Published:Updated:

தங்கம் சேர்த்து தயாரிக்கப்பட்ட கேக், உலக சாதனை முயற்சி; ஆதரவற்றோர் இல்லத்தில் கொடுக்க முடிவு!

உலக சாதனை முயற்சியாக செய்யப்பட்ட கேக்

உலக சாதனை முயற்சிக்காக தங்கம் சேர்க்கப்பட்ட கிறிஸ்துமஸ் கேக், சாக்லெட், தோசை ஆகியவை தயாரிக்கப்பட்டு, காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. தங்கம் சேர்க்கப்பட்டு நான்கு அடி நீளத்தில் தோசை தயாரிக்கப்பட்டது. அதை வாடிக்கையாளர் ஒருவர் ரூ. 20,200 விலை கொடுத்து வாங்கிச் சென்றார்.

தங்கம் சேர்த்து தயாரிக்கப்பட்ட கேக், உலக சாதனை முயற்சி; ஆதரவற்றோர் இல்லத்தில் கொடுக்க முடிவு!

உலக சாதனை முயற்சிக்காக தங்கம் சேர்க்கப்பட்ட கிறிஸ்துமஸ் கேக், சாக்லெட், தோசை ஆகியவை தயாரிக்கப்பட்டு, காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. தங்கம் சேர்க்கப்பட்டு நான்கு அடி நீளத்தில் தோசை தயாரிக்கப்பட்டது. அதை வாடிக்கையாளர் ஒருவர் ரூ. 20,200 விலை கொடுத்து வாங்கிச் சென்றார்.

Published:Updated:
உலக சாதனை முயற்சியாக செய்யப்பட்ட கேக்

நெல்லை, வண்ணாரப்பேட்டையில் `ஆப்பிள் ட்ரீ’ என்ற மூன்று நட்சத்திர விடுதி உள்ளது. பண்டிகை காலங்களில் இந்த விடுதியில், வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் வித்தியாசமான முயற்சிகளில் ஈடுபடுவது வழக்கம். தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வடிவில் சாக்லெட் தயாரிக்கப்பட்டு வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது அந்த நிறுவனம், உலக சாதனை முயற்சியில் தங்கத்தை இணைத்து அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்துள்ளது.

தங்கம் சேர்க்கப்பட்ட சாக்லெட்
தங்கம் சேர்க்கப்பட்ட சாக்லெட்

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வித்தியாசமாக உணவுப் பொருள் தயாரிக்கும் முயற்சியாக, ஆர்யாஸ் நிறுவனத்துடன் இணைந்து கேக், சாக்லெட், தோசை ஆகியவற்றை தயாரித்து உலக சாதனை படைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அந்த நிறுவனத்தின் உணவுக்கலை நிபுணர்களான ராஜ்குமார், ஆனந்தன் ஆகியோர் சாதனைக்கான உணவுப் பொருள்கள் தயாரிப்பில் ஈடுபட்டனர்.

சாக்லெட், கேக், தோசை ஆகியவற்றில் தங்கத்தைச் சேர்க்க முடிவு செய்யப்பட்டது. அதற்காக உண்ணும் வகையில் தங்கம் உருமாற்றம் செய்யப்பட்டது. சுமார் 500 மில்லி கிராம் அளவிலான 24 கேரட் தங்கத்தைச் சேர்ந்து, பிளம் கேக் தயாரிக்கப்பட்டது. ரூ. 2.60 லட்சம் செலவில் உருவாக்கப்பட்ட அந்த கேக் கண்ணாடி பேழையில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. பின்னர் அதை ஆதரவற்றோர் இல்லத்தின் குழந்தைகளுக்குக் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தங்கம் சேர்த்து செய்யப்பட்ட தோசை
தங்கம் சேர்த்து செய்யப்பட்ட தோசை

கேக் மட்டுமல்லாமல் சாக்லெட் தயாரிப்பிலும் 250 மில்லி கிராம் தங்கம் பயன்படுத்தப்பட்டது. 5 கிலோ எடை கொண்டதாக அந்த சாக்லெட் உருவாக்கப்பட்டது. அதற்கு ஒரு லட்சம் ரூபாய் செலவானதாக ஆப்பிள் ட்ரீ நிறுவனத்தின் உரிமையாளர் விக்ரம் கிருஷ்ணா தெரிவித்தார். அத்துடன், தங்கம் சேர்க்கப்பட்டு நான்கு அடி நீளத்தில் தோசை தயாரிக்கப்பட்டது. அதை வாடிக்கையாளர் ஒருவர் ரூ. 20,200 விலை கொடுத்து வாங்கிச் சென்றார்.

தங்கம் சேர்க்கப்பட்டு கேக், சாக்லெட், தோசை ஆகியன தயாரிக்கப்பட்டதை ஆய்வு செய்த அசிஸ்ட் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனம் உலக சாதனையை அங்கிகரித்து சான்றிதழ்கள் மற்றும் கேடயத்தை வழங்கியது.

உலக சாதனை முயற்சிக்கு செய்யப்பட்ட கேக்
உலக சாதனை முயற்சிக்கு செய்யப்பட்ட கேக்

இது குறித்துப் பேசிய ஆப்பிள் ட்ரீ உரிமையாளரான விக்ரம் கிருஷ்ணா, ``உலக சாதனை செய்வதற்காக எங்கள் நிறுவனத்தின் சார்பாக சுமார் 13 மணி நேரம் மேற்கொண்ட முயற்சிக்குப் பலன் கிடைத்திருக்கிறது. எங்களின் உலக சாதனை முயற்சிக்கான அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கேக், மற்றும் சாக்லெட்டை காட்சிக்கு வைத்த பின்னர் கிறிஸ்மஸ் தினத்தன்று ஆதரவற்ற ஏழை எளிய குழந்தைகளுக்குக் கொடுக்க உள்ளோம்” என்றார்