Published:Updated:

``தமிழ் ஒரு தீ; அதில் ஈ (இந்தி) உட்காராது" - கண்டன ஆர்பாட்டத்தில் கவிஞர்.வைரமுத்து

வைரமுத்து

இந்தி திணிப்பு ஒன்றும் தமிழர்களுக்கு புதிதல்ல. ஆனால், முன்பு வந்த திணிப்பு கொசு கடிப்பதைப்போல இருந்தது. இப்போதோ ஒரு ஆட்டுக்கு குங்குமம் இட்டு மஞ்சள் நீரெல்லாம் ஊற்றி வெட்டுவதற்கு கத்தி தயாராக இருப்பதுபோல இருக்கிறது - வைரமுத்து

``தமிழ் ஒரு தீ; அதில் ஈ (இந்தி) உட்காராது" - கண்டன ஆர்பாட்டத்தில் கவிஞர்.வைரமுத்து

இந்தி திணிப்பு ஒன்றும் தமிழர்களுக்கு புதிதல்ல. ஆனால், முன்பு வந்த திணிப்பு கொசு கடிப்பதைப்போல இருந்தது. இப்போதோ ஒரு ஆட்டுக்கு குங்குமம் இட்டு மஞ்சள் நீரெல்லாம் ஊற்றி வெட்டுவதற்கு கத்தி தயாராக இருப்பதுபோல இருக்கிறது - வைரமுத்து

Published:Updated:
வைரமுத்து

மத்திய அரசின் இந்தித் திணிப்பைக் கண்டித்து கவிஞர். வைரமுத்துவின் தலைமையில் தமிழறிஞர்கள், தமிழ்ப் படைப்பாளர்கள் மற்றும் சென்னை மாவட்ட அனைத்து தமிழ் இலக்கிய அமைப்புகள் இணைந்து நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெற்றது. சுப.வீ, கவிஞர்.முத்துலிங்கம் உள்ளிட்டவர்கள், தமிழ் ஆர்வம் கொண்டவர்கள், மாணவர்கள் எனப் பலரும் இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

காலை 9 மணிக்கு தொடங்கிய ஆர்ப்பாட்டம் பிற்பகல் 12 மணி வரை நடைபெற்றது. தொடக்கத்தில் `தமிழ் எங்கள் மானம்' `இந்தி அவமானம்' `தமிழ் எங்கள் அதிகாரம்' `இந்தி சர்வாதிகாரம்' `தமிழ் எங்கள் அடையாளம்' `பறிக்காதே பறிக்காதே தமிழை பறிக்காதே' என்றெல்லாம் எழுதியிருந்த பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டனர். கூட்டத்தைத் தலைமை தாங்க வந்த கவிஞர் வைரமுத்து முதலில் கண்டன உரையைத் தொடங்கினார்.

வைரமுத்து
வைரமுத்து

கவிஞர் வைரமுத்து பேசுகையில், `` மத்திய அரசின் அலுவல் மொழிக்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவிற்கு உள்துறை அமைச்சர் பதவியேற்று ஒரு பரிந்துரை மட்டும் தான் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் மசோதாவாகவோ சட்டமாகவோ மாறவில்லை. இந்தி திணிப்பு ஒன்றும் தமிழர்களுக்கு புதிதல்ல. ஆனால், முன்பு வந்த திணிப்பு கொசு கடிப்பதைப்போல இருந்தது. இப்போதோ ஒரு ஆட்டுக்கு குங்குமம் இட்டு மஞ்சள் நீரெல்லாம் ஊற்றி வெட்டுவதற்கு கத்தி தயாராக இருப்பதுபோல இருக்கிறது. எங்களுக்கு தமிழும் ஆங்கிலமும் இரு கண்கள் போல தமிழ் வாழ்வுக்கான மொழியாகவும் ஆங்கிலம் வசதிக்கான மொழியாகவும் எங்களுக்கு இருக்கிறது. நாங்கள் தமிழும் ஆங்கிலமும் கற்றாலே வாழ்வுடனும் வசதியுடனும் இருப்போம்.

இந்தியைக் கற்றால் வாய் பேசாதவர்கள் ஆவோம். இந்தி முழுமையாக வந்தால் என்ன நேரும் தெரியுமா? ஒரு மூட்டையில் முந்திரிப்பருப்புகளை வைத்து உள்ளே 10 வண்டுகளை விட்டு விட்டு 10 வண்டுகள் தானே என்று விட்டால் 10 நாட்கள் கழித்து திறந்து பார்த்தால் முந்திரி பருப்புகள் பருக்கைகளாக இருக்கும். தமிழ் மூட்டைக்குள் இந்தி சேர்ந்தால் இதுதான் நேரும். தமிழ் ஒரு கருங்கல் சிற்பம் அதை கரையான் அரிக்காது. நேற்று பிறந்த இந்திக்காக 5000 ஆண்டுகளாக எழுத்து வடிவம் கொண்ட தமிழை எப்படி புறந்தள்ள முடியும்.

வைரமுத்து
வைரமுத்து

ஐ. நா. சபையில் தமிழையும், மான் கி பாத் நிகழ்ச்சியில் திருக்குறளையும் மேற்கோள் காட்டி பிரதமர் பேசுவதெல்லம் எங்களுக்கு மகிழ்ச்சி தான் .ஆனால், கல்யாண வீட்டில் சந்தனம் கொடுத்து வரவேற்றால் மட்டும் போதுமா? சாப்பாடு போடா வேண்டாமா? தமிழ் ஒரு தீ அதில் ஈ (இந்தி) உட்காராது" என்றார்.

அவர் பேச்சைத் தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் இந்தித் திணிப்பு கண்டனத்தையும், மத்திய அரசின் ஆட்சியைக் கண்டித்தும் உரையாற்றி இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்தனர்.