Published:Updated:

``தமிழகத்தின் எழுச்சிமிக்க கலாசார அடையாளம் பொங்கல் விழா!" - பிரதமர் மோடி ட்வீட்

பிரதமர் மோடி
News
பிரதமர் மோடி

நமது சமூகத்தின் சகோதரத்துவ உணர்வு இன்னும் ஆழமாவதற்கு நான் பிரார்த்திக்கிறேன் என பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் பாரம்பர்ய விழாவான பொங்கலை உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் மிக விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர். தை முதல் நாளான இன்று உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் புத்தாடை உடுத்தி தங்கள் வீட்டின் முன் பொங்கல் வைத்து பண்டிகையைக் கோலாகலமாகக் கொண்டாடி வரும் நிலையில், பல அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், `தமிழகத்தின் எழுச்சிமிக்க கலாசாரத்தின் அடையாளமாகப் பொங்கல் திருவிழா திகழ்கிறது. இந்த சிறப்பு வாய்ந்த நாளன்று அனைவருக்கும், குறிப்பாக உலகெங்கும் உள்ள தமிழ் மக்களுக்கு எனது வாழ்த்துகள்.

மோடி ட்வீட்
மோடி ட்வீட்
twitter

இயற்கையுடனான நமது பிணைப்பும் நமது சமூகத்தின் சகோதரத்துவ உணர்வும் இன்னும் ஆழமாகுவதற்கு நான் பிரார்த்திக்கிறேன்' எனப் பதிவிட்டுள்ளார்.

அதே போல மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தனது ட்விட்டர் பக்கத்தில், `அனைத்து தமிழ் நண்பர்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள். இந்த மங்களகரமான திருநாள் அனைவரது வாழ்விலும் அளவற்ற மகிழ்ச்சியையும், நல்லிணக்கத்தையும், நல்ல ஆரோக்கியத்தையும் வழங்கட்டும்' என்று தமிழில் பதிவிட்டுப் பொங்கல் வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

அமித் ஷா
அமித் ஷா

மேலும், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பொங்கல் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில், `பொங்கல் மற்றும் மகர சங்கராந்தியின் மகிழ்ச்சியான தருணத்தில் தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பொங்கல் பண்டிகை அறுவடையின் கொண்டாட்டமாகும். நமக்கு வாழ்க்கை, ஆற்றல் மற்றும் உயிர் சக்தியை வழங்கும் சூரிய கடவுளுக்கு நன்றி செலுத்துகிறோம். தை மாதத்தின் தொடக்கத்தில் கடவுளின் ஆசீர்வாதத்திற்காகப் பிரார்த்தனை செய்கிறோம்' என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

தமிழக முதல்வர் ஸ்டாலின், `தமிழர்களின் உள்ளங்களிலும் இனிமை பொங்கட்டும், தமிழ் கூறும் நல்லுலகு எங்கும் நன்மை விளையட்டும், அனைவருக்கும் தைமுதல் நாளாம் இனிய பொங்கல்... இன்ப பொங்கல் வாழ்த்துகள்' எனத் தமிழர்களுக்குப் பொங்கல் வாழ்த்து பகிர்ந்துள்ளார்.