Published:Updated:

அதிகாரப் பொறுப்பில் இல்லாமல் அத்துமீறும் தி.மு.க?! - பொள்ளாச்சி அரசு விருந்தினர் மாளிகை சர்ச்சை

அரசு விருந்தினர் மாளிகையில் தி.மு.க நிர்வாகிகள்

கொரோனா தடுப்பூசி டோக்கன் விநியோகம் முதல் அரசுப் பணிகள் வரை தி.மு.க-வினர் அட்ராசிட்டி செய்வதாகப் புகார் எழுந்துள்ளது.

அதிகாரப் பொறுப்பில் இல்லாமல் அத்துமீறும் தி.மு.க?! - பொள்ளாச்சி அரசு விருந்தினர் மாளிகை சர்ச்சை

கொரோனா தடுப்பூசி டோக்கன் விநியோகம் முதல் அரசுப் பணிகள் வரை தி.மு.க-வினர் அட்ராசிட்டி செய்வதாகப் புகார் எழுந்துள்ளது.

Published:Updated:
அரசு விருந்தினர் மாளிகையில் தி.மு.க நிர்வாகிகள்

நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில், கோவை மாவட்டத்திலுள்ள 10 தொகுதிகளிலும் அ.தி.மு.க-தான் வென்றது. சில தொகுதிகளில் வெற்றியை நெருங்கி வந்தாலும், தி.மு.க ஒரு தொகுதியைக்கூட வெல்ல முடியவில்லை. கோவையில் தி.மு.க-வுக்கு மக்கள் பிரதிநிதிகள் இல்லாவிடினும், தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தில் தலையிடுவதாகப் பல புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன.

கோவை மாவட்ட இயற்கை எழில்
கோவை மாவட்ட இயற்கை எழில்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முக்கியமாக, அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு திட்டங்களைத் தொடங்கிவைப்பது, அரசு ஆய்வுக் கூட்டங்களில் அதிகாரிகள் அமைச்சருக்கு இணையாக அமர்ந்து ஆதிக்கம் செலுத்திவருவது எனப் புகார்கள் வரிசைகட்டி நிற்கின்றன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கொரோனா தடுப்பூசி டோக்கன் விநியோகம் முதல் அரசுப் பணிகள் வரை தி.மு.க-வினர் அட்ராசிட்டி செய்வதாக அ.தி.மு.க-வினரும் பொதுமக்களும் புகார் கூறிவருகின்றனர். இந்தநிலையில், பொள்ளாச்சி பொதுப்பணித்துறை அரசு விருந்தினர் மாளிகையை தி.மு.க-வினர் கட்சி அலுவலகமாகப் பயன்படுத்துவதாகப் புகார் எழுந்துள்ளது.

பொள்ளாச்சி அரசு விருந்தினர் மாளிகை
பொள்ளாச்சி அரசு விருந்தினர் மாளிகை

இது குறித்து பொள்ளாச்சி அ.தி.மு.க-வினரும் பொதுமக்களும் கூறுகையில், `கோவை புறநகர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக டாக்டர் வரதராஜன் சமீபத்தில் பதவியேற்றார். அதன் பிறகு சில வாரங்களிலேயே கட்சி சார்ந்த நடவடிக்கைகளுக்காக விருந்தினர் மாளிகையைப் பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவரது கட்சிப் பணிக்காக ஒரு பெண்ணையும் பணியமர்த்தியுள்ளனர். அங்கு எப்போதும் தி.மு.க கரைவேட்டியே தென்படுகிறது. ஆரம்பத்தில் வரதராஜன் அவரது இல்லத்தில்தான் தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்களைச் சந்தித்து வந்தார். தனிப்பட்டரீதியாக அவருக்கு அதில் அசௌகரியம் இருந்திருக்கிறது. உடனடியாக அரசு விருந்தினர் இல்லத்துக்கு வந்துவிட்டார்.

தி.மு.க கட்சிப் பணிக்காக...
தி.மு.க கட்சிப் பணிக்காக...

கட்சி சம்பந்தமான அனைத்து நடவடிக்கைகளும் இங்குதான் நடக்கின்றன. இத்தனைக்கும் பொள்ளாச்சி நகர தி.மு.க-வினருக்கு தனி அலுவலகம் உள்ளது. அப்படி இருக்கும்போது, அரசு இயந்திரத்தில் எந்தப் பொறுப்பிலும் இல்லாமல், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து அத்துமீறிவருகின்றனர்.

இந்த விஷயம் வெளியில் தீவிரமாகப் பேசப்பட்டவுடன், வரதராஜன் பொள்ளாச்சி எம்.பி சண்முகசுந்தரத்திடம் ஒரு கடிதத்தை வாங்கி, அதனடிப்படையில் எம்.பி அலுவலகம் சம்பந்தப்பட்ட பணிகளைச் செய்வதாகக் கூறுகிறார். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடருக்காக எம்.பி டெல்லி சென்றுவிட்டார். அவரே இல்லாமல் இங்கு என்ன பணி நடக்கும்?.

விருந்தினர் மாளிகையில் தி.மு.க-வினர்
விருந்தினர் மாளிகையில் தி.மு.க-வினர்

தவிர, எம்.பி சம்பந்தப்பட்ட பணியாக இருந்தால் பொதுமக்கள் வர வேண்டுமல்லவா..? அங்கு பொதுமக்கள் யாரும் வருவதில்லை. தி.மு.க கரைவேட்டிகள் மட்டுமே வந்து செல்கின்றனர். இது போன்ற அத்துமீறல்களுக்குத் தடைவிதிக்க வேண்டும்” என்றனர்.

வரதராஜன் செயல்பாடுகளில் அ.தி.மு.க-வினர் மட்டுமல்ல... தி.மு.க.-வினரும் அதிருப்தியில் உள்ளனர். ``சமீபத்தில் கருணாநிதி நினைவுநாளின்போது வரதராஜன் பொள்ளாச்சியிலேயே இல்லை. தனது ஆதரவாளர்களுடன் வால்பாறைக்குச் சென்றுவிட்டார். அங்கும் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி சுற்றிப் பார்த்து கறி விருந்து நடத்தியிருக்கிறார்கள். வரதராஜன் கலந்துகொண்ட கருணாநிதி நினைவுநாள் நிகழ்ச்சி அழைப்பிதழில், அவரது நினைவு நாள் ஆகஸ்ட் 7-க்கு பதிலாக ஜூலை 7 என்று அச்சிட்டிருந்தனர்.

பொள்ளாச்சி நகராட்சியில் தங்களுக்குத் தெரியாமல் எந்தப் பணியும் நடக்கக் கூடாது என அதிகாரிகளை தி.மு.க பிரமுகர்கள் மிரட்டியுள்ளனர். டாஸ்மாக் தொடங்கி அனைத்திலும் கல்லாகட்டுவதில்தான் குறியாக இருக்கின்றனர். இது தொடர்ந்தால் அடுத்த தேர்தலிலும் தி.மு.க வெற்றிபெற முடியாது” என்கின்றனர் சில உடன்பிறப்புகள்.

பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தண்டபாணி கூறுகையில், ``இவர்கள் ஆளுங்கட்சி. பொதுமக்களிடம் மனு வாங்க எம்.பி எங்களிடம் கோரிக்கை வைத்தார்” என்றவரிடம், ``அங்கு பொதுமக்கள் வருவதேயில்லை. தி.மு.க-வினர்தான் இருக்கின்றனரே...” எனக் கேட்டோம். ``எம்.பி அலுவலகத்தில் பணியாற்றுபவர்கள் இருக்கின்றனர்.

சண்முகசுந்தரம் எம்.பி
சண்முகசுந்தரம் எம்.பி

எம்.பி-யும் கட்சிக்கார்தானே..? அதனால், அலுவலகத்தில் இருப்பவர்களை வழிநடத்த கட்சிக்காரர்கள் வருகின்றனர். எம்.பி கேட்டதால் கொடுத்திருக்கிறோம். மூன்று நாள்களுக்கு ஒரு முறை எம்.பி-யிடம் வரும் கோரிக்கை அடிப்படையில் அதை நீட்டிப்பு செய்திருக்கிறோம்” என்றார்.

இது குறித்து கோவை புறநகர் தெற்கு தி.மு.க மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் வரதராஜனிடம் விளக்கம் கேட்டபோது, ``தனிப்பட்ட ரீதியாக என் பெயரிலோ, வேறு யாரின் பெயரிலோ பயன்படுத்தவில்லை.

டாக்டர் வரதராஜன்
டாக்டர் வரதராஜன்

எம்.பி பெயரில்தான் நாங்கள் பயன்படுத்திவருகிறோம். இந்த வாரத்துக்குள் அங்கிருந்து மாறிவிடுவோம்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism