Published:Updated:

அதிக ரத்தப்போக்கால் மயக்கம்; பெரம்பலூரில் சட்டவிரோத கருக்கலைப்பால் பறிபோன செவிலியர் உயிர்!

கருக்கலைப்பு ( Pixabay )

மருந்துக்கடையில் வேளாங்கன்னி மயங்கிக் கிடப்பதாக வேளாங்கன்னியின் தாயார் கேத்தரினுக்குத் தகவல் தெரிவிக்க, பதறிப்போன வேளாங்கன்னியின் குடும்பத்தினர் இளையராஜாவின் மருந்துக் கடைக்கு விரைந்து வர, கடைக்கு வந்த வேளாங்கன்னி நெஞ்சு வலியால் மயங்கி விழுந்ததாகக் கூறினார் இளையராஜா.

அதிக ரத்தப்போக்கால் மயக்கம்; பெரம்பலூரில் சட்டவிரோத கருக்கலைப்பால் பறிபோன செவிலியர் உயிர்!

மருந்துக்கடையில் வேளாங்கன்னி மயங்கிக் கிடப்பதாக வேளாங்கன்னியின் தாயார் கேத்தரினுக்குத் தகவல் தெரிவிக்க, பதறிப்போன வேளாங்கன்னியின் குடும்பத்தினர் இளையராஜாவின் மருந்துக் கடைக்கு விரைந்து வர, கடைக்கு வந்த வேளாங்கன்னி நெஞ்சு வலியால் மயங்கி விழுந்ததாகக் கூறினார் இளையராஜா.

Published:Updated:
கருக்கலைப்பு ( Pixabay )

சட்டவிரோத கருக்கலைப்பால், பெரம்பலூரில் இளம் செவிலியர் ஒருவரே உயிரிழந்துள்ள சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் நடைபெறும் கருக்கலைப்புகளில் 67 சதவிகிதம் பாதுகாப்பற்ற சூழலில் நடைபெறுவதாக `ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதியம்’ அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், தமிழகத்தில் அத்தகைய கருக்கலைப்புகளால் உயிரிழப்புகள் நிகழ்வது தொடர்கதையாகி வருகிறது.

சட்டவிரோத கருக்கலைப்பால் பறிபோன உயிர்
சட்டவிரோத கருக்கலைப்பால் பறிபோன உயிர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகாவில் உள்ள லெப்பைகுடிக்காடு பேரூராட்சிக்கு உட்பட்ட சன்னசியப்பா கோயில் தெருவைச் சேர்ந்த வெற்றிவேல் என்பவரின் மனைவி வேளாங்கன்னி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். வெற்றிவேல் கோவையில் தங்கி அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். 33 வயது செவிலியரான வேளாங்கன்னி, சு.ஆடுதுறை கிராமத்தில் சிறு மருந்தகம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிலையில், கடந்த 30-ம் தேதி இரவு கடலூர் மாவட்டம், வேப்பூர் தாலுகா, சிறுபாக்கம் கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா என்பவர், அதே லெப்பைகுடிக்காடு அருகிலுள்ள அத்தியூரில் தான் நடத்தி வரும் மருந்துக்கடையில் வேளாங்கன்னி மயங்கிக் கிடப்பதாக வேளாங்கன்னியின் தாயார் கேத்தரினுக்குத் தகவல் தெரிவித்துள்ளார் பதறிப்போன வேளாங்கன்னியின் குடும்பத்தினர் இளையராஜாவின் மருந்துக் கடைக்கு விரைந்து வந்து பார்த்திருக்கின்றனர். அப்போது, கடைக்கு வந்த வேளாங்கன்னி நெஞ்சு வலியால் மயங்கி விழுந்ததாகக் கூறினார் இளையராஜா.

உறவினர்கள்
உறவினர்கள்

மேலும், உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தால் அவரை காப்பாற்றி விடலாம் எனவும் கூறியிருக்கிறார். இதனையடுத்து வேளாங்கன்னியை மீட்டு, அவரை சிகிச்சைக்காக லெப்பைகுடிக்காட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்திருக்கிறார் அவரின் தாய் கேத்ரின். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவிக்க, குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். தொடர்ந்து, பிரேதப் பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது வேளாங்கன்னியின் உடல்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நேற்று வேளாங்கன்னியின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், கருக்கலைப்பு செய்ததில், உதிரப்போக்கு ஏற்பட்டு அவர் உயிரிழந்திருக்கலாம் என முதல் கட்ட அறிக்கையில் தெரிய வந்திருப்பதாக போலீஸார் கூறவே, தன் மகள் வேளாங்கன்னி சாவில் மர்மம் இருப்பதாக மங்களமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார் கேத்ரின்.

பெரம்பலூர்
பெரம்பலூர்

அதனடிப்படையில், `சந்தேக மரணம்’ என வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே மருந்துக்கடை உரிமையாளரான இளையராஜா தலைமறைவாகி விட, அவரை காவல்துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்துள்ள இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சட்டவிரோத கருக்கலைப்புகள் குறித்து பெரம்பலூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். ``7 வாரங்கள் வரையிலான கர்ப்பத்தை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்களின் ஆலோசனைப்படி மாத்திரைகள் மூலமே கலைக்கலாம். 10 வாரங்களுக்கு மேற்பட்ட கர்ப்பத்தைஅனைத்து அரசு மருத்துவமனைகளிலும், 20 வாரங்களுக்கு மேற்பட்ட கர்ப்பத்தை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் பாதுகாப்பாகக் கருக்கலைப்பு செய்துகொள்ளலாம். எனவே, கருக்கலைப்புக்கு இதுபோல சுயமாக மருந்துகள் எடுப்பதைத் தவிர்த்து, தங்கள் பகுதி கிராம சுகாதார செவிலியர்களைத் தொடர்புகொண்டு பொதுமக்கள் தேவையான ஆலோசனைகளைப் பெற வேண்டும்” என்றனர்.

கரு
கரு

இந்தியாவைப் பொறுத்தவரை, கருக்கலைப்பு தொடர்பான சிக்கல்களால் ஒவ்வொரு நாளும் 8 பெண்கள் உயிரிழப்பதாக ஆய்வுகள் கூறகின்றன. இந்நிலையில், சமீபத்தில் திருச்செங்கோடுவை சேர்ந்த ரம்யா என்ற பெண் கருக்கலைப்பு செய்தபோது உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. சட்ட விரோத கருக்கலைப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க சுகாதாரத்துறை தேவையான ஆலோசனைகளையும், விழிப்புணர்வையும் மக்களுக்குத் தந்து, அதில் வியாபார நோக்கில் ஈடுபடும் குற்றவாளிகளைக் களைய வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism