Published:Updated:

விழுப்புரம்: லாரி மோதிய விபத்தில் சேதமடைந்த பெரியார் சிலை! - வாக்குவாதம், தர்ணாவால் பரபரப்பு

சிசிடிவி காட்சி - பெரியார் சிலை சேதம்

கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் பெரியார் சிலை சேதமடைந்தை தொடர்ந்து, நள்ளிரவில் திமுக-வினர் சாலைமறியல் போராட்டம் நடத்தி, போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் விழுப்புரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம்: லாரி மோதிய விபத்தில் சேதமடைந்த பெரியார் சிலை! - வாக்குவாதம், தர்ணாவால் பரபரப்பு

கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் பெரியார் சிலை சேதமடைந்தை தொடர்ந்து, நள்ளிரவில் திமுக-வினர் சாலைமறியல் போராட்டம் நடத்தி, போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் விழுப்புரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Published:Updated:
சிசிடிவி காட்சி - பெரியார் சிலை சேதம்

விழுப்புரம் நகரின் முக்கிய வீதியான காமராஜர் சாலையில் சுமார் 39 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக பிரமுகர் ஒருவரால் பெரியார் சிலை நிறுவப்பட்டது. பெரியாரின் பிறந்தநாள், நினைவுநாள் போன்ற தினங்களில் இச்சிலைக்கு அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம். இச்சிலையின் பாதுகாப்புக்காக இரும்புக் கூண்டு அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுவந்தது. இந்நிலையில் நேற்று (19.01.2022) நள்ளிரவு காமராஜர் சாலையின் வழியே வந்த கன்டெய்னர் லாரி ஒன்று இந்தச் சிலையின் மீது பக்கவாட்டில் மோதியுள்ளது. இதனால் அந்தச் சிலை முற்றிலும் சிதைந்து சேதமடைந்துள்ளது.

திமுக-வினர் வாக்குவாதம்
திமுக-வினர் வாக்குவாதம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த விழுப்புரம் நகர காவல் துறையினர், கன்டெய்னர் லாரியை மடக்கிப் பிடித்து, ஓட்டுநரைக் கைதுசெய்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தியுள்ளார். பின்னர், இந்த கன்டெய்னர் லாரியை ஓட்டிவந்த நபரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது, அந்த நபர் மகாராஷ்டிராவைச் சேர்ந்த மச்சீந்திரா தபலி (52) என்பது தெரியவந்துள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திலிருந்து வாகனங்களுக்குப் பயன்படுத்தும் டயர்களை லாரியில் ஏற்றிக்கொண்டு புனே நோக்கி சென்றுகொண்டிருந்தாராம். கூகுள் மேப்பின் மூலம் வழியை ஆராய்ந்துகொண்டே சென்றபோது, வழி தவறி விழுப்புரம் காமராஜர் சாலையில் சென்றாராம். தவறான வழியில் செல்வதை அறிந்த ஓட்டுநர், லாரியைத் திருப்ப முயன்றுள்ளார். நீளமான கனரக லாரி என்பதால்... அந்தக் குறுகிய சாலையில் வாகனத்தைத் திருப்பும்போது அங்கிருந்த பெரியார் சிலையின் மீது பக்கவாட்டில் மோதியுள்ளது.

தர்ணா போராட்டத்தில் திமுக-வினர்
தர்ணா போராட்டத்தில் திமுக-வினர்

இந்த விபத்தில் பெரியார் சிலை முற்றிலும் சேதமடைந்துள்ளது. இந்த கனரக கன்டெய்னர் லாரி, பக்கவாட்டில் சிலையின் மீது மோதி விபத்து ஏற்பட்ட சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. பெரியார் சிலை சேதமடைந்த தகவலை அறிந்ததும், விழுப்புரம் நகர திமுக செயலர் சக்கரை தலைமையிலான திமுக-வினர் அங்கு திரண்டு சிலையைச் சேதப்படுத்திய ஓட்டுநர்மீது நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர், விழுப்புரம் நான்குமுனைச் சந்திப்பில் சாலைமறியல் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அசம்பாவிதம் நடைபெறாமல் இருப்பதற்காக காவல்துறையினர் அப்பகுதியில் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக காவல் நிலையத்தின் வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட திமுக-வினர், காவல் நிலையத்தினுள் நுழைந்து லாரி ஓட்டுநர்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்துறையினரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

அதிமுக, தி.க-வினர் தர்ணா போராட்டம்
அதிமுக, தி.க-வினர் தர்ணா போராட்டம்

அதன் தொடர்ச்சியாக இன்று காலை அ.தி.மு.க மற்றும் தி.க-வினர் விபத்தால் பெரியார் சிலை உடைந்த பகுதியில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவங்கள் அனைத்தும் விழுப்புரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தின.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism