Published:Updated:

``70 வருஷமா இங்கே தான் இருக்கோம்; இப்ப ரயில்வே நிலம் என்கிறார்கள்” -பெரம்பூர் பகுதிக்கு நேரடி விசிட்

பெரம்பூர்

``ரயில்வே துறையும் விரைவில் தனியார் மயமாக்கப்படலாம். அதற்கான வாய்ப்புகள் ஏராளம். அப்படி இருக்கையில் பெரும் முதலாளியின் லாபத்திற்கு மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் சூழல் ஏற்படும்” என்றார் மோகன்.

``70 வருஷமா இங்கே தான் இருக்கோம்; இப்ப ரயில்வே நிலம் என்கிறார்கள்” -பெரம்பூர் பகுதிக்கு நேரடி விசிட்

``ரயில்வே துறையும் விரைவில் தனியார் மயமாக்கப்படலாம். அதற்கான வாய்ப்புகள் ஏராளம். அப்படி இருக்கையில் பெரும் முதலாளியின் லாபத்திற்கு மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் சூழல் ஏற்படும்” என்றார் மோகன்.

Published:Updated:
பெரம்பூர்

சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தின் பின்புறம் ராஜீவ் காந்தி நகர், சேமத்தம்மன் கோயில், ஏகாந்திபுரம் ஆகிய இடங்களில் சுமார் 1200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிசை வீடுகளிலும், கட்டட வீடுகளிலும் 70 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருகின்றனர். அங்கு வாழும் பெரும்பான்மையினர் தினக் கூலி வேலைக்குச் செல்பவர்கள். இந்த நிலையில், கடந்த ஏப்ரல் ஐந்தாம் தேதி, அங்குள்ள நிலம் ரயில்வேக்கு சொந்தமான நிலம் என்றும், அங்கு வாழும் மக்கள் ரயில்வேக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் ரயில்வே துறையில் இருந்து நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஏப்ரல் 5-ம் தேதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து ராஜீவ் காந்தி நகர், ஏகாந்திபுரம், சேமத்தம்மன் கோவில் பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்தோம்.

பெரம்பூர்
பெரம்பூர்

அங்கு வாழ்ந்து வரும் சேட்டு என்பவர் பேசுகையில், ``நாங்கள் கடந்த 70 ஆண்டுகளாக இங்கு வாழ்ந்து வருகிறோம். நாங்கள் வாழும் நிலமானது ரயில்வேக்கு சொந்தமான நிலம் என்றும் விரைவில் வீடுகளை அகற்ற உள்ளதாகவும் எங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அதில், `15 நாள்களுக்குள் ஏன் இந்த வீடுகளை அகற்றக்கூடாது?’ என்பதற்குச் சரியான காரணங்களை முன்வைத்து விளக்கம் வேண்டும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொஞ்ச நாள்களுக்கு முன்னாடி, `பூமிக்கு அடியில் மெட்ரோ(underground metro) செல்ல இருப்பதால் வீடுகள் சேதம் அடைய வாய்ப்புள்ளது; அப்படிச் சேதமடைந்தால் அதற்கான மாற்றை ஏற்படுத்தித் தருகிறோம்” என்று சொல்லி இந்தப்பகுதியில் எத்தனை வீடுகள் இருக்கிறதென்று சர்வே எடுத்தார்கள். வீடுகள் அகற்றப்பட உள்ளனர் என்று அப்போது எங்களுக்குத் தெரியாது. அந்த சர்வேக்கும் ரயில்வே நோட்டீஸுக்கு சம்பந்தம் இருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``70 வருஷமா இங்கே தான் இருக்கோம்; இப்ப ரயில்வே நிலம் என்கிறார்கள்” -பெரம்பூர் பகுதிக்கு நேரடி விசிட்

சேமத்தம்மன் கோயில் பகுதியில் 1996-2001 ஆண்டு காலகட்டத்தில் கருணாநிதி ஆட்சியில் இருக்கும் போது 150 க்கும் மேற்பட்ட வீடுகள் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. அரசால் இந்த பகுதி அங்கீகரிக்கப்பட்ட குடிசைப்பகுதி என்பதற்கும் எங்களிடம் சான்றிதழ் இருக்கிறது” எனறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தொடர்ந்து ``இந்த நிலத்தில் குடிசை வீடுகளிலும் கட்டட வீடுகளிலும் 70 ஆண்டுகளாக மக்கள் வாழ்ந்து வரும் நிலையில் மக்களின் அடிப்படை வசதியான மருத்துவமனை, கல்வி, வாழ்வாதாரம் போக்குவரத்து எல்லாம் அருகிலேயே இருப்பதால் மக்களது வாழ்வு சற்று சுலபமாக இருக்கிறது. ஆனால் வீடுகளை இடித்துவிட்டால் அவர்கள் வாழ்க்கையும் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகும். இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அருகில் உள்ள பள்ளி கல்லூரிகளில் படித்து வருகிறார்கள். திடீரென வீடுகளை அகற்றினால் அவர்கள் கல்வி கேள்விக்குறியாகும்” என்றார் சேட்டு.

இது தொடர்பாக அம்பேத்கர் பொதுவுடைமை முன்னணியின் மோகன் என்பவர் பேசுகையில், ``இங்கு வாழும் மக்கள் தண்ணீருக்கான வரியும், மின்சார கட்டணமும் கட்டிவருகின்றனர். அங்கு வாழும் மக்களிடம் ஓட்டு உரிமை, ஆதார் கார்டு இருக்கிறது. இந்த மக்கள் இங்கு வாழ்வதற்கான அனைத்து உரிமையும் சட்ட அடிப்படையிலும் மனிதாபிமான அடிப்படையிலும் இருக்கிறது .

``70 வருஷமா இங்கே தான் இருக்கோம்; இப்ப ரயில்வே நிலம் என்கிறார்கள்” -பெரம்பூர் பகுதிக்கு நேரடி விசிட்

ஒன்றிய அரசின் ரயில்வே துறைக்கென தனி நிலம் கிடையாது. மாநில அரசால் நிலம் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுக்கும், இடையேயான நிலப்பரிமாற்றத்திற்கு மக்கள் பலியாகி வருகின்றனர்" என்றார்.

மேலும், ``தற்போதுள்ள ஆட்சியில் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயம் ஆகிக் கொண்டிருக்கும் சூழல் நிலவுகிறது. ரயில்வே துறையும் விரைவில் தனியார்மயமாக்கப்படலாம். அதற்கான வாய்ப்புகள் ஏராளம். அப்படி இருக்கையில் பெரும் முதலாளியின் லாபத்திற்கு மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் சூழல் ஏற்படும்” என்றார்

இந்தப்பிரச்சினை குறித்து சென்னை மேயர் பிரியாவிடம் பேசுகையில், ``அந்த பகுதியில் உள்ள வீடுகள் அகற்றப்படுவதை பேச்சுவார்த்தை மூலம் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறோம்” என்றார்.

தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட குடிசைப்பகுதி என்றால் அங்கு வாழும் மக்களுக்கு மாற்று இடம் கொடுக்கப்படாமல் அகற்றக் கூடாது என்கிறது சட்டம் . சேமத்தம்மன் கோயிலில் கட்டப்பட்ட 150-க்கு மேற்பட்ட வீடுகளுக்கு மாற்று வீடுகள் வழங்கப்பட்டாலும், மற்ற வீடுகள் அகற்றப்பட்டால் மீதமுள்ள மக்கள் வீடு இல்லாமல் தவிப்பார்கள் என்று வருந்துகிறார்கள் அப்பகுதியினர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism