Published:Updated:

`எங்க வாழ்வாதாரமே போயிடும்...’ - ஊரடங்கு அறிவிப்புக்கு எதிராகப் போராடும் கொடைக்கானல்வாசிகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
போராட்டம் நடத்தும் கொடைக்கானல்வாழ் மக்கள்
போராட்டம் நடத்தும் கொடைக்கானல்வாழ் மக்கள்

நாளை முதல் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரவிருப்பதாலும், அதில், சுற்றுலாத்தலங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாலும், சுற்றுலாவை நம்பி வாழும் கொடைக்கானல்வாழ் மக்கள், போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திண்டுக்கல் மாவட்டத்திலிருக்கும் கொடைக்கானல், மலைகள் சூழ் சுற்றுலாத்தளமாக இருக்கிறது. உள்ளூர், வெளி மாவட்டம், வெளி மாநிலம் என ஆண்டுதோறும் பல லட்சம் சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானலுக்கு வருகைதருகின்றனர். இந்தநிலையில், கடந்த ஆண்டு தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து, சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டன. கொடைக்கானலுக்கு வெளயூரிலிருந்து செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டது. இதனால், கொடைக்கானல் நகரில் வசிக்கும் சுற்றுலாவை மட்டுமே நம்பி இருக்கும், சாலையோரக் கடை வைத்திருப்பவர்கள், டாக்ஸி ஓட்டுநர்கள், குதிரை வைத்திருப்போர், சுற்றுலா வழிகாட்டிகள் என நூற்றுக்கணக்கானோர் வேலை இழந்தனர். அவர்களின் குடும்பத்தினர் உணவுக்கே கஷ்டப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

போராட்டம் நடத்தும் கொடைக்கானல்வாழ் மக்கள்
போராட்டம் நடத்தும் கொடைக்கானல்வாழ் மக்கள்
மதுரை: கொடைக்கானல், குற்றாலம் இருக்கட்டும்... குளிர்ச்சியான சின்ன சுருளி போயிருக்கீங்களா?

இந்தநிலையில், தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துவரும் சூழலில், தமிழக அரசு, பல்வேறு கட்டுப்பாடுகளை பிறப்பித்துள்ளது. அவை நாளை முதல் அமல்படுத்தப்படுகின்றன. அவற்றில், சுற்றுலாத்தலங்களுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் நபர்கள் செல்வதற்குத் தடைவிதிக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், நாளை முதல் கொடைக்கானலுக்குச் செல்ல சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதியில்லை. தற்போது கொடைக்கானலில் தங்கியுள்ள வெளியூர் நபர்களும் தங்கள் சொந்த ஊருக்குப் புறப்பட்டுவருகின்றனர்.

அடைக்கப்பட்டுள்ள கடைகள் - கொடைக்கானல்
அடைக்கப்பட்டுள்ள கடைகள் - கொடைக்கானல்
சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை, வெறிச்சோடும் கொடைக்கானல்..! (படங்கள்)

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த ஆண்டுபோலவே, தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அஞ்சியிருக்கும் கொடைக்கானல்வாழ் மக்கள், தமிழக அரசின் ஊரடங்கு உத்தரவில், சுற்றுலாத்தலங்களுக்கு கட்டுப்பாடுகளுடன் விலக்கு அளிக்க வலியுறுத்தி, மூஞ்சிக்கல் என்ற இடத்தில் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தில், சுற்றுலாவை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள சுமார் 500 பேர் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

போராட்டம் நடத்தும் கொடைக்கானல்வாழ் மக்கள்
போராட்டம் நடத்தும் கொடைக்கானல்வாழ் மக்கள்

அவர்கள் கூறும்போது, ``கடந்த ஆண்டு நாங்கள் சாப்பாட்டுக்கே ரொம்ப கஷ்டப்பட்டோம். இப்பதான் வாங்குன கடனையெல்லாம் அடைச்சுக்கிட்டு இருக்கோம். மே மாசம் சீஸ்சன் இருக்குறதுனால, மொத்தக் கடனையும் அடைச்சுறலாம்னு நினைச்சோம். திடீர்னு இப்படி ஒரு அறிவிப்பை தமிழக அரசு அறிவிச்சு எங்களைக் கலங்கவெச்சுட்டாங்க. கட்டுப்பாடுகளோட தளர்வு அறிவிச்சாலே நாங்க பிழைச்சுக்குவோம். இந்த சீஸனும் எங்களுக்குப் போயிருச்சுன்னா, எங்க வாழ்வாதாரமே போயிடும். பிச்சைதான் எடுக்கணும்” எனக் கலங்குகின்றனர்.

செந்தில்குமார்
செந்தில்குமார்
கொரோனாவை விரட்டிய கொடைக்கானல்! -ஒற்றுமை வென்ற கதை...

போராட்டம் ஒருபுறம் இருக்க கொடைக்கானல், பழநி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியாக இருப்பதால், பழநி எம்.எல்.ஏ செந்தில்குமார், இன்று காலை, திண்டுக்கல் மாவட்ட கலெக்டரிடம், கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், ``கொடைக்கானல் நகர மக்கள் சார்பில், மக்கள் பிரதிநிதி என்ற முறையில், கலெக்டரைச் சந்தித்து கோரிக்கைவைத்தேன். கொடைக்கானலிலுள்ள கோட்டாட்சியர் தலைமையில், அனைத்துத் தரப்பினரையும் அழைத்துப் பேசி, இதற்குத் தீர்வுகாணப்படும் என என்னிடம் சொன்னார்கள்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு