Published:Updated:

குமரி: காவல் நிலையத்தில் காவடி கட்ட அனுமதி மறுத்த அதிகாரிகள் - போராட்டத்துக்குப் பிறகு அனுமதி!

கடந்த ஆண்டு தக்கலை காவல் நிலையத்தில் நடந்த காவடிக் கட்டு
News
கடந்த ஆண்டு தக்கலை காவல் நிலையத்தில் நடந்த காவடிக் கட்டு

பக்தர்கள் எடுத்துவரும் காவடிகளை, தக்கலை காவல் நிலையம் முன்பு வைக்கப்போவதாகவும், காவல் நிலையத்தில் வைத்து காவடிகட்டி எடுத்துச் சென்ற பிறகுதான் அனைத்துக் காவடிகளையும் கோயிலுக்கு எடுத்துச்செல்வோம் எனவும் இந்து அமைப்பினர் அறிவித்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்தபோது ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையன்று, குற்றங்கள் குறைந்து மக்கள் அமைதியாக வாழவும், நீர்வளம் செழித்து விவசாயம் தழைத்தோங்கவும் தக்கலை காவல் நிலையம் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் வைத்து காவடி கட்டி பவனியாக வேளிமலை குமாரசுவாமி கோயிலுக்குக் கொண்டு செல்வது வழக்கம். இதற்காக காவல்துறையினரும், பொதுப்பணித்துறையினரும் விரதமிருந்து காவடி கட்டி எடுத்துச் செல்வது ஆண்டுதோறும் நடந்துவரும் வழக்கம். திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் தொடங்கிய இந்தப் பாரம்பர்யம், சுதந்திரத்துக்குப் பிறகும், மொழிவாரியாக கன்னியாகுமரி மாவட்டம் தாய்த் தமிழகத்துடன் இணைந்த பிறகும் தொடர்ந்து நடந்துவருகிறது. காவல்துறையினர், பொதுப்பணித்துறையினர் மட்டுமல்லாமல் குமரி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களிலிருந்தும் பக்தர்கள் காவடி கட்டி வேளிமலை குமாரசுவாமி கோயிலுக்குச் செல்வது வழக்கம். கடந்த ஆண்டும் தக்கலை காவல் நிலையத்திலிருந்து காவடி கட்டி குமாரசுவாமி கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

குமரி: காவல் நிலையத்தில் காவடி கட்ட அனுமதி மறுத்த அதிகாரிகள் - போராட்டத்துக்குப் பிறகு அனுமதி!

இந்த ஆண்டின் கார்த்திகைக் கடைசி வெள்ளியான இன்று தக்கலை காவல்துறை அதிகாரிகள் காவல் நிலையத்திலிருந்தும், பொதுப்பணி துறை அதிகாரிகளும் ஊழியர்களும் தக்கலை பொதுப்பணித்துறை அலுவலகத்திலிருந்தும் காவடி எடுத்துச் சென்று நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வு நடைபெறவிருந்தது. அதற்காக நேற்று தக்கலை காவல் நிலையத்தில் பூஜைகளுக்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்றுவந்தன. இந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத், தக்கலை காவல் நிலையத்திலிருந்து போலீஸார் காவடி எடுத்துச் செல்லும் பாரம்பர்ய நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்ததாகத் தகவல் வெளியானது.

இந்தத் தகவலறிந்த பக்தர்கள் மற்றும் இந்து அமைப்பினர் இன்று அதிகாலையில் தக்கலை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு பாரம்பர்ய காவடிக் கட்டு நிகழ்வுக்கு அனுமதி வழங்கக் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸ் அதிகாரிகள் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து இந்து முன்னணி கோட்டத் தலைவர் மிசா சோமன், மாவட்டப் பஞ்சாயத்துத் துணைத் தலைவர் சிவகுமார், வழக்கறிஞர் வேல்தாஸ் ஆகியோர் கூறும்போது, "சப் கலெக்டர், நீதித்துறையில் உள்ளவர்கள் காவல் நிலையத்துக்கு வந்து காவடி பவனியை கோயிலுக்கு வழியனுப்பிவைப்பார்கள். குமாரசுவாமிக்கு போலீஸ் காவடியை அபிஷேகம் செய்த பிறகு வரும் வேறு காவடி அபிஷேம் செய்ய மாட்டார்கள். அதுபோல கோட்டாறு சவேரியார் ஆலயத்தில் நடக்கும் முதல் நாள் திருவிழா கோட்டாறு காவல் நிலையத்திலிருந்து நடத்தப்படுவது வழக்கம். எனவே பாரம்பர்யத்தை மாற்றக் கூடாது" என்றனர்.

தக்கலை காவல் நிலைநிலையம் முன்பு குவிந்துள்ளவர்கள்
தக்கலை காவல் நிலைநிலையம் முன்பு குவிந்துள்ளவர்கள்

அதேசமயம் போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, "காவல் நிலையத்தில் காவடி கட்ட முடியாது. விருப்பப்படும் காவலர்கள் விடுப்பு எடுத்து தங்கள் வீடுகளிலிருந்து காவடி கட்டி கோயிலுக்குக் கொண்டு செல்லலாம்" எனத் தெரிவித்துள்ளனர். இதனால் பக்தர்களும், இந்து அமைப்பினரும் போராட்டம் நடத்தினர். மேலும் கிராமங்களிலிருந்து பக்தர்கள் எடுத்துவரும் காவடிகளை தக்கலை காவல் நிலையம் முன்பு வைக்கப்போவதாகவும், காவல் நிலையத்தில் வைத்து காவடிகட்டி எடுத்துச் சென்ற பிறகுதான் அனைத்துக் காவடிகளையும் குமாரசுவாமி கோயிலுக்கு எடுத்துச்செல்வோம் எனவும் இந்து அமைப்பினர் அறிவித்தனர். .

இதற்கிடையே பொன்.ராதாகிருஷ்ணன் காவல் நிலையத்தில் வந்து அமர்ந்து போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்ததைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் காவடி கட்ட அனுமதி அளிக்கப்பட்டது. இந்த விவகாரம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.