Published:Updated:

``இந்த கலர் டிரஸ் எங்களுக்கு புடிச்சிருக்கு; ரொம்ப ஹேப்பி!" - நெகிழும் மனநல காப்பக பெண்கள்

மனநல மருத்துவமனை

மனநல காப்பகம் என்றாலே பச்சை நிற உடை என்ற பிம்பம் ஆழமாகப் பதிந்துவிட்டது. கேளிக்கை நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் என பல தளங்களிலும் மனநலக் காப்பகத்திலிருப்பவர்களுக்குப் பச்சைநிற உடை என்பதாகவே சித்திரிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.

``இந்த கலர் டிரஸ் எங்களுக்கு புடிச்சிருக்கு; ரொம்ப ஹேப்பி!" - நெகிழும் மனநல காப்பக பெண்கள்

மனநல காப்பகம் என்றாலே பச்சை நிற உடை என்ற பிம்பம் ஆழமாகப் பதிந்துவிட்டது. கேளிக்கை நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் என பல தளங்களிலும் மனநலக் காப்பகத்திலிருப்பவர்களுக்குப் பச்சைநிற உடை என்பதாகவே சித்திரிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.

Published:Updated:
மனநல மருத்துவமனை

``காப்பகத்திலிருக்கும் பெண்களுக்கு நைட்டிகள் தேவைப்படுகின்றன'' - இப்படியொரு கோரிக்கை, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்திலிருந்து, விகடன் குழுமத்தில் இயங்கிவரும் வாசன் அறக்கட்டளைக்கு சில நாள்களுக்கு முன்பு வந்தது.

இதைத் தொடர்ந்து விகடனின் விளம்பரப் பிரிவின் மூலமாக, நைட்டி தயாரிப்பு நிறுவனமான பொம்மீஸ் நிறுவனத்தைத் தொடர்புகொண்டோம். ``எத்தனை நைட்டிகள், என்னென்ன அளவுகள்?'' என்பது உள்ளிட்ட விவரங்களைக் கேட்டுக்கொண்ட பொம்மீஸ் நிறுவனம், அடுத்த சில நாள்களிலேயே நைட்டிகளைத் தயார் செய்துவிட்டது.

மனநலக் காப்பகத்தில் உள்ள பெண்கள்
மனநலக் காப்பகத்தில் உள்ள பெண்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பொம்மீஸ் நிறுவனத்தின் சார்பில் 300 நைட்டிகள் மனநலக் காப்பகத்துக்கு அனுப்பிவைக்கப்பட, கடந்த வாரத்தில் அவை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுவிட்டன.

இது தொடர்பாக மனநலக் காப்பகத்தின் இயக்குநர் மருத்துவர் பூர்ணசந்திரிகா பேசும்போது, ``கீழ்ப்பாக்கம் மனநலக் காப்பகத்தில் 900 பேர் சிகிச்சையில் இருக்கின்றனர். அவர்களில் 275 பேர் பெண்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மனநல காப்பகம் என்றாலே பச்சை நிற உடை என்ற பிம்பம் ஆழமாகப் பதிந்துவிட்டது. கேளிக்கை நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் என பல தளங்களிலும் மனநலக் காப்பகத்திலிருப்பவர்களுக்குப் பச்சைநிற உடை என்பதாகவே சித்திரிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். மனநல பிரச்னையிலிருப்பவர்களைக் கேலிப்பொருளாக்கிப் பேசுவதற்கும் இந்தப் பச்சைநிறத்தைப் பயன்படுத்துவதும் வாடிக்கையாகவே இருக்கிறது.

மனநல மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் 
பூர்ண சந்திரிகா
மனநல மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் பூர்ண சந்திரிகா

ஒருதடவை, காப்பகத்தில் சிகிச்சை பெற்றுவரும் ஒருவர், அவருடைய அப்பாவைப் பற்றி அடிக்கடி திட்டிக்கொண்டிருந்தார். நான் காரணம் கேட்டபோது, `அவரு என்னை இங்க கொண்டு வந்து சேர்த்து, பச்ச டிரெஸ் போட வெச்சிட்டாரு. அதான் அவரு மேல கோவம். திட்டிட்டு இருக்கேன்’ என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்போதுதான் சீருடையைத் தவிர்த்துவிட்டு, வண்ண ஆடைகளையே அனைவருக்கும் கொடுக்கலாம் என்ற எண்ணம் எனக்குள் வந்தது. வண்ணங்களாக இருக்கும்போது அவர்கள் மகிழ்கிறார்கள்.

2018-ம் ஆண்டில் Mental care act வந்த பிறகு, மனநலக் காப்பகத்தில் சிகிச்சையிலிருப்பவர்கள் வண்ண ஆடைகளை அணியலாம் என்ற விதிமுறையை இங்கே கொண்டு வர முடிந்தது.

நைட்டி
நைட்டி

பல வண்ண நிறங்களில் உடையணிவது பேருதவியாக இருக்கிறது. பணியாளர்கள், பிணியாளர்கள் என்ற வேற்றுமை இல்லாமல் ஒற்றுமை எண்ணம் தோன்ற வண்ண உடைகள் உறுதுணையாக இருக்கின்றன'' என்று மனநல சிகிச்சை பெறுவோரின் மீதான தன்னுடைய அக்கறையை வெளிப்படுத்திய இயக்குநர்,

``இப்போது, பெண் நோயாளிகளுக்கு வாசன் அறக்கட்டளை மூலமாக பல்வேறு வண்ணங்களில் 300 நைட்டிகள் கிடைக்கப் பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சிகரமான ஒன்று” என்றார்.

இயக்குநரிடம் பேசிவிட்டு வெளியில் வந்த நம்மை எதிர்கொண்ட காப்பகவாசிகளான இரண்டு பெண்கள், ``பச்சை டிரஸ் எங்களுக்கு புடிக்கல, கலர் டிரஸ்தான் பிடிச்சிருக்கு... ஹேப்பியா இருக்கு” என கையிலிருந்த நைட்டியை காட்டியவாறே கூறினார்கள்.

அரசு மனநல மருத்துவமனை, கீழ்ப்பாக்கம்
அரசு மனநல மருத்துவமனை, கீழ்ப்பாக்கம்
Photo: Vikatan

அவர்களை உற்சாகப்படுத்தியவராக நம்மிடம் பேசிய மருத்துவமனையில் பணியாற்றும் சமூக ஆர்வலர் சுமதி, ``முன்பெல்லாம் பழைய உடைகள்தான் நன்கொடையாக வரும். இப்போது, விகடன் மூலம் 300 புத்தம் புதிய நைட்டிகள் நன்கொடையாக வந்திருப்பது மகிழ்ச்சி. வாசன் அறக்கட்டளைக்கும் பொம்மீஸ் நிறுவனத்துக்கும் நன்றி” என்றார்.

நன்கொடை, அன்பளிப்பு என கொடுக்கவிரும்பினால், ஆதரவற்றோர் இல்லம், முதியோர் இல்லம் போன்றவைதான் நம்முடைய முதல் தேர்வாக இருக்கும். தேவையுள்ள இடங்களுக்கும் இனி உதவிக்கரங்களை நீட்டுவோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism