Published:Updated:

``கலவர நோக்கத்துடன் தவ்ஹீத் ஜமா-அத்?" - ஆட்சியர் அலுவலகத்தில் சுன்னத் வல் ஜமா-அத் அமைப்பினர் மனு!

மனு கொடுக்க வந்த கிராமத்தினர்

தவ்ஹீத் ஜமா-அத் அமைப்பினர் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் பொதுக்கூட்டம் நடத்தத் திட்டமிட்டிருப்பதாக, சுன்னத் வல் ஜமா-அத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்திருக்கின்றனர்.

``கலவர நோக்கத்துடன் தவ்ஹீத் ஜமா-அத்?" - ஆட்சியர் அலுவலகத்தில் சுன்னத் வல் ஜமா-அத் அமைப்பினர் மனு!

தவ்ஹீத் ஜமா-அத் அமைப்பினர் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் பொதுக்கூட்டம் நடத்தத் திட்டமிட்டிருப்பதாக, சுன்னத் வல் ஜமா-அத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்திருக்கின்றனர்.

Published:Updated:
மனு கொடுக்க வந்த கிராமத்தினர்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

அதில் ராமநாதபுரம், கீழக்கரை தாலுகா, எக்ககுடி கிராமத்தைச் சேர்ந்த சுன்னத் வல் ஜமா-அத் அமைப்பைச் சேர்ந்த 500 பேர் ஒன்று திரண்டு மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், ``எங்கள் எக்ககுடி கிராமத்தில் சுன்னத் வல் ஜமா-அத் அமைப்பைச் சேர்ந்த 500 இஸ்லாமியக் குடும்பங்கள் வசித்துவருகிறோம். மேலும், எங்கள் கிராமத்தில் பிற மதங்களைச் சார்ந்தவர்களும் ஏராளமானோர் வசித்துவருகின்றனர். அவர்களுடன் நாங்கள் ஒற்றுமையாக, சகோதரத்துவத்துடன் வாழ்ந்துவருகிறோம்.

மனு கொடுக்க வந்தவர்கள்
மனு கொடுக்க வந்தவர்கள்

இந்த நிலையில், தவ்ஹீத் ஜமா-அத் அமைப்பைச் சேர்ந்த நான்கு குடும்பத்தினர் எங்கள் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்துக் குடியேறி, எங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்களை தவ்ஹீத் ஜமா-அத் அமைப்பில் சேரக் கோரி கடந்த சில ஆண்டுகளாக மிரட்டிவருகின்றனர்.

இது தொடர்பாக போலீஸில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, போலீஸார் எங்கள் கிராமத்துக்கு வந்து, மேலும் பிரச்னைகள் எதுவும் நிகழாதவாறு ஒழுங்குபடுத்திச் சென்றனர்.

இந்த நிலையில், கடந்த 4-ம் தேதி தவ்ஹீத் ஜமா-அத் அமைப்பினர் வெளியூரிலிருந்து 300-க்கும் மேற்பட்டவர்களை வரவழைத்து, எங்கள் பள்ளிவாசல் முன் கூட்டத்தைக் கூட்டி சுன்னத் வல் ஜமா-அத் அமைப்பைச் சேர்ந்த எங்களைத் தகாத வார்த்தைகளால் விமர்சனம் செய்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மனு கொடுக்க வந்தவர்கள்
மனு கொடுக்க வந்தவர்கள்

மேலும் வருகிற 25-ம் தேதி இதேபோல இன்னும் ஆயிரம் பேரை வெளியூர்களிலிருந்து வரவைத்துக் கூட்டம் நடத்தப்போவதாகத் தெரிவித்துள்ளனர். அதற்காக நோட்டீஸ் அடித்து எங்கள் பகுதியில் வழங்கியுள்ளனர். எனவே தவ்ஹீத் ஜமா-அத் அமைப்பு சார்பில் நடைபெறவுள்ள கூட்டத்தைத் தடை செய்து, சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும்" என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சுன்னத் வல் ஜமா-அத் அமைப்பின் தலைவர் நூர் முகமது நம்மிடம் பேசினார். ``எங்கள் கிராமத்தில் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக வாழ்ந்துவருகிறோம். எங்களைப் பிரித்து, கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு தவ்ஹீத் ஜமா-அத் அமைப்பினர் எங்கள் பகுதியில் குடியேறி செயல்பட்டுவருகின்றனர். கடந்த 201-ம் ஆண்டு எங்கள் கிராமத்தில் கலவரத்தை ஏற்படுத்திய தவ்ஹீத் ஜமா-அத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது வழக்கு நடைபெற்றுவருகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில், அவர்கள் எவ்வளவு முயன்றும் எங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தவ்ஹீத் ஜமா-அத் அமைப்பில் இணையவில்லை என்பதால், பெரிய அளவில் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக வெளியூர்களிலிருந்து ஆட்களை வரவழைத்துக் கூட்டம் நடத்தத் தயாராகியுள்ளனர்.

மனு கொடுக்க வந்த கிராமத்தினர்
மனு கொடுக்க வந்த கிராமத்தினர்

இதனால் எங்கள் கிராமத்தினர் உயிர் பயத்துடன் வாழ்ந்துவருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் நடைபெற உள்ள தவ்ஹீத் ஜமா-அத் அமைப்பின் கூட்டத்தைத் தடை செய்து, எங்கள் கிராமத்தினரின் அச்சத்தைப் போக்க வேண்டும்" எனக் கூறினார்.

நூர் முகம்மது
நூர் முகம்மது

ஆட்சியர் அலுவலகத்தில் மனுகொடுக்க வந்தவர்கள், திடீரென கோஷம் எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அதையடுத்து, போலீஸார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism