Published:Updated:

17 ஆண்டுகள் தலைமறைவு; ஒரு ஊருக்கு ஒரு வேலை - கொலை வழக்கில் சமையல் மாஸ்டர் சிக்கியது எப்படி?!

கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ராஜன்

கொலை வழக்கில் ஜாமீனில் வெளியில் வந்த சமையல் மாஸ்டர், கடந்த 17 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். அவரை நீலாங்கரை போலீஸார் நீண்ட தேடுதல் வேட்டைக்குப்பிறகு கைதுசெய்துள்ளனர்.

17 ஆண்டுகள் தலைமறைவு; ஒரு ஊருக்கு ஒரு வேலை - கொலை வழக்கில் சமையல் மாஸ்டர் சிக்கியது எப்படி?!

கொலை வழக்கில் ஜாமீனில் வெளியில் வந்த சமையல் மாஸ்டர், கடந்த 17 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். அவரை நீலாங்கரை போலீஸார் நீண்ட தேடுதல் வேட்டைக்குப்பிறகு கைதுசெய்துள்ளனர்.

Published:Updated:
கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ராஜன்

நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம் கடற்கரையில் கடந்த 2001-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெட்டுக்காயங்களுடன் ஆண் சடலம் கிடப்பதாக நீலாங்கரை காவல் நிலையத்துக்குத் தகவல் கிடைத்தது. சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார், அவர் யார் என்று விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்தவர் கூடுவாஞ்சேரியைச் சேர்ந்தவர் ஷாஜகான் எனத் தெரியவந்தது. மேலும் இவர் தனியார் நிறுவனத்தில் கார் டிரைவராக வேலைப்பார்த்து வந்ததும் தெரிந்தது. சம்பவத்தன்று ஷாஜகானின் காரை வாடகைக்கு ஒரு கும்பல் எடுத்ததை போலீஸார் கண்டுபிடித்தனர். அதன்பிறகுதான் ஷாஜகான் உயிரிழந்தது தெரியவந்தது. பிரேத பரிசோதனை அறிக்கையில் ஷாஜகான், கொலைசெய்யப்பட்டது தெரியவந்தது. அதனால் நீலாங்கரை போலீஸார் கொலை வழக்கு பதிவுசெய்து கொலையாளிகளைத் தேடிவந்தனர்.

கொலை
கொலை

இந்த நிலையில் கடந்த 21.12.2001-ம் தேதி கொலை வழக்கில் தொடர்புடைய குள்ள ராஜன், உருளை ராஜன் உட்பட 7 பேரை போலீஸார் கைதுசெய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், ஷாஜகானைக் கொலைசெய்துவிட்டு காரையும் அந்தக் கும்பல் திருடிக் கொண்டு சென்றது தெரியவந்தது. இந்தக் கொலை வழக்கில் கைதான திருப்பூர் மாவட்டம், அவினாசி தாலுகாவைச் சேர்ந்த ராஜன் என்கிற பூவைராஜன் என்கிற குள்ள ராஜன் (47) அவரின் கூட்டாளியான சென்னையைச் சேர்ந்த உருளை ராஜன் ஆகியோர் ஜாமீனில் வெளியில் வந்தனர். பின்னர் அவர்கள் இருவரும் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகினர். அதனால் கடந்த 2005-ம் ஆண்டு ஆலந்தூர் நீதிமன்றம் இருவருக்கும் பிடிவாரன்ட் பிறப்பித்தது. இதில் உருளை ராஜனை போலீஸார் 2021-ம் ஆண்டு கைதுசெய்து சிறையில் அடைத்தனர். ஆனால் குள்ள ராஜன் மட்டும் 17 ஆண்டுகளாக தலைமறைவாகவே இருந்துவந்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

குள்ளராஜனைப் பிடிக்க காவல்துறை உயரதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜஸ்டின் தலைமையில் போலீஸார் குள்ளராஜனை தேடி வந்தனர். போலீஸாரின் தீவிர தேடுதல் வேட்டையில் குள்ளராஜன், திருப்பூரில் குடும்பத்தினருடன் வசிப்பது தெரியவந்தது. அதனால் குள்ளராஜனைப் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீஸார் சிறையில் அடைத்தனர். குள்ள ராஜன்மீது குரோம்பேட்டை, கூடுவாஞ்சேரி, படாளம் காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கைது
கைது

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``ஷாஜகான் கொலை வழக்கில் 17 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குள்ளராஜன், சமையல் மாஸ்டர், டிரைவர், டெய்லர் உள்ளிட்ட வேலைகளைச் ஒவ்வொரு ஊரிலும் தங்கி செய்து வந்துள்ளார். அடிக்கடி இருப்பிடத்தை மாற்றியதால் அவரைக் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இந்த நிலையில் குள்ளராஜனின் மனைவி டெய்லர். அதனால் பிழைப்புத் தேடி குடும்பத்தினருடன் குள்ளராஜன், திருச்சியிலிருந்து திருப்பூருக்கு சென்றுள்ளார். அங்கு மனைவியுடன் சேர்ந்து குள்ளராஜன் டெய்லர் வேலைப்பார்த்து வந்துள்ளார். குள்ளராஜன் பதுங்கியிருக்கும் இடம் குறித்து தகவல் கிடைத்ததும் அவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளோம்" என்றனர்.