Published:Updated:

`ரூ.94 லட்சத்துக்கு ஏலம் போன மாட்டுச் சந்தை!’ -நெருக்கடிக்கு மத்தியில் கைப்பற்றிய பா.ம.க பிரமுகர்

பொய்கை மாட்டுச் சந்தை

பொய்கை மாட்டுச் சந்தைக்கான வரிவசூல் ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்றது. கடும் போட்டிக்கு நடுவில், ரூ.94.51 லட்சத்துக்குப் பா.ம.க பிரமுகர் லோகநாதன் சந்தையை ஏலம் எடுத்தார்.

`ரூ.94 லட்சத்துக்கு ஏலம் போன மாட்டுச் சந்தை!’ -நெருக்கடிக்கு மத்தியில் கைப்பற்றிய பா.ம.க பிரமுகர்

பொய்கை மாட்டுச் சந்தைக்கான வரிவசூல் ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்றது. கடும் போட்டிக்கு நடுவில், ரூ.94.51 லட்சத்துக்குப் பா.ம.க பிரமுகர் லோகநாதன் சந்தையை ஏலம் எடுத்தார்.

Published:Updated:
பொய்கை மாட்டுச் சந்தை

வேலூரை அடுத்த பொய்கை மாட்டுச் சந்தை, வட தமிழகத்தில் மிகவும் பிரபலம். வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையில் பொய்கைச் சந்தை களைகட்டும். வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, காஞ்சிபுரம் உட்பட ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலிருந்தும் பல்வேறு இன கறவை மாடுகளும் காளைகளும் விற்பனைக்குக் கொண்டுவரப்படுகின்றன.

பொய்கை மாட்டுச் சந்தை
பொய்கை மாட்டுச் சந்தை

செவ்வாய்க் கிழமை சந்தையில் மட்டும் ஒன்றரைக் கோடி வரை வியாபாரம் நடைபெறுகிறது. திங்கள் இரவே வெளியூர் மாடுகள் வந்துவிடும். மாடுகளின் பல்லைப் பிடித்தும் கன்று ஈன்றதை வைத்தும் நாளொன்றுக்கு எவ்வளவு லிட்டர் பால் கறக்கும் என்பதைக் கேட்டும், மடியைப் பார்த்தும் இடைத்தரகர்கள் மூலம் விலையை நிர்ணயித்து விவசாயிகள் மாடுகளை வாங்கிச் செல்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வியாபாரி, விவசாயிக்கு நடுவில் சம்பந்தமில்லாத தரகர்கள்தான் அதிகம் சம்பாதிக்கிறார்கள். செவ்வாய்க் கிழமை மதியத்துக்குள் அனைத்து மாடுகளும் விற்பனையாகிவிடும். இடை இடையே மற்ற வியாபாரிகள் கடை விரித்து தங்களது பொருள்களை விற்பனை செய்துகொள்கிறார்கள். பெரும் தொகை வருவாயாகக் கிடைப்பதால் பொய்கைச் சந்தையை ஏலம் எடுப்பதில் ஆண்டுதோறும் கடும் போட்டி நிலவுகிறது.

மாட்டின் பல்லைப் பார்த்து ஆரோக்கியத்தைக் கணக்கிடும் விவசாயி
மாட்டின் பல்லைப் பார்த்து ஆரோக்கியத்தைக் கணக்கிடும் விவசாயி

ஏலத்தில் அரசியல்வாதிகளின் தலையீடு அதிகம். பல்வேறு கட்சிப் பிரமுகர்கள் ஏலத்தில் கலந்துகொண்டு கடும் போட்டியை ஏற்படுத்துவார்கள். வழக்கம் போல், இந்தாண்டுக்கான வரி வசூல் ஏலம் அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், பிப்ரவரி 6-ம் தேதி நடைபெற்றது. அப்போது, ரூ.42 லட்சத்துக்கு மட்டுமே ஏலம் கேட்கப்பட்டது. கடந்த ஆண்டு ரூ.83.10 லட்சத்துக்கு ஏலம் எடுத்திருந்தனர். இதனால், ஏலத்தை அதிகாரிகள் ரத்து செய்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதைத்தொடர்ந்து, கடந்த மாதம் 14-ம் தேதி இரண்டாவது முறையாகவும், 27-ம் தேதி மூன்றாவது முறையாகவும் ஏலம் விடப்பட்டது. அப்போதும், சரியான ஏலத் தொகை படியவில்லை. ``சந்தையில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்துதரப்படவில்லை. அதிக தொகை கொடுத்து ஏலம் எடுக்க யாரும் முன்வரவில்லை’’ என்று காரணம் சொல்லப்பட்டது.

துணியால் கைகளை மறைத்து விரல்களால் விலை பேசுகிறார்கள்
துணியால் கைகளை மறைத்து விரல்களால் விலை பேசுகிறார்கள்

இதுகுறித்து, கலெக்டர் சண்முக சுந்தரத்தின் கவனத்துக்கு அதிகாரிகள் கொண்டு சென்றனர். அதன்பிறகு, ரூ.40 லட்சத்தில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளத் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது.

இந்த நிலையில், நான்காவது முறையாக நேற்று மாலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஏலம் விடப்பட்டது. ஏலம் கேட்க 35 பேர் டெபாசிட் செய்திருந்தனர். கடும் போட்டியில் கடைசியாக, ரூ.94.51 லட்சத்துக்குப் பொய்கைச் சந்தையைப் பா.ம.க பிரமுகர் லோகநாதன் என்கிற மலைக் கள்ளன் ஏலம் எடுத்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism