Published:Updated:

பெண்கள் மீது விழுந்த கற்கள்; உயிரிழந்த பயணி! - அச்சம் தரும் குற்றால அருவி நிலவரம்

பி.ஆண்டனிராஜ்

குற்றாலம் அருவிகளில் குளிக்க வெளியூர்களிலிருந்து வரக்கூடிய சுற்றுலாப் பயணிகள் கூடுதல் கவனத்துடன் இருக்குமாறு காவல்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

courtallam main falls
courtallam main falls

நெல்லை மாவட்டம், குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் அமோகமாக இருப்பது வழக்கம். இந்த ஆண்டு மிகவும் தாமதமாகவே சீசன் தொடங்கியது. கடந்த ஒரு மாதகாலமாக குளுமையான சூழல் நிலவுவதுடன் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. அத்துடன், இதமான சீதோஷ்ணநிலை நிலவுவதால் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.

courtallam
courtallam

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழையின் காரணமாக மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாகக் குளித்து மகிழ்கிறார்கள்.

ஐந்தருவியில் அனைத்துக் கிளைகளிலும் தண்ணீர் கொட்டியதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ந்தனர். இரவு நேரத்தில் கூட்டம் குறைவாக இருந்ததால் மகிழ்ச்சியுடன் குளித்துக்கொண்டிருந்த சமயத்தில் தண்ணீருடன் சிறிய கற்கள் விழுந்தன. அதில் மூன்று பெண்களுக்கு தலையில் காயம் ஏற்பட்டதால் இரவு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. காலையில் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

மூச்சுத் திணறி உயிரிழந்த பயணி
மூச்சுத் திணறி உயிரிழந்த பயணி

இதனால் மெயின் அருவியில் ஆண்கள் பகுதியில் ஏராளமானோர் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது கும்பகோணத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார். அருவிகளில் அதிகமாக தண்ணீர் கொட்டும் நேரங்களில் கூடுதல் கவனத்துடன் குளிக்குமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.