Published:Updated:

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: ``எத்தகைய சூழலையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்" - ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின் - திமுக

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்துவருவதால், பொது இடங்களில் மக்கள் அனைவரும் முகக்கவசங்களை கட்டாயமாக அணிய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்.

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: ``எத்தகைய சூழலையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்" - ஸ்டாலின்

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்துவருவதால், பொது இடங்களில் மக்கள் அனைவரும் முகக்கவசங்களை கட்டாயமாக அணிய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்.

Published:Updated:
முதல்வர் மு.க.ஸ்டாலின் - திமுக

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதார அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ``தமிழகத்தில் கொரோனா தொற்று பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அதையடுத்து, ஓமைக்ரான் தொற்று பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. இந்தப் பெருந்தொற்றின் தாக்கத்திலிருந்து மக்கள் தற்போது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். அதேசமயம் மக்களின் வாழ்வாதாரமும் படிப்படியாக உயர்ந்துவருகிறது.

கொரோனா டெஸ்ட்
கொரோனா டெஸ்ட்

இந்தச் சூழலில் கடந்த ஒரு வாரத்தில் டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும், சென்னை ஐஐடி-யிலும் மீண்டும் கொரோனோ பரவல் அதிகரித்துள்ளது. எத்தகைய சூழலையும் எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும். பொது இடங்களில் மக்கள் முகக்கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும். மக்கள் முக்கவசம் அணிவதை உறுதி செய்யும் வகையில் ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா பரவலைத் தடுக்க நம்மிடம் உள்ள மிகப்பெரிய ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. தடுப்பூசி போடாதவர்களுக்குத் தடுப்பூசி போடுவதை உறுதிசெய்வது நம் முன் இருக்கும் சவால். பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் குறைவான நபர்களுக்கே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்’’ என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism