Published:Updated:

தேனியில் பள்ளி மாணவிகளுக்குப் பேருந்தில் போலீஸ் பாதுகாப்பு - நடந்தது என்ன?!

பள்ளி மாணவிகள் ( பைல் படம் )

டொம்புச்சேரி முதல் பெருமாள்கவுண்டன்பட்டி வரை பழனிசெட்டிபட்டி போலீஸார் ஒருவர் வாக்கி டாக்கியுடனும், பெருமாள்கவுண்டன்பட்டி முதல் போடி வரை போடி தாலுகா போலீஸார் ஒருவர் வாக்கி டாக்கியுடனும் பேருந்தில் மாணவர்களைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேனியில் பள்ளி மாணவிகளுக்குப் பேருந்தில் போலீஸ் பாதுகாப்பு - நடந்தது என்ன?!

டொம்புச்சேரி முதல் பெருமாள்கவுண்டன்பட்டி வரை பழனிசெட்டிபட்டி போலீஸார் ஒருவர் வாக்கி டாக்கியுடனும், பெருமாள்கவுண்டன்பட்டி முதல் போடி வரை போடி தாலுகா போலீஸார் ஒருவர் வாக்கி டாக்கியுடனும் பேருந்தில் மாணவர்களைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Published:Updated:
பள்ளி மாணவிகள் ( பைல் படம் )

தேனி மாவட்டம், போடி அருகே டொம்புச்சேரி பட்டாளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பட்டியலின மாணவ, மாணவிகள் 20 பேர் போடியிலுள்ள பள்ளியில் படித்துவருகின்றனர். இவர்கள் சின்னமனூரிலிருந்து குச்சனூர், உப்புக்கோட்டை, டொம்புசேரி, பெருமாள்கவுண்டன்பட்டி வழியாக போடிக்குச் செல்லும் அரசுப் பேருந்தில் பள்ளிக்குச் சென்றுவருகின்றனர். 

தேனி கலெக்டர் அலுவலகம்
தேனி கலெக்டர் அலுவலகம்

டொம்புசேரியிலிருந்து காலை 7:30 மணிக்கு அரசுப் பேருந்தில் ஏறும் பட்டியலின மாணவ, மாணவிகளை சீட்டில் உட்காரக் கூடாது என பெருமாள்கவுண்டன்பட்டியில் ஏறும் பட்டியலினத்தவரின் மற்றொரு பிரிவு மாணவர்கள் பிரச்னை செய்துள்ளனர். இதனால் இரு தரப்பு பெற்றோர்களுக்கும் பிரச்னை எழுந்துள்ளது. 

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதற்கிடையே டொம்புச்சேரிப் பகுதி மாணவிகள் தேனி கலெக்டர் அலுவலகத்தில், பேருந்தில் எங்களை வரவிடாமல் செய்யவும், மீறி ஏறினால் சீட்டில் அமரவிடாமல் தடுக்கவும் பேப்பர்கள், சாக்பீஸ் கொண்டு எறிவது, ஆபாசமான வார்த்தைகளால் திட்டுவது, பாலியல்ரீதியான தொந்தரவு கொடுப்பது என அராஜகம் செய்கின்றனர் எனப் புகார் அளித்தனர். 

வாக்குவாதம்
வாக்குவாதம்

இதையடுத்து, போடி பங்கஜம் பள்ளியின் சி.இ.ஓ செந்தில்வேல்முருகன் தலைமையில் இரு தரப்பினரையும் அழைத்து அமைதிப் பேச்சுவார்த்தை நடந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பெருமாள்கவுண்டன்பட்டி தரப்பினர் பங்கேற்கவில்லை. இதனால் அசம்பாவிதம் ஏற்படாமலிருக்க பேருந்தில் செல்லும் மாணவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

டொம்புச்சேரி முதல் பெருமாள்கவுண்டன்பட்டி வரை பழனிசெட்டிபட்டி போலீஸார் ஒருவர் வாக்கி டாக்கியுடனும், பெருமாள்கவுண்டன்பட்டி முதல் போடி வரை போடி தாலுகா போலீஸார் ஒருவர் வாக்கி டாக்கியுடனும் பேருந்தில் மாணவர்கலாஈ பாதுகாப்பாக அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரச்னை
பிரச்னை

இது குறித்து டொம்புசேரி மாணவிகளிடம் பேசினோம். ``பேருந்தில் நடக்கும் பிரச்னை குறித்து ஆசிரியர்களிடம் தெரிவித்தோம். அவர்கள் வெளியே நடக்கும் பிரச்னைகளை பள்ளிக்குள் கொண்டு வராதீர்கள். வெளியே வைத்து பேசி தீர்த்துக்கொள்ளுங்கள் என்றனர். இதையடுத்துதான் கலெக்டரிம் புகார் மனு அளித்தோம். அமைதி பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது. அன்றைய தினமே பெருமாள்கவுண்டன்பட்டி தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டு பிரச்னை செய்தனர். பேருந்தில் போலீஸ் பாதுகாப்பு கொடுப்பது என்பது இதற்கான தீர்வாக அமையாது. இதற்கு நிரந்தர தீர்வு காண மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர். 

தேனி கலெக்டர் முரளீதரன்
தேனி கலெக்டர் முரளீதரன்

இது குறித்து தேனி மாவட்ட கலெக்டர் முரளீதரனிடம் கேட்டோம். ``சி.இ.ஓ-விடம் அறிக்கை கேட்டிருக்கிறேன். அந்த அறிக்கையின் அடிப்படையில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். இருதரப்பும் பட்டியல் இனத்தவர்கள் என்பதால் எளிதில் பிரச்னையைச் சரிசெய்துவிட முடியும்” என்றார்.