Published:Updated:

Perarivalan:"உண்மையிலேயே வெடிகுண்டு தயாரிச்சது யாருன்னு கண்டுபிடிக்கனும்"- மனம் திறக்கும் பேரறிவாளன்

அற்புதம்மாள் - பேரறிவாளன்

"மகன் தூக்கில் இருந்து தப்பிக்கவேண்டும். நிரபராதியாக விடுதலையாக வேண்டும் என்பதுதான் அவரின் தவிப்பாக இருந்தது. இவ்வளவு காலம் அவர்களை வேலை வாங்கித் தவறு செய்துவிட்டேன் என்ற குற்ற உணர்ச்சி இருக்கிறது." - பேரறிவாளன்

Perarivalan:"உண்மையிலேயே வெடிகுண்டு தயாரிச்சது யாருன்னு கண்டுபிடிக்கனும்"- மனம் திறக்கும் பேரறிவாளன்

"மகன் தூக்கில் இருந்து தப்பிக்கவேண்டும். நிரபராதியாக விடுதலையாக வேண்டும் என்பதுதான் அவரின் தவிப்பாக இருந்தது. இவ்வளவு காலம் அவர்களை வேலை வாங்கித் தவறு செய்துவிட்டேன் என்ற குற்ற உணர்ச்சி இருக்கிறது." - பேரறிவாளன்

Published:Updated:
அற்புதம்மாள் - பேரறிவாளன்

“நான் யாரைப் பார்த்தும் பயந்தது கிடையாது. நான் பயந்த ஒரே நபர் அம்மாதான். அவரின் தனிப்பட்ட வாழ்க்கையை நான் மொத்தமாகத் திருடியிருக்கிறேன். அந்த குற்ற மனப்பான்மையில் தவித்திருக்கிறேன். அழுதிருக்கிறேன். அவருக்கு எந்த பலனும் நான் கொடுக்கவில்லை.” அற்புதம்மாள் குறித்து பேசும்போதெல்லாம் பேரறிவாளனின் கண்கள் பனிக்கின்றன.

பேரறிவாளன்
பேரறிவாளன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“இரண்டாவது முறையாகப் பிரசிவித்து, எனக்கு சுதந்திரக் காற்றைக் கொடுத்திக்கிறார்.” என்று நெகிழ்கிறார். அவரிடம் சிறையில் இருந்து நடத்திய சட்டப் போராட்டம் குறித்து கேட்டோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“2005 தகவல் அறியும் உரிமைச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, இந்திய சிறை வாசிகளில் அதை அதிகம் பயன்படுத்தினது நானாகத்தான் இருப்பேன். ஆரம்பத்தில் அதில் பெரிய அறிவு இல்லை. அதற்கு மேல் முறையீடு செய்யலாம் என்பது கூட தெரியாது. அதன்பிறகுதான் வழக்கறிஞர்கள் பிரபு, பாரி எனக்கு சில புத்தகங்களைக் கொடுத்தனர்.

தகவல் அறியும் உரிமை சட்டம்
தகவல் அறியும் உரிமை சட்டம்

மஹாராஷ்டிராவைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமை ஆர்வலர் வெங்கடேஷ் நாயக் எனக்கு பெரிய உதவியாக இருந்தார். தமிழ்நாடு தகவல் ஆணையத்திடம், சிறையில் இருந்தபடி வீடியோ கான்பிரன்ஸில் வழக்காடி வெற்றி பெற்றிருக்கிறேன். மத்திய தகவல் ஆணையத்திடமும் நான்கு முறை வழக்காடியிருக்கிறேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதில் சிறைவாசிகள் சம்பந்தப்பட்ட முக்கியமான உத்தரவை வாங்கியிருக்கிறேன். எப்படி நீதிமன்ற தீர்ப்பு வெளிப்படையான ஆவணமோ, அதேபோல சிறைவாசிகளுக்குத் தண்டனை குறைப்பு வழங்குகிறார்கள் என்பது ரகசிய ஆவணம் கிடையாது என்று உத்தரவைப் பெற்றேன். அதை இன்று நிறைய சிறைவாசிகள், வழக்கறிஞர்கள் பயன்படுத்துகின்றனர்.

