Published:Updated:

திருச்சி: சுகாதாரமற்ற பிரியாணி; கலெக்டரிடம் புகார்! - ஹக்கீம் பிரியாணி நிர்வாகம் சொல்வதென்ன?

புகாரளித்த பா.ம.க மாநகர மாவட்டச் செயலாளர் திலீப்குமார்
புகாரளித்த பா.ம.க மாநகர மாவட்டச் செயலாளர் திலீப்குமார்

`ஹக்கீம் பிரியாணிக் கடை மீது புகார் கொடுக்கப்போறீங்களாமே...’ என்று சொல்லி என்னை மிரட்டத் தொடங்கினார்கள். அவர்கள் கொடுத்த டார்ச்சரால்தான் இன்று ஆட்சியரிடம் புகாரளிக்க வந்திருக்கிறேன்.

`திருச்சி, ஹக்கீம் பிரியாணி தரமில்லாத மட்டன் பிரியாணியை மக்களுக்கு விற்கிறது’ என்று பா.ம.க மாவட்டச் செயலாளர் ஆதாரங்களுடன் ஆட்சியரிடம் புகாரளித்திருக்கிறார். `ஹக்கீம் பிரியாணிக் கடை மீது புகாரளிக்கக் கூடாது’ என்று முக்கியக் கட்சி பிரபலங்கள் மிரட்டியதாகக் கூறுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புகாரளித்த பா.ம.க மாநகர மாவட்டச் செயலாளர் திலீப்குமார்
புகாரளித்த பா.ம.க மாநகர மாவட்டச் செயலாளர் திலீப்குமார்

புகாரளித்த பா.ம.க-வின் மாநகர மாவட்டச் செயலாளர் திலீப்குமாரிடம் பேசினோம். ``கடந்த 2-ம் தேதி திங்கட்கிழமை குடும்பத்துடன் தீபாவளி பர்ச்சேஸ் முடித்து கடையைவிட்டு வெளியே வந்ததும், எனது மகள், `அப்பா பிரியாணி சாப்பிட்டுட்டுப் போகலாம்ப்பா... ஆசையா இருக்கு’ன்னு சொல்ல நானும் சரின்னு குடும்பத்துடன் திருச்சி சின்னக்கடை வீதி, வாலாஜா காம்ப்ளெக்ஸ்-ல் உள்ள கே.எம்.எஸ்.ஹக்கீம் பிரியாணி கடையில் குடும்பத்துடன் சாப்பிடச் சென்றோம்.

வெயிட்டரிடம் மூன்று மட்டன் பிரியாணி மற்றும் இரண்டு லாலிப்பாப் ஆர்டர் பண்ணியிருந்தேன். கொஞ்ச நேரத்தில் மட்டன் பிரியாணி வந்தது. பிரியாணியை பிளேட்டில் அள்ளிப்போட்ட போது ஆட்டு இறைச்சியைச் சரியாகச் சுத்தம் செய்யாமல் அப்படியே ஆட்டோட (ரோமங்கள்) முடியோடு தட்டில் வந்து விழுந்தது.

மட்டன் பிரியாணி
மட்டன் பிரியாணி

அதைப் பார்ப்பதற்கே அருவருப்பாக, சுகாதாரமற்று இருந்தது. அதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். அப்போதே அங்கிருந்த உணவக மேலாளரிடம் புகார் சொன்னேன். அதை அவர் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. அந்த உணவை அங்கிருந்த 40-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்குப் பரிமாறிக்கொண்டிருந்தனர்.

புகாரளித்த திலீப்குமார்
புகாரளித்த திலீப்குமார்

`ஏன் சார்... நான் இவ்வளவு சொல்லியும் நீங்கபாட்டுக்கு உங்க வேலையைப் பார்த்துக்கிட்டு இருந்தா என்னா சார் அர்த்தம்...’னு கேட்டதற்கு, பொறுப்பற்ற முறையில் பேசுனாங்க. `டென்ஷன்ல உங்களை என்ன பண்றேன் பாருங்க’ன்னு அந்த பிரியாணியை ஒரு போட்டோ எடுத்துக்கொண்டேன்.

அதற்கு அவர்கள், `ஃப்ரீயா வேணும்னாலும் சாப்பிட்டுட்டுப் போங்க. இந்த விவகாரத்தைப் பெருசு பண்ணாதீங்க’ என்றார்கள். நான் `தரமில்லாத உணவை கொடுத்துக்கொண்டிருக்கீங்க... உங்க மேல உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் புகாரளிக்கப் போறேன்’னு சொன்னபோது. அங்கிருந்த ஒருவர், `நீங்க யார்கிட்ட வேணாலும் சொல்லுங்க.

திருச்சி கே.எம்.எஸ்.ஹக்கீம் பிரியாணி
திருச்சி கே.எம்.எஸ்.ஹக்கீம் பிரியாணி

எங்களை ஒண்ணும் பண்ண முடியாது’னு நக்கலாகப் பேசினார். நானும் வெளியே வந்துவிட்டேன். அதன் பிறகு அடுத்தடுத்த நாள்களில் முக்கியக் கட்சியைச் சேர்ந்த பிரமுகர்கள் சிலர் ``ஹக்கீம் பிரியாணிக் கடை மீது புகார் கொடுக்க போறீங்களாமே...’’ என்று சொல்லி என்னை மிரட்டத் தொடங்கினார்கள். அவர்கள் கொடுத்த டார்ச்சரால்தான் இன்று ஆட்சியரிடம் புகாரளிக்க வந்திருக்கிறேன். அதிக காசு கொடுத்து பிரியாணி வாங்கிச் சாப்பிடுகிறோம். அதில் தரம் இல்லைன்னு சொன்னா கட்சிக்காரர்கள் போன்பண்ணி மிரட்டுறாங்க" என்றார் வேதனையுடன்.

ஹக்கீம் பிரியாணி மேனேஜர் இக்பாலிடம் பேசினோம். ``நூறு கிலோ, இருநூறு கிலோனு வாங்குவதால், எல்லாக் கறிகளையும் சரியாகப் பார்த்து வாங்க முடிவதில்லை. தவறு நடந்தது உண்மைதான்.

திருச்சி கே.எம்.எஸ் ஹக்கிம் பிரியாணி
திருச்சி கே.எம்.எஸ் ஹக்கிம் பிரியாணி

அதை நியாயப்படுத்த விரும்பவில்லை. ஆனால் அவர், `நான் யார் என்று தெரியுமா.... பா.ம.க-வுல மாவட்டச் செயலாளர் உங்களை என்ன பண்ணுகிறேன் பாருங்கள்...’ என்று மிரட்டும் தொனியில் பேசினார். எங்கள் மீது தவறு இருக்கும்போது எதுவுமே பேசவில்லை. எங்கள் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார். நாங்கள் எந்தக் கட்சி பின்புலத்தையும் சாராதவர்கள். பிசினஸ் போட்டியில எங்க மீது குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார்கள்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு