Published:Updated:

சென்னை: முதல்வர் குறித்து அவதூறு போஸ்டர்! - பாஜக நிர்வாகியின் உதவியாளர் கைது

பி.ஜே.பி நிர்வாகியின் உதவியாளர் கிருஷ்ணகுமார் முருகன்

முதல்வர் குறித்து அவதூறாக போஸ்டர் ஒட்டிய பாஜக நிர்வாகியின் உதவியாளரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை: முதல்வர் குறித்து அவதூறு போஸ்டர்! - பாஜக நிர்வாகியின் உதவியாளர் கைது

முதல்வர் குறித்து அவதூறாக போஸ்டர் ஒட்டிய பாஜக நிர்வாகியின் உதவியாளரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

Published:Updated:
பி.ஜே.பி நிர்வாகியின் உதவியாளர் கிருஷ்ணகுமார் முருகன்

சென்னையில் பல்வேறு பகுதிகளில் தமிழக முதல்வரை அவதூறாக சித்தரிக்கும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இதுகுறித்து சென்னை மாநகராட்சி மண்டலம் ஐந்தின் உதவி பொறியாளர் ராஜ்குமார், சுவரொட்டிகளை ஓட்டிய பிலிப்ராஜிடம் விளக்கம் கேட்டார். மேலும் இதுபோன்ற சுவரொட்டிகளை இனிமேல் ஒட்டக்கூடாது என்றும் எச்சரித்தார். அதன்பிறகும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதால், எஸ்பிளேனேடு காவல் நிலையத்தில் ராஜ்குமார் புகார் அளித்தார். சுவரொட்டி தொடர்பாக துறைமுகம் திமுக கிழக்குப் பகுதி செயலாளர் ராஜசேகரும் புகாரளித்தார். இதையடுத்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கிருஷ்ணகுமார் முருகன்
கிருஷ்ணகுமார் முருகன்

இதையடுத்து போஸ்டர் ஒட்டியதாக வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பிலிப்ராஜ் என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் விசாரித்தபோது, போஸ்டர் ஒட்டும் வேலையை பிலிப்ராஜ் செய்து வருகிறார். இவர் மீது கடந்த 2000-ம் ஆண்டில் கொலை வழக்கு உள்ளது. இவரிடமிருந்து ஆயிரக்கணக்கான போஸ்டர்கள் மற்றும் இருசக்கர வாகனம் செல்போன்கள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போஸ்டர்களை ஓட்டச் சொன்னது யாரென்று போலீஸர் விசாரணை நடத்தினர். பின்னர் பிலிப்ராஜ் அளித்த தகவலின்படி இந்து ஜனநாயக முன்னணியின் சென்னை மாநகரச் செயலாளர் சத்தியநாதனை போலீஸார் கைது செய்தனர். இவர் மீது இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதையடுத்து சத்தியநாதன் அளித்த தகவலின்படி பறையர் பேரியக்க தலைவர் சிவகுருநாதன் கைது செய்யப்பட்டார். இவர் மீதும் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்தான், அவதூறு போஸ்டரை சிவகாசியில் அச்சடித்தது தெரியவந்டதுள்ளது. தொடர்ந்து நடந்த விசாரணையில் பி.ஜே.பி நிர்வாகியின் உதவியாளராக இருக்கும் கிருஷ்ணகுமார் முருகனுக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர், அடையாறு பகுதியில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.