Published:Updated:

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: 4-ம் ஆண்டு நினைவுதினம் - பாதுகாப்புப் பணியில் 2,500 போலீஸார்

நினைவஞ்சலி

தூத்துக்குடி தூப்பாக்கிச்சூடு சம்பவத்தின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் உருவப் படங்களுக்கு 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: 4-ம் ஆண்டு நினைவுதினம் - பாதுகாப்புப் பணியில் 2,500 போலீஸார்

தூத்துக்குடி தூப்பாக்கிச்சூடு சம்பவத்தின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் உருவப் படங்களுக்கு 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

Published:Updated:
நினைவஞ்சலி

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வலியுறுத்தி, ஆலையைச் சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், கடந்த 2018-ம் ஆண்டு தொடர்ப் போரட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தின் 100-வது நாளான மே 22-ம் தேதி, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கிப் பேரணியாகச் சென்றனர். அப்போது திடீரெனக் கலவரம் ஏற்பட்டது. போலீஸார் நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கிச்சூட்டில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து ஆலை மூடி சீல் வைக்கப்பட்டது.

அமைதிப் பேரணி
அமைதிப் பேரணி

துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க அப்போதைய அ.தி.மு.க அரசால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையம் கடந்த 4 ஆண்டுகளாக விசாரணை நடத்தி, 3,000 பக்கங்கள் கொண்ட அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்தது. அதே நேரத்தில் சி.பி.ஐ-யும் குற்ற அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் 4-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக முதலில் போராட்டம் தொடங்கிய அ.குமரெட்டியாபுரத்தில், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் உருவப்படத்திற்கு மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர். பின்னர், ``நாசகார ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடி மண்ணில் இருந்து அகற்றும் வரையிலும் போராடுவோம்” என கிராம மக்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

நினைவஞ்சலி
நினைவஞ்சலி

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அ.குமரெட்டியாபுரத்தைச் சேர்ந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளி மகேஷ், "மண்ணையும் காற்றையும் நச்சாக்கிக் கொண்டிருந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வலியுறுத்தி, கடந்த 2018-ம் ஆண்டு இதே கிராமத்தில்தான் ஆலைக்கு எதிரானப் போராட்டத்தினை தொடங்கினோம். இதையடுத்துதான் தெற்கு வீரபாண்டிய புரம், பண்டாரம்பட்டி, மடத்தூர், சில்வர்புரம், பாத்திமாநகர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பகுதிகளிலும் மக்கள் தொடர் போராட்டத்தை தொடங்கினார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்த 100-வது நாள் அறவழிப் பேரணியில் மக்கள் மீது முந்தைய அ.தி.மு.க அரசால் ஏவப்பட்ட காவல்துறையால் தடியடி, துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில், 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து ஆலை மூடப்பட்டது. ஆலை மூடப்பட்டுள்ளதே தவிர மூடிட வலுயுறுத்தியும், ஆலையை இங்கிருந்து அகற்றிட வலியுறுத்தியும் அரசிடம் கோரிக்கை வைத்தோம். இதற்கென அமைச்சரவையைக்கூட்டி சிறப்புத் தீர்மானம் இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி முந்தைய அரசிடமும், தற்போதைய அரசிடமும் இந்த கோரிக்கையை முன்வைத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

ஸ்டெர்லைட் ஆலைக்கு முன்பாக போலீஸார் பாதுகாப்பு
ஸ்டெர்லைட் ஆலைக்கு முன்பாக போலீஸார் பாதுகாப்பு

சுற்றுச்சூழலுக்காகப் போராடி மக்கள் உயிரிழந்தது தூத்துக்குடியில் மட்டும்தான். துப்பாக்கிச்சூடு சம்பந்தமாக விசாரணை நடத்தி சி.பி.ஐ-யின் குற்றப்பத்திரிகையில் போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் 101 பேரை குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்துள்ளார்கள். இதில், தடியடி, துப்பாக்கிச்சூடு நடத்திய போலீஸார் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. இது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.

ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் குழு அமைத்து மீண்டும் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரணை செய்ய வேண்டும். துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் நினைவாக நினைவுத்தூண் அமைக்க வேண்டும். மீண்டும் இந்த ஆலையைத் திறக்க முயற்சித்தால், இதே குமரெட்டியாபுரத்தில் மீண்டும் போராட்டத்தை துவக்குவோம்" என்றார். இந்த நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில், வெளி மாவட்டத்தினர் யாரும் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்படவில்லை. விதிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.

போலீஸ் பாதுகாப்பு
போலீஸ் பாதுகாப்பு

ஸ்டெர்லைட் ஆலை, பணியாளர்கள் குடியிருப்பு, ஆலைக்கு எதிராகப் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட பகுதிகள், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் கல்லறைகள், வீடுகள், முக்கிய சந்திப்புகள் என, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 2,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாநகரப் பகுதியைச் சுற்றியுள்ள 63 அரசு மதுபானக்கடைகளும் மூடப்பட்டுள்ளன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism