்கு, 23 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், தற்போது 11 லட்சம் லிட்டர் தண்ணீர்தான் கிடைப்பதாகவும், அதுவும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலமும் அமராவதியின் மூலமும் தண்ணீர் கிடைப்பதாகச் சொல்கிறார்கள்.

கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளபட்டி பேரூராட்சியில்தான் அதிகம் கொரோனா பாதிப்பு உள்ளது. இங்கு வசிக்கும் 35-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், `கொரோனாவைத் தடுக்க கைகழுவுங்கள்' என்று சுகாதாரத்துறை ஏற்படுத்தும் விழிப்புணர்வுக்கு எதிராக பள்ளபட்டி மக்கள் கொந்தளிப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. `குடிக்கவே தண்ணீர் இல்லை, இந்த லட்சணத்தில் எந்தத் தண்ணியில் கைகழுவுவது?' என்று குற்றம்சாட்டுகிறார்கள் மக்கள்.

பள்ளபட்டி
பள்ளபட்டி
`8 வருஷம் கழிச்சு, வெளி உலகத்தைப் பாக்கக் குடுத்து வச்சிருக்கு!' - உதவிகளால் நெகிழ்ந்த லோகநாதன்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியத்தில் இருக்கிறது, பள்ளபட்டி பேரூராட்சி. ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட இந்தப் பேரூராட்சியில், தொடர்ந்து குடிநீர் பிரச்னை தலைவிரித்தாடுவதாகச் சொல்லப்படுகிறது. சாதாரண காலங்களிலேயே இங்கு தண்ணீர் பற்றாக்குறை அதிகமாக இருக்கும். இது கோடைக்காலம் என்பதால், குடிநீர் பற்றாக்குறை அதிகமாக இருப்பதாக பள்ளபட்டி பேரூராட்சியைச் சேர்ந்த மக்கள் சொல்கிறார்கள்.

தண்ணீர் டேங்க்
தண்ணீர் டேங்க்

தினமும் இந்தப் பேரூராட்சியில் வசிக்கும் மக்களுக்கு, 23 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், தற்போது 11 லட்சம் லிட்டர் தண்ணீர்தான் கிடைப்பதாகவும், அதுவும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலமும், அமராவதியின் மூலமும் தண்ணீர் கிடைப்பதாகவும் சொல்கிறார்கள். இந்த நிலையில்தான், `எங்களுக்கு குடிக்கவே தண்ணீர் இல்லை. இந்த நிலையில், கொரோனாவைத் தடுக்க எங்கே கைகழுவுவது?" என்று கேள்வி எழுப்புகிறார்கள் மக்கள்.

இது குறித்து, காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மைப் பிரிவு மாவட்டத் தலைவர் முகமது ஜக்காரியாவிடம் பேசினோம். ``பள்ளபட்டி, தமிழகத்தில் உள்ள பெரிய பேரூராட்சிகளில் ஒன்றாகும். இந்தப் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இங்குள்ள மக்களுக்கு தினமும் 23 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுது. காவிரி மற்றும் அமராவதி ஆறுகளின் கூட்டுக்குடிநீர் திட்டங்களின் மூலம் அந்த அளவு தண்ணீர் இங்கே கொண்டு வரப்படுது. ஆனால், நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு, அருகில் உள்ள சில ஊராட்சிகளில் வெற்றிபெற்ற ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள், தங்கள் பவரைக் காட்டி, பள்ளபட்டி மக்களுக்கு மட்டும் வழங்கவேண்டிய தண்ணீரின் பெரும்பகுதியை தங்கள் ஊராட்சிகளுக்கு எடுத்துட்டுப் போறாங்க. இதனால், பள்ளபட்டியில் கடுமையான தண்ணீர் பஞ்சம். ஒவ்வொரு வார்டுக்கும் தினமும் முறை வச்சு தண்ணீர் கொடுக்கிறாங்க. இதனால், ஒரு வார்டுக்கு குறைந்தபட்சம் 10 நாள்களுக்கு ஒருமுறைதான் தண்ணீர் வருது.

முகமது ஜக்காரியா
முகமது ஜக்காரியா

இது குடிக்கவே பத்தாது. குளிக்கவோ, மத்த பயன்பாட்டுக்கோ தண்ணீர் இருக்காது. இந்த நிலையில், கொரோனா பாதித்தவர்கள் இங்கே அதிகம் உள்ளனர். இங்கு கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த மக்களை வெளியில் போய்வரும்போது கைகழுவச் சொல்கிறார்கள். ஆனால், எங்களுக்கு குடிக்கவே தண்ணீர் இல்லை. இதில் எங்கே கைகழுவுவது... இப்பகுதி பொதுமக்களுக்கு தினமும் ஒரு நபருக்கு 70 லிட்டர் தண்ணீர் கிடைக்க வேண்டும். இதுபற்றி, அதிகாரிகளிடம் கோரியும் நடவடிக்கையில்லை. வறட்சி காலத்தில் ஓரளவிற்காவது தண்ணீர் சப்ளை குறித்து முன்நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இங்குள்ள ஷாநகர் பகுதிகளில் ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீர் இல்லாமல் வறண்டு உள்ளது. இதனால், பள்ளபட்டிக்கு தினமும் 23 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். இல்லையென்றால், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து போராட்டம் நடத்துவோம்" என்றார்.

இது குறித்து, பள்ளபட்டி பேரூராட்சியின் செயல் அலுவலர் செல்வக்குமாரிடம் பேசினோம். ``பள்ளபட்டிக்கு தினமும் 15 லட்சம் வரை குடிநீர் கொடுக்கிறோம். காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட தலைமை இடத்தில் சில பிரச்னைகள் இருக்கு. ஒருவாரத்துல அது சரியாயிடும்.

பள்ளபட்டி பேரூராட்சி
பள்ளபட்டி பேரூராட்சி

அப்போது பள்ளபட்டிக்குத் தேவையான தண்ணீர் கொடுக்கப்படும். நிலைமை அவ்வளவுதான். தேவையில்லாமல் சிலர் இதை கொரோனா வைரஸோடு ஒப்பிட்டு, பிரச்னையாக்குகிறார்கள்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு