Published:Updated:

ஏனெனில், அவர் பெரியார்! #MyVikatan

periyar
News
periyar ( Vikatan )

'என் கருத்தை மறுக்க உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால், என் கருத்தை வெளியிட எனக்கு உரிமை உண்டு' என்பதுதான் பெரியாரின் கொள்கை. தனது கருத்துக்கு எதிரானவர்கள் அனைவவரையும், தன்னை விட உயர்வாக மதித்தவர் அவர்.

30 ஆண்டுகள் கழித்து, செருப்பு வீசப்பட்ட அதே இடத்தில் பெரியாருக்கு வெண்கல சிலை வைக்கப்பட்டது. "செருப்பொன்று வீசினால் சிலையொன்று முளைக்கும்" என்று கவிஞர் கருணானந்தம் எழுதினார்.

கடலூர் மஞ்சக்குப்பத்தில் கூட்டத்தை முடித்துவிட்டு , திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தை நோக்கி கைவண்டியில் சென்றுகொண்டிருந்தார் பெரியார்.நள்ளிரவு நேரம். பகலிலேயே அவர் மீது கல், சாணி விழும். அனைத்தையும் பார்த்தும் பயம் இல்லாமல்தான் பேசுவார். திடீரென்று கயிறு போல் ஏதோ ஒன்று அவர் மேல் விழுந்த து. அது பச்சைப் பாம்பு . எடுத்து தூக்கிப்போட்டு விட்டு வண்டியை வேகமாக செலுத்தச் சொன்னார்.  கொஞ்ச தூரம் போனதும் , வண்டியைத் திருப்பச்சொல்லி, வந்த வழியே மீண்டும் போகச் சொன்னார் . வண்டியை ஓட்டியவருக்கும், உடன் வந்தவர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை.

வண்டியை விட்டு இறங்கிய பெரியார், காலால் தடவியவாறு எதையோ தேடினார் .  ஒரு செருப்பு கிடந்தது . அதைக் கையில் எடுத்த பெரியார் "அதானே பார்த்தேன் , நான் போகும்போது என் மேல ஒரு செருப்பு விழுந்த து. ஒரு செருப்பை வீசினவரால் இன்னொரு செருப்பை வச்சிட்டு பிரயோஜனம் இல்லை . அதனால் அந்த இடத்திலதானே போட்டுட்டு போயிருக்கணும். அதை எடுக்கத்தான் வந்தேன்" என்று சொன்னார்.  அவர் மீது செருப்பு வீசப்பட்டதே மற்றவர்ககளுக்கு அப்போதுதான் தெரியும்.

30 ஆண்டுகள் கழித்து, செருப்பு வீசப்பட்ட அதே இடத்தில் பெரியாருக்கு வெண்கல சிலை வைக்கப்பட்டது.  "செருப்பொன்று வீசினால்  சிலையொன்று முளைக்கும்" என்று கவிஞர் கருணானந்தம் எழுதினார்.

பெரியார்
பெரியார்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கடவுள் இல்லை என்று நாத்திகத்தை பிரசாரம் செய்த பெரியார், கடவுள் நம்பிக்கை கொண்டவர்களுக்குக் கொடுத்த முக்கியத்துவம் நிச்சயம் கவனிக்கத் தக்கது.  தான் நடத்திய ஆதரவற்றோர் இல்லத்தில் பெரியார் உட்கார்ந்து இருந்தார். அவரைச் சந்திக்க வந்த கல்வி நெறியாளர் நெ.து.சுந்தர வடிவேலுடன் பேசிக்கொண்டு இருந்தார்.  கடவுள் வாழ்த்து பாடலை அந்த பிள்ளைகள் வாசித்ததை நெ.து.சு.கவனித்து, "உங்கள் பிள்ளைகள் மட்டும் கடவுள் வாழ்த்து படிக்கிறார்களே?" என்று பெரியாரிடம் கேட்டார். "ஆதரிக்க ஆள் இல்லாத பிள்ளைகள் இவர்கள். சோறு போட்டுக் காப்பாற்றுகிறேன் என்பதற்காக நாத்திகத்தை அவர்கள் மீது திணிக்கவில்லை. வயது வந்தால் அவர்கள் படித்துத் தெரிந்து கொள்வார்கள்.

தங்கள் சிந்தனையால் அவர்கள் நாத்திகர்களானால் சரி" என்று சொன்ன பண்பு, இன்று தமிழ்ச் சமூகத்திடம் இருக்கிறதா? 'என் கருத்தை மறுக்க உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால், என் கருத்தை வெளியிட எனக்கு உரிமை உண்டு' என்பதுதான் பெரியாரின் கொள்கை. தனது கருத்துக்கு எதிரானவர்கள் அனைவவரையும், தன்னை விட உயர்வாக மதித்தவர் அவர்.

ஏனெனில் அவர் பெரியார்!