பேரறிவாளன்
பேரறிவாளன்

அமைச்சரவை முடிவு ரகசிய ஆவணம். ஆனால், அவர்கள் முடிவுக்கு வர தேவையான ஆவணங்கள் ரகசியம் கிடையாது என்கிற வரலாற்று சிறப்பு மிக்கத் தீர்வை என் மரண தண்டனை வழக்கில் மத்திய தகவல் ஆணையம் வழங்கினார்கள்.

அதில் ஒன்றுதான் சஞ்சை தத் முன்கூட்டியே விடுதலையான விவாதத்தை ஏற்படுத்தியது. நீதிமன்ற அமைப்பில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை அது வெளிச்சம் போட்டுக் காண்பித்தது. சாமானியர்களின் பிரதிநிதியாக தான் முன்னெடுத்தேன்.”

பேரறிவாளன்
பேரறிவாளன்

என்றவரிடம், “ஏதாவது ஒரு கட்டத்தில் இந்தப் போராட்டம் எல்லாம் போதும் ஓய்வெடுங்கள் என அம்மாவிடம் சொல்லியிருக்கிறீர்களா?” என கேட்டோம்.

சிறிது யோசனைக்கு பிறகு தொடர்ந்த பேரறிவாளன் “என்னால் அப்படி சொல்ல முடியாது. தூக்கு உறுதி செய்யப்பட்டபோதுகூட சிறைக்குள் நான் எல்லோரிடமும் சஜகமாகத்தான் இருப்பேன். யாரைப் பார்த்தும் பயந்தது கிடையாது. நான் பயந்த ஒரே நபர் அம்மாதான். அவரின் தனிப்பட்ட வாழ்க்கையை நான் மொத்தமாக திருடியிருக்கிறேன். அந்த குற்ற மனப்பான்மையில் தவித்திருக்கிறேன். அழுதிருக்கிறேன். அவருக்கு எந்தப் பலனும் நான் கொடுக்கவில்லை. மகன் தூக்கில் இருந்து தப்பிக்க வேண்டும். நிரபராதியாக விடுதலையாக வேண்டும் என்பதுதான் அவரின் தவிப்பாக இருந்தது.

அற்புதம்மாள்
அற்புதம்மாள்

இவ்வளவு காலம் அவர்களை வேலை வாங்கித் தவறு செய்துவிட்டேன் என்ற குற்ற உணர்ச்சி இருக்கிறது. நிறுத்திக்கோம்மா என்று நான் சொல்லியதில்லை. நான் சொன்னாலும் அவர் கேட்க மாட்டார். அதற்கான இடத்தையே கொடுக்க மாட்டார்.” என அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போது ஓய்வில் இருந்த அற்புதம்மாள் அங்கே வந்தார்.

கலங்கிய கண்களை சட்டென துடைத்தார் பேரறிவாளன். பாசப் போராட்டம், நெகிழ்ச்சியைக் கடந்து இயல்பில் அம்மா மகனுக்கு இருக்கும் நக்கல் கேலியுடன் பரஸ்பரம் மாறி மாறி கலாய்த்து சிரித்து கொண்டிருந்தனர். போட்டோ எடுக்க இருவரையும் அமரச் சொன்னபோது,

அற்புதம்மாள் - பேரறிவாளன்
அற்புதம்மாள் - பேரறிவாளன்

“அற்புதம்மா குள்ளம். இப்படி உக்காரும்மா.” என்று கலாய்த்தார் அறிவு. அதற்கு அற்புதம்மா, “நான் குள்ளம்தான். உனக்கென்னப்பா.. நீ நல்லா சிரிச்சுட்டே போஸ் கொடு.” என்றார்.

