Published:Updated:

வழிவிடுவதில் மோதல்; வணிகர் சங்கத் தலைவர்மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு - என்ன நடந்தது?

கடையடைப்பு போராட்டம் நடத்திய வணிகர்கள்

பள்ளி மாணவர்களை சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதாக மூன்று வணிகர்கள்மீது போலீஸார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.

வழிவிடுவதில் மோதல்; வணிகர் சங்கத் தலைவர்மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு - என்ன நடந்தது?

பள்ளி மாணவர்களை சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதாக மூன்று வணிகர்கள்மீது போலீஸார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.

Published:Updated:
கடையடைப்பு போராட்டம் நடத்திய வணிகர்கள்

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே இருக்கிறது பெரியமணலி. இந்தப் பகுதியைச் சேர்ந்த தங்கமணி என்பவர் ஹோலாபிரிக்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகிறார். தோடு, பெரியமணலி பகுதி வணிகர் சங்கத் தலைவராகவும் இவர் பொறுப்பு வகித்து வருகிறார். இவர், சில தினங்களுக்கு முன்பு காரில் சென்றபோது, குறுகலான சாலை வழியாகப் பயணித்திருக்கிறார். எதிரே வந்த தனியார் பள்ளி வாகனம் ஒன்றுக்கு வழிவிடுவது தொடர்பாக, வேன் டிரைவருக்கும், தங்கமணிக்கும் தகராறு ஏற்பட்டிருக்கிறது.

வணிகர்களிடம் பேசும் காவல்துறை
வணிகர்களிடம் பேசும் காவல்துறை

அப்போது அந்த வழியாக பழக்காரன்காடு பகுதியைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இருவர் வந்திருக்கின்றனர். அவர்கள் தங்கமணியிடம், ``காரை பின்னே நகர்த்துங்க. நாங்க போகணும்" என்று கூறியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், தங்கமணி காரை நகர்த்தாமல் இருந்ததாகவும், அதனால் தங்கமணிக்கும், அந்த இரு மாணவர்களுக்கும் இடையில் பிரச்னை ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. பிரச்னை பெரிதாக, இருதரப்பும் ஒருவரை ஒருவர் தாக்கிகொண்டதாகவும் சொல்கிறார்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இப்படி, பரஸ்பரம் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதில், தங்கமணி, அவர் மகன் பூபாலன், அவர் நண்பர் சேகர் மற்றும் எதிர்தரப்பை சேர்ந்த மாணவர்கள் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. காயமடைந்தவர்கள் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், இரு தரப்பைச் சேர்ந்தவர்கள் கொடுத்த புகாரின்பேரில் எலச்சிபாளையம் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவுசெய்து, இந்த மோதல் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில், அந்த மாணவர்களை சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதாக தங்கமணி, அவர் மகன் பூபாலன், நண்பர் சேகர் ஆகியோர்மீது எலச்சிப்பாளையம் காவல் நிலைய போலீஸார் வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

கடையடைப்பு போராட்டம் நடத்திய வணிகர்கள்
கடையடைப்பு போராட்டம் நடத்திய வணிகர்கள்

இந்த நிலையில், தங்கமணிமீது பொய்வழக்கு போட்டிருப்பதாகக் கூறி, அனைத்து வணிகர் சங்கத்தைச் சேர்ந்தவர்களும் கடைகளை அடைத்து போராட்டத்தில் குதித்தனர். அதோடு, நூற்றுக்கும் மேற்பட்ட விசைத்தறி உரிமையாளர்களும் நேற்று மாலை வரை ஒருநாள் அடையாள கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அசம்பாவிதம் நடந்துவிடக்கூடாது என்பதால், பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில், மாணவர்கள்மீது சாதிய வன்மத்தை வெளிப்படுத்திய தங்கமணி உள்ளிட்ட மூன்று பேர்மீது கடுமையாக நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி, ஆதிதமிழர் பேரவை உள்ளிட்ட சில அமைப்புகள் இன்று ஆர்பாட்டம் நடத்த இருப்பதாக அறிவித்திருக்கின்றன.