Published:Updated:

வீரருக்கு கொரோனா... தீயணைப்பு நிலையம் மூடல்... தேடப்படும் நண்பர்கள்!- பெரம்பலூர் அதிர்ச்சி

பெரம்பலூர் காவல் நிலையம்
பெரம்பலூர் காவல் நிலையம்

தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் அவருடன் பணிபுரிந்த 18 வீரர்களையும் சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தியுள்ளனர். அவர்களின் ரத்த மாதிரிகளும் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

தீயணைப்பு வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவருடன் பணியாற்றிவர்கள் மற்றும் பழகிய நண்பர்களையும் அதிகாரிகள் தேடிவரும் சம்பவம் பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, அவர் வசித்துவந்த பகுதியைப் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளனர் போலீஸார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருவதால், அதைத் தடுக்கும் நடவடிக்கையாக பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மக்கள் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் கலெக்டர் ஆபீஸ்
பெரம்பலூர் கலெக்டர் ஆபீஸ்

இந்த நிலையில், பெரம்பலூர் தீயணைப்பு வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அவர், ஏற்கெனவே பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்புப் பணியில் ஈடுபட்டுவந்தார். மேலும் அவர், கடந்த சில நாள்களுக்கு முன்பு கரூரில் ஏற்பட்ட தீ விபத்தில் தீயை அணைப்பதற்குச் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரம்பலூர்  போலீஸார்
பெரம்பலூர் போலீஸார்

அந்த தீயணைப்பு வீரருடன் பணிபுரிந்த சக வீரர்களையும், அவர்கள் வசிக்கும் பகுதிகளில் தனிமைப்படுத்தி, அவர்களின் ரத்த மாதிரிகளைப் பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர். பெரம்பலூர் தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் அவருடன் பணிபுரிந்த 18 வீரர்களையும் சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தியுள்ளனர். அவர்களின் சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.

இதனால் பெரம்பலூர் தீயணைப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. தொடர்ந்து 5 நாள்களுக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நிலையத்திலும், அங்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ள தீயணைப்பு வாகனங்களிலும் நகராட்சி தூய்மைப்பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்தனர். தீயணைப்பு நிலையம் முன்பு தடுப்புகள் அமைத்து, தடை செய்யப்பட்ட பகுதி என்ற பதாகையை நகராட்சியினர் ஒட்டியுள்ளனர்.

பெரம்பலூர்
பெரம்பலூர்

இதுகுறித்து போலீஸார் தரப்பில் பேசினோம். ”தீயணைப்புத் துறையில் வேலைபார்த்துவரும் இவர், துறைமங்கலம் பகுதியில் வசித்துவருகிறார். கடுமையான தொண்டை வலி காரணமாக மருத்துவர்களிடம் சென்றிருக்கிறார். அவரது ரத்த மாதிரிகளைப் பரிசோதனை செய்த பிறகு உறுதியானது. அவர் வசித்துவந்த பகுதிகளை 5 கி.மீ பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவந்திருக்கிறோம். அதோடு, அவரது குடும்பம் மற்றும் உறவினர்களையும் தனிமைப்படுத்தி வைத்திருக்கிறோம். இவர் எங்கெல்லாம் சென்றார், யாரோடு பழகினார் என்றெல்லாம் விசாரித்து அவர்களையும் தனிமைப்படுத்த இருக்கிறோம். இது வரை இம்மாவட்டத்தில் ஆறு பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு