Published:Updated:

சிகரெட்டால் சூடுவைத்து கொடுமைப்படுத்தப்பட்ட குழந்தை; இரண்டாவது கணவருடன் கைதான தாய்! - என்ன நடந்தது?

கைது

சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் இரண்டாவது கணவனுடன் ஒன்றாக மது அருந்திவிட்டு தன் குழந்தையை அடித்து, சிகரெட்டால் சூடுவைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சிகரெட்டால் சூடுவைத்து கொடுமைப்படுத்தப்பட்ட குழந்தை; இரண்டாவது கணவருடன் கைதான தாய்! - என்ன நடந்தது?

சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் இரண்டாவது கணவனுடன் ஒன்றாக மது அருந்திவிட்டு தன் குழந்தையை அடித்து, சிகரெட்டால் சூடுவைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
கைது

சென்னை, அடையாறு சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் பானு. இவருக்கும் விமல்ராஜ் என்பவருக்கும் திருமணமாகி ஒரு பெண் குழந்தை பிறந்தது. கடந்தாண்டு இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். இந்த நிலையில், பானுவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஜெகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்டவர்கள்
கைதுசெய்யப்பட்டவர்கள்

இதனைத் தொடர்ந்து, இருவரும் திருமணம் செய்துகொண்டு ஜெகன் வீட்டில் ஒன்றாக வாழ்ந்துவந்ததாகக் கூறப்படுகிறது. இரண்டரை வயது குழந்தையையும் பானு தன்னுடன் வைத்து வளர்த்துவந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக குழந்தைக்கு உடல்நலம் சரியில்லை என்று பானு தன் தாய் கன்னியம்மாவுக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஜெகனின் வீட்டுக்குச் சென்ற பானுவின் தாயார் குழந்தையை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

குழந்தையின் முகம், கண், கை, கால் போன்ற பல பகுதிகளில் சிகரெட்டால் சூடு வைக்கப்பட்டிருந்தது. மேலும், குழந்தையின் முதுகில் சிராய்ப்புகள் இருந்துள்ளன. கன்னியம்மா உடனடியாக குழந்தையை சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தையின் உடலில் இருந்த காயங்கள் குறித்து சாஸ்திரி நகர் பகுதி காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

குழந்தை
குழந்தை

இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் ஜெகன், பானுவிடம் நடத்திய விசாரணையில், இவர்கள் இருவருக்கும் ஒன்றாக சேர்ந்து மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. அப்போது, முதல் கணவருக்கு பிறந்த குழந்தையை அடித்தும், சிகரெட்டால் சூடு வைத்ததும் தெரியவந்தது. தொடர்ந்து, இவர்கள் இருவரும் அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். போலீஸார் இவர்கள் மேல் வழக்கு பதிவுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பெற்ற தாயே தன் குழந்தைக்கு சூடு வைத்து சித்ரவதை செய்ய உடந்தையாக இருந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.