மீண்டும் தொடர்ந்த பேறிவாளன், “எனக்கு குழந்தைகள் ரொம்பப் பிடிக்கும். எல்லாவற்றையும் மறந்து குழந்தைப் பட்டாளத்துடன் மகிழ்ச்சியாக இருக்க ஆசை. இன்றைக்கு குழந்தைகள் மிகவும் புத்திசாலியாக இருக்கிறார்கள். நமக்கெல்லாம் அந்த காலத்தில் இப்படி அறிவு இருந்திருக்குமா என்று யோசித்து கூட பார்க்க முடியவில்லை. அவர்களிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொள்கிறேன்.

சிறைக்குள் வரும் சில அதிகாரிகள் ‘எப்படி இத்தனை நாள்கள் இங்கு வாழ்ந்தீர்கள்?’ என கேட்டுள்ளனர். மூன்று விஷயங்கள் தான் எனக்கு உறுதியாக இருந்தன. அதில் முதன்மையானது வாசிப்பு. பல்வேறு காலகட்டங்களில் நிறைய வாசித்திருக்கிறேன். கடந்த 12 ஆண்டுகாலமாக சட்டம் மட்டும் தான் வாசிக்கிறேன். ஒரு தீர்ப்பையே 30 முறை வாசித்திருக்கிறேன்.

அதேபோல கலை உணர்ச்சி உண்டு. நிறைய நாடகம் இயக்கி நடித்திருக்கிறேன். நடனமாடியிருக்கிறேன். சிறைக்குள்ளேயே புரட்சிகவிஞர் பாரதிதாசன் கலை பண்பாட்டு கழகம் வைத்திருந்தோம். விளையாட்டிலும் ஆர்வம் உள்ளது. கைபந்து, இறகுப்பந்தில் ஆர்வம் அதிகம். இவைதான் என் எண்ண ஓட்டங்களை சீராக வைக்க உதவியது.

பறை இசைக்கும் பேரறிவாளன்
பறை இசைக்கும் பேரறிவாளன்

அரசியல் தலைவர்கள், இயக்கங்கள், மனித உரிமை அமைப்புகள் எல்லாற்றையும் கடந்து வெளியே தெரியாத பலர் எனக்கு ஆதரவாக இருந்துள்ளனர். ஆரம்பத்தில் இருந்தே ‘விகடன்’ உண்மைக்கு ஆதரவாக செய்தி வெளியிட்டனர்.

அம்மாவின் தியாகம், உண்மையை சட்டரீதியாக ஆவணப்படுத்தியதற்கு பின்னணியில் மிகப்பெரிய ஒரு டீம் இருந்தது. மற்றவர்கள் வருவார்கள் செல்வார்கள். இந்த டீமுக்கு 24 மணி நேரமும் அதுதான் வேலை. நான் மிகவும் கொடுத்து வைத்தவன். அந்த டீம் யாருக்கும் அமையாது. சமூகத்தில் இப்போது நல்லவர்கள் தான் அதிகம் வீழ்ந்து போகிறார்கள். இதில் இருந்து எழுந்து நிற்க 31 ஆண்டுகள் ஆகிவிட்டது.

பேரறிவாளன்
பேரறிவாளன்

இந்த வலிக்கான விடை ஒரு நிரபராதிக்கு 31 ஆண்டுகளாக இல்லாமல் 3 மாதங்களாக, 3 நாள்களாக சுருங்கிவிடும் என நம்புகிறேன். உண்மையானவர்கள் எப்போதும் தலை தாழ்த்த வேண்டிய அவசியமில்லை. தலை நிமிர்ந்து, துன்பத்தை எதிர்கொள்ள பழக வேண்டும்.” என்றார் உறுதியான குரலில். மேலும் பல வீடியோவில்....

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism