Published:Updated:

ராமநாதபுரம்: பெற்றோரை இழந்த சிறுமி... பெரியப்பாவே அத்துமீறிய கொடூரம்! - போக்சோ வழக்கில் கைது

சாயல்குடி காவல் நிலையம்

சாயல்குடி அருகே பள்ளி மாணவியை மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த உறவினரை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

ராமநாதபுரம்: பெற்றோரை இழந்த சிறுமி... பெரியப்பாவே அத்துமீறிய கொடூரம்! - போக்சோ வழக்கில் கைது

சாயல்குடி அருகே பள்ளி மாணவியை மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த உறவினரை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

Published:Updated:
சாயல்குடி காவல் நிலையம்

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே மாரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரகுநாதன் (46). இவருடைய மனைவியின் தங்கையும், அவருடைய கணவரும் சில வருடங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் அடுத்தடுத்து இறந்துவிட்டனர். பெற்றோர்கள் இருவரும் இறந்துபோனதால் அவர்களுடைய மகளை பெரியம்மாவான ரகுநாதனின் மனைவி தனது அரவணைப்பில் பராமரித்துவந்திருக்கிறார்.

சிறுமியை தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பள்ளி விடுதியில் தங்கிப் படிக்கவைத்திருக்கிறார். கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக பள்ளி மற்றும் விடுதிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதன் காரணமாக சிறுமி பெரியம்மாவின் வீட்டில் வந்து தங்கி ஆன்லைன் மூலம் 11-ம் வகுப்பு படித்துவந்தார்.

கைதுசெய்யப்பட்ட ரகுநாதன்
கைதுசெய்யப்பட்ட ரகுநாதன்

இந்நிலையில் ரகுநாதன் தன் மனைவி வேலைக்குச் சென்ற பின்பு, வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் அடிக்கடி பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுவந்திருக்கிறார். பின்னர் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இது குறித்துத் தன் மனைவியிடம் கூறினால் வீட்டைவிட்டு வெளியே அனுப்பிவிடுவேன் என மிரட்டி, தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துவந்திருக்கிறார். இதனால் சிறுமி கர்ப்பம் அடைந்திருக்கிறார்.

உடல்ரீதியாக பாதிப்படைந்த சிறுமி மனமுடைந்து நடந்த சம்பவங்களைத் தன் பெரியம்மாவிடம் கூறியிருக்கிறார். அதைக் கேட்டு அதிர்ச்சியும் கோபமும் அடைந்த அவர் சாயல்குடி காவல் நிலையத்தில் கணவர்மீது புகார் அளித்தார். அதன்பேரில் ரகுநாதன்மீது போலீசார் போக்சோ வழக்கு பதிவுசெய்தனர். இதையடுத்து ரகுநாதன் தலைமறைவானார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தொடர்ந்து, சைபர் க்ரைம் போலீஸாரின் உதவியை நாடிய சாயல்குடி போலீசார், ரகுநாதனின் செல்போன் சிக்னல் மூலம் அவர் தூத்துக்குடியில் பதுங்கியிருப்பதைத் தெரிந்துகொண்டனர்.

ராமநாதபுரம் நீதிமன்றம்
ராமநாதபுரம் நீதிமன்றம்

இரவோடு இரவாக தூத்துக்குடிக்கு விரைந்த காவல்துறையினர் பேருந்து நிலையம் அருகேயுள்ள குடியிருப்புப் பகுதியில் பதுங்கியிருந்த ரகுநாதனைக் கைதுசெய்து சாயல்குடி காவல் நிலையத்துக்குக் கொண்டுவந்தனர். பின்னர் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தந்தை ஸ்தானத்தில் இருந்து மகளாகப் பார்த்துக்கொள்ள வேண்டிய பெரியப்பாவே சிறுமி என்றும் பாராமல் பாலியல் வன்கொடுமை செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.