Published:Updated:

உள்ளாட்சி பரபர:``விஷயம் தெரியாமல் பேசுகிறார்!’’ - அமைச்சர் முத்துசாமிக்கு பெருந்துறை எம்எல்ஏ பதிலடி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பிரசாரத்தில் எம்.எல்.ஏ ஜெயக்குமார்
பிரசாரத்தில் எம்.எல்.ஏ ஜெயக்குமார்

அமைச்சர் முத்துசாமியின் பிரசாரத்துக்கு எதிராக, பெருந்துறை தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ ஜெயக்குமார் காட்டமான பதிலடியைக் கொடுத்திருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தற்போது 9 மாவட்டங்களில் நடக்கும் ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி, தமிழகத்தில் 28 மாவட்டங்களில் காலியாக உள்ள பதவிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள 10-வது வார்டு கவுன்சிலருக்கான தேர்தல் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் தற்போது பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏவாக இருக்கும் ஜெயக்குமார் இந்த 10-வது வார்டு கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்துவிட்டுத் தான் சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கி வெற்றி பெற்றார். ஆகவே, இந்த 10-வது வார்டு கவுன்சிலர் பதவியைப் பிடிக்க தி.மு.க., - அ.தி.மு.க.,வினர், தங்களது வேட்பாளர்களுக்கு ஆதரவாகக் களமிறங்கி தீவிரமான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரச்சாரத்தில் அமைச்சர் முத்துசாமி
பிரச்சாரத்தில் அமைச்சர் முத்துசாமி

அந்தவகையில், பெருந்துறை யூனியன் 10-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து நேற்று மாலை அமைச்சர் முத்துசாமி பிரசாரம் மேற்கொண்டார். சீனாபுரம் ஊராட்சி ராம்நகர் பகுதியில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பேசிய அமைச்சர் முத்துசாமி, “பெருந்துறை அ.தி.மு.க., எம்.எ.ல்.ஏ ஜெயக்குமார் தொகுதிக்கு வரும் திட்டங்களைத் தடுத்து வருவதோடு, அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாகச் செயல்பட்டு வருகிறார். குறிப்பாக, ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதிய கூடுதல் கட்டடங்கள் கட்டும்போது அவர் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இப்போது பிரசாரம் நடைபெறும் இந்தப் பகுதியில் மருந்து தெளிப்பதை கூட இங்குள்ள ஊராட்சி தலைவர் தடை செய்கிறார். அதுமட்டுமல்லாமல், அடிப்படை வசதிகள் எதுவும் இந்தப் பகுதியில் இல்லை. எம்.எல்.ஏ, மந்திரி பதவியைவிட உள்ளாட்சிப் பதவிகள்தான் மிக முக்கியமானது. இதில் நீங்கள் சரியானவரைத் தேர்வு செய்யவில்லையென்றால் உங்களுக்குத்தான் பிரச்னை" எனப் பேசினார்.

Vikatan

அடுத்த சில மணி நேரங்களில் அதே பகுதிக்கு அ.தி.மு.க., வேட்பாளர் பாலகிருஷ்ணனை ஆதரித்துப் பிரசாரம் செய்ய வந்த பெருந்துறை எம்.எல்.ஏ ஜெயக்குமார், அமைச்சரின் பிரசாரத்துக்கு எதிராக காட்டமான பதிலடியினைக் கொடுத்தார். அவர் பேசுகையில், “கொரோனா 2-வது அலை தீவிரமாக இருந்த சமயத்தில், கடுமையான ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருந்தபோது ‘பிரதமர் தேசிய நிவாரண நிதியின் கீழ், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் செரிவூட்டி மையம் அமைக்க வேண்டும்’ என மத்திய அமைச்சருக்கு நேரடியாக கடிதம் எழுதியிருந்தேன். அதனடிப்படையில் தற்போது ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆக்ஸிஜன் செரிவூட்டி மையம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

பிரசாரத்தில் எம்.எல்.ஏ ஜெயக்குமார்
பிரசாரத்தில் எம்.எல்.ஏ ஜெயக்குமார்

கடந்த 15 ஆண்டு காலமாக ஒன்றியக் குழு உறுப்பினராக பதவி ஏற்றதில் இருந்து, அரசு நிதி ஒதுக்கீட்டில் மட்டுமல்லாமல் எனது சொந்த செலவில் பல்வேறு அடிப்படைத் தேவைகளை மக்களுக்கு செய்து கொடுத்து வருகிறேன். மாற்றுத் திறனாளிகளுக்கும், ஏழை குடும்பங்களுக்கும் என்னால் ஆன உதவிகளை தொடர்ச்சியாகச் செய்து வருகிறேன். சட்டமன்றத்தில் பெருந்துறை மற்றும் கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சிகளை இணைத்து நகராட்சியாக கொண்டுவர வேண்டும் என எனது கவனயீர்ப்பு தீர்மானத்தை அரசு பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட நிலையில், நகராட்சியாக அறிவிப்பு வெளியாகவில்லை. இதன்மூலம் பெருந்துறை தொகுதிக்கு வரும் நல்ல திட்டங்களை யார் தடுக்கிறார்கள் என மாண்புமிகு வீட்டுவசதித் துறை அமைச்சர் தெரிவிக்க வேண்டும். ஒருவேளை 10 ஆண்டுகாலம் இந்தத் தொகுதியில் எம்.எல்.ஏவாக இருந்து, இன்றைக்கு தி.மு.க-வில் வலம்வரும் அந்த நபரைச் சுட்டிக்காட்டி அமைச்சர் பேசினாரா எனத் தெரியவில்லை” என அமைச்சர் முத்துசாமியோடு, தோப்பு வெங்கடாசலத்தையும் சேர்த்து விளாசித் தள்ளினார்.

`டாஸ்மாக் அருகே தடுப்பூசி முகாம்' - தமிழக அரசுக்கு வானதி சீனிவாசன் சொல்லும் யோசனை!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆட்சியில் செங்கோட்டையன், கருப்பணன் ஆகியோர் அமைச்சர்களாக இருந்தனர். அவர்களை இதுவரைக்கும் விமர்சித்துப் பேசாத அமைச்சர் முத்துசாமி, பெருந்துறை அ.தி.மு.க., எம்.எல்.ஏ ஜெயக்குமாரை அட்டாக் செய்து பேசியிருப்பதும், அதற்கு எம்.எல்.ஏ ஜெயக்குமார் பதிலடி கொடுத்திருப்பதும் ஈரோடு அரசியலில் கவனிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஈரோடு: `பிளீச்சிங் பவுடர் ரூ.5 லட்சம்; சாக்கடை டு சுடுகாடு ஊழல்!’ - கலெக்டரிடம் கவுன்சிலர்கள் புகார்

தொடர்ந்து பேசியவர், “அமைச்சர் முத்துசாமி இந்த சீனாபுரம் ஊராட்சியைச் சேர்ந்த ராம் நகர் பொதுமக்கள் மத்தியில் பேசும்போது, ‘இந்தப் பகுதியில் மருந்து தெளிப்பதைக் கூட ஊராட்சித் தலைவர் தடை செய்கிறார். அடிப்படை வசதிகள் எதுவும் இந்தப் பகுதிக்கு செய்து கொடுக்கப்படவில்லை’ எனச் சொல்லியிருக்கிறார். உண்மையில் இந்த சீனாபுரம் ஊராட்சியில் தொடர்ந்து 15 ஆண்டுகாலம் தி.மு.க.,வைச் சேர்ந்தவர் தான் தலைவராக இருக்கிறார். தி.மு.க.,வைச் சேர்ந்தவர் தான் ஒன்றியக் குழு உறுப்பினராகவும் 15 ஆண்டு காலமும் தொடர்ந்து பதவியில் இருந்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் கடந்த 10 ஆண்டுகளாக அமைச்சராகவும், எம்.எல்.ஏவாகவும் பதவி வகித்தவர் இப்போது தி.மு.க.,வில் இணைந்து (தோப்பு வெங்கடாசலத்தை அட்டாக் செய்கிறார்) அமைச்சருடன் பிரச்சாரம் செய்து வருகிறார். சம்பந்தப்பட்ட அத்தனை பேரும் தி.மு.க.,வைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியாமலேயே, அமைச்சர் குற்றம் சாட்டிவிட்டுச் சென்றிருக்கிறார். அமைச்சரே பொதுமக்கள் மத்தியில் உண்மை நிலவரத்தைத் தெரிய வைத்துச் சென்றுள்ளார்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு