Election bannerElection banner
Published:Updated:

மலை உச்சிக்குச்சென்ற மகா தீபக் கொப்பரை! - போலீஸ் கட்டுப்பாட்டில் திருவண்ணாமலை

மலை உச்சிக்கு தூக்கிச்செல்லப்படும் மகா தீபக் கொப்பரை
மலை உச்சிக்கு தூக்கிச்செல்லப்படும் மகா தீபக் கொப்பரை

திருவண்ணாமலை நகருக்குள் இன்று முதல் மூன்று நாள்களுக்கு வெளியூர் வாகனங்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், தீப விழாவின் பத்தாம் நாள் விழாவையொட்டி, பிரசித்திபெற்ற மகாதீபப் பெருவிழா நாளை நடக்கிறது. நாளை அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியின்மீது மகா தீபமும் ஏற்றப்படுகிறது. இதையொட்டி, தீபம் ஏற்றுவதற்கான மகா தீபக் கொப்பரை இன்று காலை மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மகா தீபக் கொப்பரை
மகா தீபக் கொப்பரை

தீபம் ஏற்றுவதற்காக 3,500 கிலோ நெய்யும், காடா துணிகளும் தயார் நிலையில் இருக்கிறது. அய்யங்குளத்தில் பாரம்பரியமாக நடக்கும் தெப்பல் திருவிழா, இந்த முறை கோயில் பிரகாரத்தில் உள்ள பிரம்ம தீர்த்தக் குளத்தில் நடக்கிறது. கொரோனா தொற்றுக் காரணமாக, கோயிலுக்குள் செல்ல பக்தர்களுக்கு அனுமதியில்லை.

தொடங்கியது திருவண்ணாமலை தீபத் திருவிழா... அதிகாலையில் நடந்த கொடியேற்றம்!

அதேபோல், வெளியூர் பக்தர்கள் திருவண்ணாமலை நகருக்குள் நுழைய அனுமதி கிடையாது. பரணி தீபத்தையும், மகா தீபத்தையும் பக்தர்கள் வீட்டிலிருந்தபடியே தரிசனம் செய்ய டி.வி, யூ-டியூப், கோயில் இணையதளம், அரசு கேபிள் மற்றும் உள்ளூர் சேனல்கள் மூலமாக நேரடி ஒளிபரப்பு செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மலை உச்சிக்கு தூக்கிச்செல்லப்படும் மகா தீபக் கொப்பரை
மலை உச்சிக்கு தூக்கிச்செல்லப்படும் மகா தீபக் கொப்பரை

அதேபோல், நாளை மற்றும் 30-ம் தேதியன்று பௌர்ணமி கிரிவலம் செல்லவும், மலை ஏறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் திங்கள்கிழமை வரை தொடர்ந்து 3 நாள்களுக்கு சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படவில்லை. இந்த மூன்று நாள்களிலும், வெளியூர் வாகனங்கள் திருவண்ணாமலை நகருக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், கண்காணிப்புப் பணிக்காக 15 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணியில் 2,700 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு