Published:Updated:

`20 ஆண்டுகளில் பயன்படுத்த முடியாத நஞ்சாகிவிடும்!’-தாமிரபரணி பிறந்தநாளில் கலங்கும் நல இயக்கம்

தாமிரபரணி

``சாக்கடைகள் கலக்கப்படுவதால், உயிர்காக்கும் நதி, தற்போது உயிர் போக்கும் நதியாக மாறி வருகிறது. இதற்குக் காரணம் நதியைக் காக்க வேண்டும் எனப் பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததுதான்.”

`20 ஆண்டுகளில் பயன்படுத்த முடியாத நஞ்சாகிவிடும்!’-தாமிரபரணி பிறந்தநாளில் கலங்கும் நல இயக்கம்

``சாக்கடைகள் கலக்கப்படுவதால், உயிர்காக்கும் நதி, தற்போது உயிர் போக்கும் நதியாக மாறி வருகிறது. இதற்குக் காரணம் நதியைக் காக்க வேண்டும் எனப் பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததுதான்.”

Published:Updated:
தாமிரபரணி

நெல்லை மாவட்டம் பாபநாசம் பொதிகை மலையில் உற்பத்தியாகி, 120 கி.மீ தூரம் பயணித்து தூத்துக்குடி மாவட்டம், புன்னக்காயல் கடலில் கலக்கிறது தன் பொருநை நதியாம் தாமிரபரணி. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களின் முழுத் தண்ணீர்த் தேவையையும், விருதுநகர் மாவட்டத்தின் தண்ணீர்த் தேவையில் 30 சதவிகிதத்தையும் பூர்த்தி செய்கிறது. இவ்வாறு தாகத்தினைப் போக்கும் தாமிரபரணி நதிக்கு `தாமிரபரணி மகாத்மியத்தில்' குறிப்பிட்டுள்ளபடி அகத்தியமாமுனி, வைகாசி விசாக நட்சத்திரத்தன்றுதான், தாமிரபரணி நதியை பொதிகை மலையில் உருவாக்கினார் எனச் சொல்லப்படுகிறது. அந்தநாள், தாமிரபரணி நதியின் பிறந்தநாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. வைகாசி விசாகத்தையொட்டி இன்று தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம், தாமிரபரணி ஆற்றில் இறங்கி தாமிரபரணி நல இயக்கத்தின் சார்பில் தாமிரபரணியைக் காக்க உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

தாமிரபரணி
தாமிரபரணி

இதுகுறித்து தாமிரபரணி நல இயக்கத்தைச் சேர்ந்த காளிமுத்து பேசுகையில், ``தாமிரபரணி மகாத்மியம் கூறியபடி, 21 ஆண்டாக தாமிரபரணிக்குப் பிறந்தநாள் கொண்டாடி வருகிறோம். ஒவ்வோர் ஆண்டும் வைகாசி விசாகத்தன்று அதிகாலை 6 மணிக்கெல்லாம், தாமிரபரணியில் நீராடிவிட்டு, தாமிரபரணி நதிக்கரையில் மணலைக் குவித்து வாழை இலையில் தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, பழவகைகள் படையலாகப் படைத்து, ஊதுபத்தி காட்டி, கற்பூர ஆரத்தி எடுத்து, ஆற்றில் மலர்களைத் தூவி வணங்குவோம். அத்துடன், தண்ணீர் செழிப்பிற்காக தாமிரபரணி நதியை வணங்குவோம். இந்த ஆண்டு, கொரோனா தொற்று நோய் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், பூஜை எதுவும் நடத்த இயலவில்லை. இருப்பினும், சமூக இடைவெளி விட்டு தாமிரபரணி ஆற்றங்கரையில் நின்று தாமிரபரணியைப் பாதுகாக்க உறுதிமொழி எடுத்துக்கொண்டோம்” என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேலும், ``தாமிரபரணி ஆறு பாய்ந்தோடும் பகுதிகளிலுள்ள தொழிற்சாலைகள், வீடுகளின் கழிவு நீர் ஆற்றில் நேரடியாகக் கலப்பதால் சுகாதாரக் கேடுகளை ஏற்படுத்தி வருகிறது. அத்துடன், ஆறுமுழுவதும் பல இடங்களில் அமலைச் செடிகள், சீமைக்கருவேல மரங்கள், அழுக்குத்துணிகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

தாமிரபரணி
தாமிரபரணி

தாமிரபரணியில் இதே நிலை தொடர்ந்தால் இன்னும் 20 ஆண்டுகளில் இந்நீர், பயன்படுத்த முடியாத நஞ்சாக மாற வாய்ப்புள்ளதாக நீரியல் ஆய்வு விஞ்ஞானிகளும் எச்சரித்துள்ளனர். 2018-ம் ஆண்டு நடைபெற்ற `தாமிரபரணி மஹாபுஷ்கர நீராட்டு' விழாவின்போது பாபநாசம் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரைகள் தூய்மைப்படுத்தப்பட்டன. ஆனால், மீண்டும் கழிவுகள் கலப்பது தொடர்கிறது. சாக்கடைகள் கலக்கப்படுவதால், உயிர்காக்கும் நதி, தற்போது உயிர் போக்கும் நதியாக மாறி வருகிறது. இதற்குக் காரணம் நதியைக் காக்க வேண்டும் எனப் பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததுதான். எனவே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்தான் இந்தப் பிறந்த நாள் விழாவை விழிப்புணர்வு விழாவாகக் கொண்டாடுகிறோம்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism