Published:Updated:

சட்டத்தை மீறி நடக்கும் ’ஆட்டுச் சண்டை’ சூதாட்டம்! - 6 பேரைக் கைது செய்த போலீஸ்!

சண்டைக்குத் தயாராக இருக்கும் ஆடு

ஆட்டுச் சண்டை மூலமாக வெற்றி பெறும் ஆட்டை வளர்ப்பவருக்கு பணப்பரிசு வழங்கப்படுகிறது. இந்த ஆட்டுச் சண்டையைப் பார்க்க பெரும் கூட்டம் கூடுகிறது.

சட்டத்தை மீறி நடக்கும் ’ஆட்டுச் சண்டை’ சூதாட்டம்! - 6 பேரைக் கைது செய்த போலீஸ்!

ஆட்டுச் சண்டை மூலமாக வெற்றி பெறும் ஆட்டை வளர்ப்பவருக்கு பணப்பரிசு வழங்கப்படுகிறது. இந்த ஆட்டுச் சண்டையைப் பார்க்க பெரும் கூட்டம் கூடுகிறது.

Published:Updated:
சண்டைக்குத் தயாராக இருக்கும் ஆடு

காவல்துறையின அனுமதியின்றி சில இடங்களில் சேவல் சண்டை நடத்தப்படுவது பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். அதேபோல, தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் ஆடுகளை மோதவிடும் ஆட்டுச் சண்டை பிரபலமாகி வருகிறது.

இதற்கென செம்மறி ஆடுகள் வளர்க்கப்படுகின்றன. ஆட்டுச் சண்டைக்காக வளர்க்கப்படும் ஆடுகளை வெளியாட்களுடன் பழக விடுவதில்லை. மிகவும் ஆக்ரோஷமாக இருக்கும் வகையில் எப்போதும் கட்டி வைக்கப்பட்டு அவை வளர்க்கப்படுவதாக இந்தப் போட்டியில் பங்கெடுத்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் காவல்துறைக்குத் தெரியாத வகையில் ஏதாவதொரு காட்டுப் பகுதியில் இந்தப் போட்டியை நடத்துகிறார்கள். இதுபற்றி போட்டியாளர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படுகிறது.

ஆட்டுச் சண்டையில் ஈடுபட்ட ஆடு
ஆட்டுச் சண்டையில் ஈடுபட்ட ஆடு

அதனால் போட்டியில் பங்கேற்கும் ஆடுகள் மற்றும் தங்களின் ஆதரவாளர்களுடன் போட்டியாளர்கள் காடுகளில் கூடிவிடுகிறார்கள். இரு ஆடுகளுக்கு இடையே போட்டி நடத்தப்படுகிறது. செம்மறி ஆடுகள் ஒன்றை எதிர்த்து மற்றொரு ஆடு தலையால் முட்டுகிறது. மீண்டும் மீண்டும் முட்டி ஆக்ரோஷமாக சண்டையிட்ட நிலையில், எந்த ஆடு பயந்து ஓடுகிறதோ அது தோல்வி அடைந்ததாகக் கருதப்படுகிறது.

வெற்றி பெற்ற ஆட்டை வளர்த்தவருக்கு ஏற்கெனவே பேசிக் கொண்டபடி ஆயிரக்கணக்கிலான பணம் கைமாறுகிறது. இதனிடையே, அந்த இடத்தில் வைத்து இவரது ஆடு வெற்றிபெறும் என்பதை முன்கூட்டியே கணிப்பது தொடர்பான சூதாட்டமும் நடக்கிறது. அதில் வெற்றி பெறும் பார்வையாளர்களுக்கும் ரொக்கப் பணம் பரிசாகக் கிடைக்கிறது.

ஆட்டுச் சண்டை நடக்கும் இடம்
ஆட்டுச் சண்டை நடக்கும் இடம்

அதனால் கடையநல்லூர் பகுதியில் நடக்கும் ஆட்டுச் சண்டையில் பங்கேற்க ஆடு வளர்ப்பவர்கள் மட்டுமல்லாமல் பார்வையாளர்களும் கூடுகிறார்கள். சில சமயங்களில் போட்டியாளர்களுக்கு இடையே நடக்கும் வாக்குவாதம் கைகலப்பாக மாறிவிடும் சம்பவங்களும் நடக்கின்றன. ஆனாலும் இது பற்றி யாரும் புகார் தெரிவிப்பதில்லை.

கடையநல்லூர் பகுதியில் நடக்கும் ஆட்டுச் சண்டை குறித்த தகவல் அறிந்த தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரான கிருஷ்ணராஜ், இந்தப் போட்டிகள் நடத்தப்படுவதைத் தடுக்குமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டார்.

கடையநல்லூர் காவல் நிலையம்
கடையநல்லூர் காவல் நிலையம்

அதன்படி கடையநல்லூர் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது காட்டுப் பகுதியில் ஆட்டுச் சண்டை சூதாட்டம் நடத்திய சதாம் உசேன், முகமது தாபீத், அப்துல் காதர், சேக்முகமது அலி, ரிஷிகான், முகமது அஸ்கர் ஆகிய 6 பேரை கைது செய்ததுடன் அவர்களிடம் இருந்து இரு ஆடுகளையும் பறிமுதல் செய்தனர்.